சென்னை: நடிகர் சந்தானம் நடிப்பில் உருவாகி இருக்கும் "இங்க நாங்க தான் கிங்" என்ற படத்தில் இடம்பெற்றுள்ள டி இமான் இசையில் உருவான மாயோனே.. செல்ல மாயோனே.. என்ற பாடல் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு பெற்றுள்ளதாம்.
தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக விளங்கி வருபவர் இசையமைப்பாளர் டி. இமான். கிராமத்து இசை, மெலடி, குத்துப்பாட்டு, என இவருடைய அனைத்து பாடல்களும் சும்மா பட்டைய கிளப்பும் வகையில் அமைந்திருக்கும். குறிப்பாக இவரது இசையமைப்பில் வெளிவந்த கும்கி, வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன், சீமா ராஜா, ரோமியோ ஜூலியட்,அண்ணாத்த, விசுவாசம், உள்ளிட்ட பல படங்களில் அனைத்து பாடல்களும் ஹிட் கொடுத்து, இப்படத்தின் இசை ரசிகர்களை மகிழ்வித்தது.

தமிழில் ரசிகர்களின் ப்ளேலிஸ்ட் பாடல்களில் நீங்காத இடம் பிடித்துள்ளது டி இமானின் சூப்பர் ஹிட் பாடல்கள். அந்த வரிசையில் தற்போது கோபுரம் ஃபிலிம்ஸ் ஜி.என் அன்பு செழியன் அவர்கள் தயாரிப்பில், நடிகர் சந்தானம் நடிப்பில் உருவாகி இருக்கும் இங்க நாங்க தான் கிங் என்ற படத்தில் டி. இமான் இசையமைத்துள்ளார். இதில் மாயோனே செல்ல மாயோனே என்ற பாடல் சார்ட்பஸ்டர் ஹிட்டாக மாறி உள்ளது.
இந்த நிலையில் இப்பாடல் சோசியல் மீடியா முழுவதும், முழுக்க முழுக்க ரீல்ஸ்களாக வைரலாகி வருகிறதாம். முக்கியமாக நீண்ட நாட்களுக்குப் பின் அனைத்து தரப்பு பெண்களையும் இப்பாடல் மிகவும் கவர்ந்து உள்ளதாம். பட வெளியீட்டுக்கு முன்னதாக நகரம் முதல் கிராமம் வரை பட்டி தொட்டி முழுவதும் வைரலான இப்பாடலுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதால் டி.இமான், தயாரிப்பாளர் ஜி.என் அன்பு செழியன், நடிகர் சந்தானம் உள்ளிட்ட பலரும் மகிழ்ச்சியில் உள்ளனர்.

மேலும் இப்படத்தில் உள்ள அனைத்து பாடல்களின் பணிகளும் தற்போது முடிந்துள்ள நிலையில், இப்படம் விரைவில் திரையரங்குகளில் ரிலீஸ் செய்வதற்கான பணிகள் நடைபெற்று வருவதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: அதிமுக.,வில் விருப்பமனு விநியோகம் தொடக்கம்
முதல்வர் விஜய் பேசியதில் தவறில்லை : சபாயநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் விளக்கம்
எது மக்களாட்சி?
தாத்தா பாட்டி வந்திருக்கா.. டூப் விட்ட அண்ணன்.. ஸ்கூல் அனுபவங்கள் (2)
முதல்வர் விஜய் பேச்சுக்கு எதிர்ப்பு.. தர்ணா செய்த திமுக எம்எல்ஏக்கள் அவை காவலர்களால் வெளியேற்றம்
மதுராந்தகம், தாராபுரம் சட்டசபைத் தொகுதிகளுக்கு அக்டோபர்6ல் இடைத் தேர்தல்
தமிழக சட்டசபையில் காரசார விவாதம்: திமுக.,வின் அமளிக்கு இடையே முதல்வர் விஜய் ஆவேச பதிலுரை
முதல்வர் விஜய் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக எம்.எல்.ஏ-க்கள் தர்ணா... வெளிநடப்பு
ரீல்ஸ்க்காக மட்டுமே பேச்சு...சபாநாயகர், முதல்வர் மீது உதயநிதி கடும் விமர்சனம்
{{comments.comment}}