சென்னை: இந்திய ரயில்வே குரூப் டி பிரிவில் 32,000 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை ரயில்வே ஆள்சேர்ப்பு நிர்வாகம் வெளியிட்டுள்ளது.
இந்திய ரயில்வே துறையில் உள்ள வேலை வாய்ப்புக்கான காலிப் பணியிடங்களை ரயில்வே ஆள்சேர்ப்பு வாரியம் மூலம் ஒவ்வொரு வருடமும் நிரப்பபட்டு வருகிறது. இந்த காலி பணியிடங்களின் அறிவிப்பிற்காக இளைஞர்கள் பலரும் எதிர்பார்த்து வருவது வழக்கம். ஏனெனில் ரயில்வே துறையில் பணிபுரிவது என்பது பலரின் கனவாகவும் ஏக்கமாகவும் இருந்து வருகிறது. அந்த வரிசையில் 2025 ஆம் ஆண்டு ரயில்வே ஆள் சேர்ப்பு வாரியம், குரூப் டி பிரிவில் 32 ஆயிரம் காலி பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அதன்படி இந்தியா முழுவதும் ரயில்வே குரூப் டி பிரிவில் மொத்தம் 32,000 காலிப்பணியிடங்களை நிரப்பப்பட உள்ளன. இதில் தமிழ்நாட்டில் மட்டும் மொத்தம் 2700 காலிப் பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. இதற்காக ஜனவரி 23ஆம் தேதியிலிருந்து பிப்ரவரி 22ஆம் தேதி வரை விண்ணப்பங்கள் வரவேற்கப்பட உள்ளன.

இந்த குரூப் டி பிரிவிற்கு விண்ணப்பிக்க பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தாலே போதுமானது. இருப்பினும் 12th, ITI , diploma,
Engineering முடித்தவர்களும் விண்ணப்பிக்கலாம்.
இந்த பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் 18 வயது நிரம்பியவராகவும், 36 வயதிற்கு மிகாமலும் இருக்க வேண்டும். ஓ.பி.சி பிரிவினருக்கு வயது 18 முதல் 39 வரை இருக்க வேண்டும். எஸ்.சி மற்றும் எஸ்.டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு உள்ளது. அதாவது 18 முதல் 41 வயது வரை இருக்க வேண்டும்.
இந்தப் பணியிடங்களுக்கு கணினி வழித் தேர்வு மற்றும் உடற்தகுதித் தேர்வு அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள். கணினி வழித் தேர்வில் தகுதி பெற்றவர்களுக்கு உடற்தகுதி தேர்வு நடைபெறும். மேலும் தகுதியுடையவர்கள் www.rrbchennai.gov.in என்ற இணையதள வாயிலாக விண்ணப்பிக்கலாம்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
இந்த வாழ்க்கை ஒரு கனவா?
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜை.. முதல்வர் மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிச்சாமி அஞ்சலி
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் அக்டோபர் 30, 2025... இன்று மகிழ்ச்சி தேடி வரும் ராசிகள்
பணியாளர் நியமனத்தில் முறைகேடா?.. களங்கம் கற்பிக்க மத்திய அரசு முயற்சி.. அமைச்சர் கே. என். நேரு
2,538 பணியிடங்களுக்கு முறைகேடாக பணி நியமனம் செய்து ரூ.888 கோடி திமுக ஊழல்: அண்ணாமலை குற்றச்சாட்டு
Rain Rain come again.. தமிழ்நாட்டில் அடுத்த 7 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் தகவல்
மக்களைக் காக்க யாரும் எங்களுக்கு சொல்லித் தர வேண்டாம்: முதல்வர் மு.க.ஸ்டாலின்!
நவ. 5ல் சிறப்பு பொதுக்குழு: ஆழ் நீள் அடர் அமைதிக்குப் பிறகு.. பேசப் போகிறேன்.. விஜய் அறிக்கை
காலையில் மட்டுமில்லங்க..பிற்பகலிலும் உயர்ந்தது தங்கம் விலை.. இன்று மட்டும் சவரனுக்கு ரூ.2,000 உயர்வு
{{comments.comment}}