டி20 உலகக் கோப்பை அணி.. தமிழ்நாட்டு வீரர்களுக்கு இடமில்லை.. கே.எல். ராகுலும் சேர்க்கப்படவில்லை

Apr 30, 2024,05:16 PM IST

மும்பை:  டி20 உலகக் கோப்பைத் தொடருக்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டது. இதில் ரோஹித் சர்மா கேப்டனாகவும், ஹர்டிக் பாண்ட்யா துணை கேப்டனாகவும் அறிவிக்கப்பட்டுள்ளனர். கே.எல். ராகுலுக்கு அணியில் இடமில்லை. அஸ்வின் உள்பட எந்த தமிழ்நாட்டு வீரருக்கும் அணியில் இடம் தரப்படவில்லை.


டி20 உலகக் கோப்பைத் தொடர் மேற்கு இந்தியத் தீவுகள் மற்றும் அமெரிக்காவில் இணைந்து நடைபெறவுள்ளன. மொத்தம் 20 அணிகள் இதில் விளையாடவுள்ளன. நான்கு குரூப்களாக அணிகள் பிரிக்கப்பட்டுள்ளன.  இதில் இந்தியா ஏ குரூப்பில் இடம் பெற்றுள்ளது.


இந்தத் தொடருக்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டது. இந்திய அணி விவரம்:




ரோஹித் சர்மா, ஹர்டிக் பாண்ட்யா, யஷஸ்வி ஜெய்ஸ்வால், விராத் கோலி, சூரியகுமார் யாதவ், ரிஷாப் பந்த், சஞ்சு சாம்சன், சிவம் துபே, ரவீந்திர ஜடேஜா, அக்ஸார் படேல், குல்தீப் யாதவ், யுஸ்வேந்திர சஹல், அர்ஷதீப் சிங், முகம்மது சிராஜ், ஜஸ்ப்ரீத் பும்ரா. 


ரிசர்வ் வீரர்கள்: சுப்மன் கில், ரிங்கு சிங், கலீல் அகமது, ஆவேஷ் கான்.


இந்திய அணியில் இடம் பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட கே. நடராஜன், அஸ்வின் ஆகியோருக்கு இடம் அளிக்கப்படவில்லை. அதேபோல ஷாருக் கான் உள்ளிட்ட தமிழ்நாட்டு வீரரர்களுக்கும் இடம் அளிக்கப்படவில்லை. தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு வீரர் கூட இடம் பெறவில்லை என்பது  ஆச்சரியமாக உள்ளது. அதேபோல கர்நாடகத்திலிருந்தும் ஒரு வீரர் கூட இடம் பெறவில்லை. இருந்த ஒரே வீரரான கே.எல். ராகுலையும் கூட சேர்க்காமல் விட்டுள்ளனர். இது ரசிகர்களை பெரும் ஏமாற்றத்துக்குள்ளாக்கியுள்ளது.


ஜூன் 5ம் தேதி இந்தியா தனது முதல் போட்டியில் அயர்லாந்து அணியை நியூயார்க்கில் சந்திக்கவுள்ளது. அதன் பிறகு அதே மைதானத்தில் ஜூன் 9ம் தேதி பாகிஸ்தானுடன் இந்தியா மோதும். இந்தியா மோதும் போட்டிகள் அனைத்தும் அமெரிக்காவிலேயே நடைபெறவுள்ளன. அமெரிக்காவுடன் ஜூன் 12 மற்றும் கனடாவுடன் ஜூன் 15 தேதிகளில் இந்தியா மோதவுள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

11 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு!

news

கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் விரிசலா.. மாவட்ட கலெக்டர் அழகு மீனாவின் விளக்கம் இதுதான்!

news

இலங்கை தமிழ் அகதிகளுக்கு நீண்டகால விசாவும், குடியுரிமையும் வழங்கும் சட்ட திருத்தமும் தேவை: அன்புமணி

news

மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயர்.. 2 தலித் கட்சிகள் எதிர்ப்பு

news

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்

news

தலைமை சொல்வதை கேட்பதே எனது பொறுப்பு: தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்!

news

ரஷ்யா மீது 2வது கட்ட பொருளாதார தடை விதிக்கப் போறேன்.. டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு

news

கண்மணியே உன் கா(த)ல் தடம் தேடி..1 (கவிதைத் தொடர்)

news

ஆசிய கோப்பை ஹாக்கி 2025.. 8 வருடங்களுக்குப் பிறகு கோப்பையை வென்று இந்தியா அசத்தல்

அதிகம் பார்க்கும் செய்திகள்