நவி மும்பை: இந்தியா - இங்கிலாந்து இடையிலான மகளிர் டெஸ்ட் போட்டியில் 347 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, இந்திய அணி அசத்தலான வெற்றியைப் பெற்றுள்ளது.
இந்தியா - இங்கிலாந்து மகளிர் அணிகளுக்கு இடையே ஒரே ஒரு டெஸ்ட் போட்டி கொண்ட தொடர் நவி மும்பையில் நடந்தது. டிசம்பர் 14ம் தேதி தொடங்கிய இந்த டெஸ்ட் போட்டி 3 நாட்களிலேயே முடிவுக்கு வந்துள்ளது. இதற்குக் காரணம் இந்திய அணி பேட்டிங் மற்றும் பவுலிங்கில் பட்டையைக் கிளப்பியதுதான்.
டாஸ் வென்ற இந்திய கேப்டன் ஹர்மன்ப்ரீத் கெளர் முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தார். முதலில் பேட் செய்த இந்தியா தனது முதல் இன்னிங்ஸில் 428 ரன்களைக் குவித்தது. சுபா சதீஷ் 69, ஜெமிமா ரோட்ரிக்ஸ் 48, ஹர்மன்ப்ரீத் கெளர் 49, யாஸ்திகா பாட்டியா 66, தீப்தி சர்மா 67, ஸ்னேஹா ராணா 30 என அசத்தினர்.
அடுத்து தனது முதல் இன்னிங்ஸை ஆடிய இங்கிலாந்து அணிக்கு தீப்தி சர்மா எமனாக மாறினார். தனது அபார பந்து வீச்சால் 5 விக்கெட்களைச் சாய்த்தார் தீப்தி. இதனால் இங்கிலாந்து 136 ரன்களில் ஆல் அவுட் ஆனது. பாலோ ஆன் கொடுக்க விரும்பாத இந்தியா தனது 2வது இன்னிங்ஸை ஆடியது. 6 விக்கெட் இழப்புக்கு 186 ரன்களை எடுத்து டிக்ளேர் செய்தது இந்தியா. இதையடுத்து 479 ரன்கள் எடுத்தால் வெற்றி பெறலாம் என்ற இமாலய இலக்குடன் சேஸிங்கைத் தொடங்கியது இங்கிலாந்து.
இந்த முறையும் தீப்தி சர்மா புயுலாக புகுந்து ஆட்டையைக் கலைத்து விட்டார். அபாரமாக பந்து வீசிய தீப்தி சர்மா 4 விக்கெட்களைச் சாய்க்க, 131 ரன்களில் ஆல் அவுட் ஆனது இங்கிலாந்து. இந்த ஆட்டம் முழுவதுமே இந்திய வீராங்கனைகளின் கட்டுப்பாட்டுக்குள்தான் இருந்தது. எந்த ஒரு நிலையிலும் இங்கிலாந்து தனது ஆதிக்கத்தை நிலை நிறுத்தவே முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
347 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி அசத்தல் வெற்றியைப் பெற்றது இந்தியா. தீப்தி சர்மா இரு இன்னிங்ஸ்களிலும் சேர்த்து 9 விக்கெட்களைச் சாய்த்தார். அவரே போட்டியின் நாயகியாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
மகளிர் டெஸ்ட் கிரிக்கெட்டில் மிகப் பெரிய வித்தியாசத்தில் ஒரு அணியைத் தோற்கடிப்பது இதுவே முதல் முறை என்பதால் இந்திய மகளிர் கிரிக்கெட் அணி வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது.
ஜூலை 1 முதல் அமலுக்கு வரும் புதிய ரயில் டிக்கெட் கட்டணம்.. உங்க ஊருக்கு எவ்வளவு தெரியுமா?
என்ன வேணும் உனக்கு.. வாட்ஸ் ஆப் கொண்டு வந்த புது அப்டேட்.. இனி இதையும் பண்ணலாம்!
PMK issue: டெல்லி விரைந்தார் அன்புமணி.. அமித்ஷா, நட்டாவை சந்திக்க திட்டமா?.. மீண்டும் பாமக பரபரப்பு
கர்நாடக முதல்வரை மாற்ற திட்டமா.. மல்லிகார்ஜூன கார்கே சொன்ன பதில் இதுதான்!
Bihar model Road: 100 கோடியில் ரோடு.. ரோட்டு மேல காரு.. காரைச் சுத்தி யாரு?.. அடக் கொடுமையே!
ஆதார்-ஐஆர்சிடிசி அக்கவுண்ட் இணைக்க இன்றே கடைசி... தட்கல் டிக்கெட் எடுக்க புதிய ரூல்ஸ்
நிலத்தடி நீருக்கு வரிவிதிப்பது.. குழந்தை குடிக்கும் தாய்ப்பாலுக்கு வரிவிதிப்பதற்கு ஒப்பானது: சீமான்!
தொடர் குறைவில் தங்கம் விலை.... மகிழ்ச்சியில் வாடிக்கையாளர்கள்!
68 ஆண்டுகளுக்குப் பிறகு.. ஜூன் மாதத்தில் 120 அடியை தொட்டு அசத்திய மேட்டூர் அணை!
{{comments.comment}}