காபிக் கடையில் சண்டை.. கனடா நாட்டவரை குத்திக் கொன்ற இந்தியர்!

Mar 29, 2023,09:39 AM IST
வான்கூவர்: கனடாவின் வான்கூவரில் நடந்த ஒரு வாக்குவாதத்தின்போது ஆத்திரமடைந்த இந்திய இளைஞர், கனடா நாட்டுக்காரரை குத்திக் கொன்று விட்டார். அவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

வான்கூவரில் உள்ள ஸ்டார்பக்ஸ் கபேக்கு வெளியே இந்த தாக்குதல் நடந்துள்ளது. கொலை செய்த நபரின் பெயர் இந்தர்தீப் சிங் கோசல். 37 வயதாகும் அவரை போலீஸார் கைது செய்து வழக்குப் பதிவு செய்துள்ளனர். இவரால் கொலை செய்யப்பட்ட நபரின் பெயர் பால்ஸ்டான்லி ஸ்மித். இவருக்கும் 37 வயதுதான்.



ஸ்டார்பக்ஸ் கடைக்கு வெளியே இருவருக்கும் இடையே மோதல் வெடித்துள்ளது. முதலில் வாக்குவாதம் நடந்துள்ளது. பின்னர் இது அடிதடியாக மாறியது.  இதில் படுகாயமடைந்த ஸ்மித்தை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு அவர் உயிரிழந்து விட்டார்.

இந்த சம்பவம் குறித்து ஸ்மித்தின் தாயார் கேத்தி கூறுகையில், எனது மகன் தனது மனைவி, மகளுடன் கடைக்குப் போயிருந்தான். அவனுக்கு தனது மனைவி, குழந்தைதான் உலகமே.. அவர்களுக்காகத்தான் வாழ்ந்து வந்தான். அவனது கொலை மூலம் மொத்த வாழ்க்கையையும் கோசல் சீர்குலைத்து விட்டார் என்றார் வேதனையுடன்.

கோசலுக்கும், ஸ்மித்துக்கும் இடையே ஏற்பட்ட மோதல் தற்செயலானது என்றும், துரதிர்ஷ்டவசமாக இது கொலையில் போய் முடிந்து விட்டதாகவும் நேரில் பார்த்தவர்கள் கூறியுள்ளனர்.

சமீபத்திய செய்திகள்

news

அவார்டுகளைக் குறி வைக்கும் சூப்பர் மேன்.. தீவிரப் பிரச்சாரத்தில் குதித்த வார்னர் பிரதர்ஸ்

news

மரத்தை வைத்தவன் தண்ணீர் ஊற்றுவானா?

news

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் அக்டோபர் 25, 2025... இன்று ஆனந்தம் தேடி வரும் ராசிகள்

news

அக்.27ஆம் தேதி உருவாகிறது மொந்தா புயல்... அலெர்ட் கொடுத்த இந்திய வானிலை மையம்!

news

கடலூர், மயிலாடுதுறை உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் அலர்ட்: சென்னை வானிலை மையம்!

news

23 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்!

news

வங்காளக் கடலில்.. புதிதாக ஒரு காற்றழுத்தத் தாழ்வு.. மீண்டும் வரும் மழை நாட்கள்

news

அம்மாவை 'அம்மா' என்று கூறுவதற்கு நீயே காரணம் என் உயிர் தமிழே!

news

ஆந்திராவில் பேருந்து விபத்து... குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் மோடி இரங்கல்!

அதிகம் பார்க்கும் செய்திகள்