சென்னை: தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு புதிய சகாப்தத்தைப் படைத்து, தமிழ்நாட்டின் முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள சி. ஜோசப் விஜய் ஜூன் 22 அன்று தனது 52-வது பிறந்தநாளை முதன்முறையாக ‘முதலமைச்சர்’ என்ற அந்தஸ்துடன் கொண்டாடவுள்ளார்.
இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரின் மகனாக, ஒரு நடிகராக, தவெக தலைவராக கடந்த 51 வருட காலமாக பிறந்தநாளைக் கொண்டாடி வந்த விஜய், முதல்வராக முதல் முறையாக வருகிற 22ம் தேதி தனது பிறந்த நாளைக் கொண்டாடவுள்ளதால் தவெகவினர் பெரும் உற்சாகத்துடன் காணப்படுகின்றனர்.
சினிமா உச்ச நட்சத்திரமாக இருந்த ‘தளபதி’ விஜய், தற்போது மக்கள் செல்வாக்குமிக்க ‘மக்கள் முதல்வர்’ விஜயாக இந்த பிறந்தநாளை எதிர்கொள்வதால், தமிழகம் முழுவதும் அவரது கட்சியினரிடமும், ரசிகர்களிடமும் தற்போதே உற்சாகம் கரைபுரண்டு ஓடுகிறது.
2024-ல் "தமிழக வெற்றிக் கழகம்" என்ற கட்சியைத் தொடங்கி, தனது 69-வது படமான 'ஜனநாயகன்' திரைப்படத்துடன் சினிமாவுக்கு முழுக்கு போட்டார் விஜய். திராவிடக் கட்சிகளின் அரை நூற்றாண்டு கால ஆதிக்கத்தை உடைத்து, 2026 மே மாதத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் 108 இடங்களைக் கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக தவெக உருவெடுத்தது. காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளின் ஆதரவோடு 2026 மே 10 அன்று தமிழகத்தின் 9-வது முதலமைச்சராக விஜய் பதவியேற்றார்.
பதவியேற்ற சில வாரங்களிலேயே வரும் அவரது முதல் பிறந்தநாள் என்பதால், இது அரசியல் ரீதியாகவும் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.
முதலமைச்சராகப் பதவியேற்றவுடன், "வீடுகளுக்கு 200 யூனிட் இலவச மின்சாரம்" வழங்கும் திட்டத்தில் தனது முதல் கையெழுத்திட்டு அதிரடி காட்டினார் முதல்வர் விஜய். எனவே, இந்த பிறந்தநாளை ஆடம்பரமாகக் கொண்டாடாமல், முழுமையாக மக்கள் நற்பணி நாளாகக் கொண்டாட தவெக தலைமை அறிவுறுத்தியுள்ளது.
தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள தவெக தொண்டர்கள் ஏழை எளிய மக்களுக்கு அன்னதானம், மருத்துவ முகாம்கள், பள்ளி மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்குதல் போன்ற பணிகளைத் திட்டமிட்டுள்ளனர்.
பிறந்தநாளை முன்னிட்டு மாநிலம் முழுவதும் லட்சக்கணக்கான மரக்கன்றுகளை நட தவெக இளைஞர் அணியினர் தயாராகி வருகின்றனர்.
வழக்கமாக பனையூர் தவெக அலுவலகம் அல்லது நீலாங்கரை இல்லத்தில் ரசிகர்களைச் சந்திக்கும் விஜய், இந்த முறை முதலமைச்சராக இருப்பதால் அவரது பிறந்தநாள் நிகழ்வுகள் கூடுதல் பாதுகாப்புடனும், அரசு நெறிமுறைகளுடனும் நடைபெறவுள்ளன.
விஜய் முதலமைச்சராகப் பொறுப்பேற்றதைத் தொடர்ந்து, தமிழக அரசியலில் தவெக-வின் கரம் நாளுக்கு நாள் வலுவடைந்து வருகிறது. சமீபத்தில் கூட அதிமுக-வைச் சேர்ந்த 4 முன்னாள் அமைச்சர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் தவெக-வில் இணைந்துள்ளனர். இன்றும் அதிமுக, பாஜகவைச் சேர்ந்த பலர் தவெகவில் இணைந்துள்ளனர்.
முதல்வர் விஜய் தனது சொந்தத் தொகுதியான பெரம்பூரில் உள்ள எம்எல்ஏ அலுவலகத்தில் வந்து கேக் வெட்டி தனது பிறந்த நாளைக் கொண்டாடத் திட்டமிட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.
அன்பில் மகேஸ் பொய்யாமொழி ரெய்டு: மற்றுமொரு அரசியல் பழிவாங்கல்.. மு.க.ஸ்டாலின்
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் எப்போதுமே முதல் பூஜை யாருக்கு தெரியுமா?
ரெஸ்ட்டில் இருக்கிறேன்.. உடல்நலம் குறித்து விசாரித்த அனைவருக்கும் நன்றி.. மு.க.ஸ்டாலின்
ஈரான் போர் எதிரொலி: ஆசியாவுக்கான எண்ணெய் கப்பல் போக்குவரத்து செலவு புதிய உச்சம்!
"ஜெயா, நீ இல்லாத ஊருக்கு இலுப்பைப் பூ".. மறக்க முடியுமா? (2)
ஆவியைப் பத்தி சொல்லுங்க.. எங்கே நைஸா ஓடப் பாக்கறீங்க.. வாங்க இங்க..!
MS Subbulakshmi: மகாராணி மீனாட்சியின் மதுரையில் அவதரித்த.. கர்நாடக இசையின் ராணி!
இது லண்டனா இல்லை சென்னையா.. விஜய்யைப் பார்க்க கூடிய பெரும் கூட்டம்.. சந்திப்பு ரத்து!
வாஸந்திக்குப் பிடித்த பாஸந்தி!
{{comments.comment}}