சென்னை: கமல்ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள இந்தியன் 2 படம் ஜூன் மாதம் திரைக்கு வருவதாக லைக்கா நிறுவனம் அறிவித்துள்ளது.
ஷங்கர் இயக்கத்தில் லைக்கா தயாரித்துள்ள படம் இந்தியன் 2. கமல்ஹாசன் உள்ளிட்ட பல்வேறு முக்கிய முன்னணி நடிகர்கள் நடித்துள்ள இப்படம் இந்தியன் படத்தின் இரண்டாவது பாகமாகும்.
முதல் படத்தில் ஊழலை கதையாக வைத்து மிரட்டியிருந்தார் ஷங்கர். கமல்ஹாசனின் நடிப்பில் புதிய உச்சத்தைக் காட்டிய படம் இந்தியன். அதில் அவர் போட்டிருந்த இந்தியன் தாத்தா வேடம் மிகப் பெரிய அளவில் பிரபலமானது. இந்த நிலையில் தற்போது இந்தியன் 2 படத்தை இயக்கியுள்ளார் ஷங்கர்.
இந்த படம் மிகப்பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. படத்தின் முக்கிய ஸ்டில்கள் அவ்வப்போது வெளியான போதிலும் கூட படம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான கதைக் களத்தை ஷங்கர் எடுத்துள்ளார். கமல்ஹாசனின் நடிப்பு குறித்த எதிர்பார்ப்பு அதிகம் உள்ளது.
இப்படத்தில் ரகுல் பிரீத் சிங், எஸ் ஜே சூர்யா, சமுத்திரக்கனி, பாபி சிம்ஹா, பிரியா பவானி சங்கர், சித்தார்த் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இவர்கள் அனைவருமே முதல் முறையாக கமல்ஹாசனுடன் இணைந்துள்ளனர். அனைவருமே நடிப்பில் தங்களை வேற லெவலில் நிரூபித்தவர்கள் என்பதால் அதுவும் தனி எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

அனிருத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இந்த நிலையில் இந்தியன் 2 படத்தின் முக்கியமான அப்டேட் இன்று மாலை 6 மணிக்கு வெளியாவதாக இயக்குனர் ஷங்கர் அறிவித்திருந்தார். அதன்படி தற்போது அப்டேட் வந்துள்ளது. அதாவது இந்தியன் 2 படமானது ஜூன் மாதம் திரைக்கு வருவதாக லைக்கா நிறுவனம் தனது அறிவிப்பில் தெரிவித்துள்ளது. இந்த அறிவிப்பானது கமல்ஹாசன் ரசிகர்களை மட்டுமல்லாமல், ஷங்கரின் ரசிகர்களையும் கூட சேர்த்து குஷிப்படுத்தியுள்ளது. கையில் விலங்கிடப்பட்ட நிலையில் சேனாபதி கமல்ஹாசன் புன்னகை பூக்க நின்றபடி இருப்பது போன்ற புதிய ஸ்டில்லுடன் பட ரிலீஸ் தேதி குறித்த அப்டேட்டை லைக்கா நிறுவனம் வெளியிட்டுள்ளது. இது பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது.
ஏற்கனவே ஷங்கரின் கேம்சேஞ்சர் எப்பப்பா வரும் என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் இருந்து வந்தனர். இந்த நிலையில்தான் தற்போது ஷங்கரின் எபிக் படமான இந்தியன் படத்தின் அடுத்த பாகமான இந்தியன் 2 படத்தின் ரிலீஸ் அப்டேட் வந்து ஷங்கர் ரசிகர்களை ஹேப்பியாக்கியுள்ளது.
விக்ரம் படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களின் நாடித்துடிப்பை எகிற வைத்திருந்த கமல்ஹாசன் அடுத்தடுத்து பல படங்களில் நடித்து வருகிறார். அவரது இந்தியன் படம் இன்று வரை ரசிகர்களின் பேவரைட் படமாக உள்ளது. இந்த நிலையில் இந்தியன் 2 படத்தில் அவரது நடிப்பைக் கண்டு களிக்க மீண்டும் ஒரு வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அந்த வகையில் இன்றைய அப்டேட்டானது கமல் ரசிகர்களையும் உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.
அக்.27ஆம் தேதி உருவாகிறது மொந்தா புயல்... அலெர்ட் கொடுத்த இந்திய வானிலை மையம்!
கடலூர், மயிலாடுதுறை உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் அலர்ட்: சென்னை வானிலை மையம்!
23 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்!
வங்காளக் கடலில்.. புதிதாக ஒரு காற்றழுத்தத் தாழ்வு.. மீண்டும் வரும் மழை நாட்கள்
அம்மாவை 'அம்மா' என்று கூறுவதற்கு நீயே காரணம் என் உயிர் தமிழே!
ஆந்திராவில் பேருந்து விபத்து... குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் மோடி இரங்கல்!
ஆந்திராவில் பேருந்து விபத்து..20 பேர் பலி..11 உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன:மாவட்ட ஆட்சியர் தகவல்!
விராட் கோலி ரசிகர்கள் அதிர்ச்சி.. அடுத்தடுத்து டக் அவுட் ஆனால்.. ரவி சாஸ்திரி வார்னிங்!
தமிழ்நாட்டில் நாளை.. அரசு அலுவலகங்கள்.. பள்ளிகள் இயங்கும்.. மாநில அறிவிப்பு
{{comments.comment}}