- சொ. மங்களேஸ்வரி
வாழ்க்கையில் பாதுகாப்பு என்பது ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மட்டுமல்ல, அது அவசியமான ஒரு வாழ்க்கை முறை. நாம் நமது அன்றாடச் செயல்பாடுகளில் பாதுகாப்பு முறைகளைப் பின்பற்றத் தவறினால் உயிரிழப்பு, உடல்நல பாதிப்பு மற்றும் பொருளாதாரச் சேதம் போன்ற விளைவுகளைச் சந்திக்க நேரிடும். சாதாரண மனிதர்கள் முதல் நாட்டின் முக்கியப் பிரமுகர்கள் வரை அனைவருக்கும் பாதுகாப்பு என்பது இன்றியமையாதது.
இந்தியாவில் அரசியல் தலைவர்கள் மற்றும் முக்கியப் பிரமுகர்களுக்கு அவர்கள் எதிர்கொள்ளும் அச்சுறுத்தல் அளவைப் பொறுத்து மத்திய உள்துறை அமைச்சகம் பல்வேறு நிலைகளில் பாதுகாப்பை வழங்குகிறது.
பாதுகாப்புப் பிரிவுகளின் வகைகள்
இந்தியாவில் பாதுகாப்பு நிலைகள் பொதுவாக X, Y, Y+, Z, மற்றும் Z+ என ஐந்து நிலைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன.
1. Z+ பாதுகாப்பு (மிக உயர்ந்த நிலை)
இது இந்தியாவிலேயே வழங்கப்படும் மிக உயரிய பாதுகாப்புப் பிரிவாகும்.
சுமார் 55 முதல் 60 வீரர்கள் வரை பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவர். இதில் தேசிய பாதுகாப்புப் படை (NSG) கமாண்டோக்கள் இடம் பெறுவார்கள். புல்லட் புரூஃப் வாகனங்கள், நவீன தகவல் தொடர்பு சாதனங்கள் மற்றும் MP5 போன்ற அதிநவீன துப்பாக்கிகள் பயன்படுத்தப்படும்.
பிரதமர், மத்திய அமைச்சர்கள், மாநில முதலமைச்சர்கள் மற்றும் உச்சநீதிமன்ற நீதிபதிகளுக்கு வழங்கப்படுகிறது.
2. Z பிரிவு பாதுகாப்பு
Z+ பிரிவிற்கு அடுத்தபடியாக இது கருதப்படுகிறது.
மொத்தம் 22 பணியாளர்கள் இதில் இருப்பார்கள். இதில் 4 முதல் 6 வரை மத்திய ஆயுதக் காவல் படை கமாண்டோக்கள் மற்றும் காவல்துறையினர் பாதுகாப்பு அளிப்பார்கள்.
3. Y+ மற்றும் Y பிரிவு பாதுகாப்பு
நடுத்தர அளவிலான அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளும் நபர்களுக்கு இந்தப் பாதுகாப்பு வழங்கப்படுகிறது.
Y+ பிரிவு: மொத்தம் 11 பணியாளர்கள். இதில் 2 முதல் 4 கமாண்டோக்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் இருப்பார்கள்.
Y பிரிவு: மொத்தம் 8 பணியாளர்கள். இதில் 1 அல்லது 2 கமாண்டோக்கள் அடங்குவர்.
பொதுவாக 11 வீரர்கள் கொண்ட சுழற்சி முறையில் (2 கமாண்டோக்கள் + 8 காவலர்கள் + 1 ஓட்டுநர்) ஆயுதங்களுடன் பாதுகாப்பு வழங்கப்படுகிறது.
4. X பிரிவு பாதுகாப்பு
இது அடிப்படை பாதுகாப்பு நிலையாகும். 2 பணியாளர்கள் மட்டுமே பாதுகாப்பு அளிப்பார்கள்.
இதில் கமாண்டோக்கள் கிடையாது. ஆயுதம் ஏந்திய போலீஸ் அதிகாரிகள் மட்டுமே பாதுகாப்பு வழங்குவர்.
அரசு வழங்கும் இத்தகைய பாதுகாப்பு ஏற்பாடுகள் ஒருபுறம் இருக்க, தனிமனித ஒழுக்கமும் விழிப்புணர்வும் மிகச்சிறந்த பாதுகாப்பைத் தரும்.
ஒவ்வொரு தனிமனிதனுக்கும் தற்காப்பு என்பது அவசியம். குறிப்பாகப் பெண்களுக்கு, ஒரு தாயே மிகச்சிறந்த பாதுகாப்புத் தளபதியாக (Commander) விளங்குகிறார். அவர்களின் வழிகாட்டுதலும் அரவணைப்பும் சமூகத்தில் ஒரு பாதுகாப்பான சூழலை உருவாக்க உதவும்.
பாதுகாப்பு என்பது ஒரு கேடயம் போன்றது. அது அச்சுறுத்தல்களில் இருந்து நம்மைக் காப்பதோடு, ஒரு வளமான மற்றும் அமைதியான வாழ்க்கையை உறுதி செய்கிறது. முறையான பாதுகாப்பு விதிமுறைகளைப் பின்பற்றி விபத்துகளையும் இழப்புகளையும் தவிர்ப்போம்.
(சொ. மங்களேஸ்வரி, எம்.ஏ., பி.எட்., எம்ஃபில், ஆங்கில பட்டதாரி ஆசிரியை, அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, கோவில்பட்டி, தூத்துக்குடி மாவட்டம்)
எம்எல்ஏ.க்களுக்கு கார்.. விவாதத்தில் சிக்கிய ஆபர்.. முதல்வர் விஜய்யின் அறிவிப்பு சரியா?
விஜய்யிடம் சீட் கேட்ட அந்த பிரபல டைரக்டர் இவரா? ஹாட் டாக்கான புஸ்ஸி ஆனந்த் பேச்சு
நிறைவேற்ற வேண்டிய திட்டங்கள் எவ்வளவோ இருக்க.. எம்எல்ஏக்களுக்கு கார் எதுக்கு?.. சீமான்
உத்தரப் பிரதேச நீதிபதியிடமிருந்து 100 கொலை வழக்குகள் அதிரடி மாற்றம்.. அதிர வைக்கும் காரணம்!
செட்டிநாட்டு கிச்சன்.. இன்றைய ருசியான ரெசிபி.. அசத்தலான மட்டன் கிரேவி!
பாத்து பாத்து ஆசை அள்ள பரவசத்தில் மீசை துள்ள!
Varalakshmi Nonbu: வரலட்சுமி நோன்பு.. ஆகஸ்ட் 21ம் தேதியா இல்லை 28ஆ?
பாம்பன் சுவாமிகளே பக்தியின் பெருங்கடலே!
சரியான முடிவு
{{comments.comment}}