டெல்லி: கம்போடியா - தாய்லாந்து எல்லைப் பகுதிகளில் பதற்றம் நிலவி வருகிறது. இதனால் கம்போடியாவில் வசிக்கும் அல்லது அங்கு பயணம் செய்யும் இந்தியர்களுக்கு, இந்திய தூதரகம் பாதுகாப்பு எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது.
கம்போடியா மற்றும் தாய்லாந்து படைகளுக்கு இடையே ராணுவ மோதல் வெடித்துள்ளது. இரு தரப்பும் தாக்குதலில் ஈடுபட்டு வருகிந்றன. இதில் பலர் உயிரிழந்துள்ளனர். பெருமளவிலான மக்கள் தாக்குதல் நடைபெறும் பகுதிகளிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். எனவே, இந்திய குடிமக்கள் பாதிக்கப்பட்ட எல்லைப் பகுதிகளுக்குச் செல்வதைத் தவிர்க்குமாறு இந்திய தூதரகம் கேட்டுக் கொண்டுள்ளது.
இதுதொடர்பாக கம்போடியாவில் உள்ள இந்திய தூதரகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், "கம்போடியா-தாய்லாந்து எல்லையில் நடந்து வரும் மோதல்களைக் கருத்தில் கொண்டு, இந்தியர்கள் எல்லைப் பகுதிகளுக்குப் பயணம் செய்வதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். அவசர உதவி தேவைப்பட்டால், இந்தியர்கள் புனோம் பென்னில் உள்ள இந்திய தூதரகத்தை +855 92881676 என்ற எண்ணிலோ அல்லது cons.phnompenh@mea.gov.in என்ற மின்னஞ்சல் முகவரியிலோ அணுகலாம் என்று தெரிவித்துள்ளது.

தாய்லாந்தும் கம்போடியாவும் சர்ச்சைக்குரிய நிலப்பகுதி தொடர்பாக மோதலில் இறங்கியுள்ளன. இது ராணுவ மோதலாக தற்போது மாறியுள்து.
இதற்கிடையில், பாங்காக்கில் உள்ள இந்திய தூதரகமும் இதேபோன்ற எச்சரிக்கையை விடுத்துள்ளது. தாய்லாந்தில் உள்ள இந்தியப் பயணிகளுக்கு ஏழு எல்லை மாகாணங்களான உபோன் ரட்சதனி (Ubon Ratchathani), சூரின் (Surin), சிசகெட் (Sisaket), புரி ராம் (Buriram), சா கியோ (Sa Kaeo), சந்தபுரி (Chanthaburi) மற்றும் டிராட் (Trat) ஆகியவற்றைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தியுள்ளது.
இந்திய குடிமக்கள், தாய்லாந்து சுற்றுலா ஆணையத்தின் (Tourism Authority of Thailand - TAT) செய்தி அறை உட்பட, நம்பகமான ஆதாரங்களில் இருந்து வரும் தகவல்களை மட்டுமே நம்ப வேண்டும் என்றும், தவறான தகவல்களைப் பரப்புவதையோ அல்லது அதன்படி செயல்படுவதையோ தவிர்க்க வேண்டும் என்றும் தூதரகம் வலியுறுத்தியுள்ளது.
இந்தியர்கள் அதிகம் செல்லும் சுற்றுலாத்தலங்களில் தாய்லாந்தும் முக்கியமான இடத்தில் உள்ளது. குறிப்பாக பாங்காங் செல்வது பலருக்கும் பிடித்தமான ஒன்றாகும். 15 க்கும் மேற்பட்ட இந்திய நகரங்களிலிருந்து வாரத்திற்கு 400-க்கும் மேற்பட்ட விமானங்கள் தாய்லாந்துக்கு இயக்கப்படுகின்றன. தற்போது கம்போடியா - தாய்லாந்து இடையிலான மோதல் சுற்றுலாப் பயணிகளை வெகுவாக பாதிக்கும்.
SIR வேண்டாம் என்று திமுக உச்ச நீதிமன்றம் சென்றால், அதிமுக SIR வேண்டும் என செல்வோம்: ஜெயக்குமார்
எது தான் உண்மை..? .. சற்று யோசிப்போம்.. நிதானமாய் வாசிப்போம் .. Happy Housewife Day!
மீண்டும் ஏற்றம் கண்ட தங்கம், வெள்ளி விலை... சவரனுக்கு ரூ.320 உயர்வு!
கோவை விமான நிலையம் அருகே அதிர்ச்சி... மதுரையைச் சேர்ந்த கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை!
இல்லத்தரசி!
சோமவார பிரதோஷம்.. சிவபெருமானுக்கான விரதங்களிலேயே மிகவும் சிறந்தது!
தெலங்கானாவில் விபரீதம்.. அரசுப் பேருந்துடன் ஜல்லி லாரி மோதி.. பயங்கர விபத்து
வடக்கு ஆப்கானிஸ்தானை உலுக்கிய சக்தி வாய்ந்த நிலநடுக்கம்.. பெரும் சேதம் எனத் தகவல்
கடற்பாசி ஜெல்லி.. சாப்பிட்டிருக்கீங்களா.. சூப்பர் டேஸ்ட்டி.. சுப்ரீம் ஸ்வீட்டுங்க!
{{comments.comment}}