லண்டன்: பேஸ்புக், இன்ஸ்டாகிராம் மட்டுமல்லாமல் மேலும் பல நிறுவனங்களின் இணையதளங்களும் டவுன் ஆகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. வாட்ஸ் ஆப்பும் கூட சரிவர பல பகுதிகளில் செயல்படவில்லை. இது சைபர் அட்டாக்காக இருக்கலாமோ என்ற பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
காலையில் எழுந்ததும் எல்லோரும் முதலில் விழிப்பது செல்போனில்தான்.. அதிலும் டிவிட்டர், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், யூடியூப் பார்க்காமல் பொழுது விடியாது.. முடியாது. இந்த நிலையில்தான் இன்று இரவு திடீரென பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ் ஆப் ஆகியவை டவுன் ஆகின. செயலிழந்தன. யாராலும் லாகின் செய்ய முடியவில்லை. வாட்ஸ் ஆப் பின்னர் சரியானது.
இந்த செயலிகள் மட்டுமல்லாமல் மேலும் பல இணையதளங்களும் ஒரு சேர டவுன் ஆனதால் தகவல் தொழில்நுட்ப உலகில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இது சைபர் அட்டாக்காக இருக்கலாமோ என்ற சந்தேகம் கிளம்பியது.

ஒரே நேரத்தில் முன்னணி செயலிகள் செயலிழந்தது தற்செயலானதாக இருக்க முடியாது என்பது பலரின் கருத்தாகும். மெட்டா நிறுவனத்தின் புராடக்ட்தான் வாட்ஸ் ஆப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் திரெட்ஸ் ஆகியவை. திரெட்ஸும் கூட டவுன் ஆகியது. விரைவில் இது சரி செய்யப்படும் என்று மெட்டா நிறுவன அதிபர் மார்க் ஜக்கர்பர்க் கூறியுள்ளார்.
எலான் மஸ்க்கே நக்கலடிச்சுட்டாரு குமாரு!
இந்த செயலிகள் செயலிழந்ததால் மொத்தப் பேரும் டிவிட்டருக்குத் தாவினர். யார் போனா என்ன எங்கண்ணன் எலான் மஸ்க் இருக்காருடா என்று பலரும் மீம்ஸ் போட்டு பேஸ்புக்கையும், இன்ஸ்டாவையும் கலாய்த்தனர். மார்க் ஜக்கர்பர்க் வயர்களை நோண்டி சர்வரை சரி செய்வது போன்ற மீம்ஸ்களும் தூள் பறந்தன.
அதை விட காமெடி, எலான் மஸ்க்கே வந்து கிண்டலடித்து டிவீட் போடும் நிலைமைக்குப் போனதுதான். இந்த டிவீட்டை நீங்க படிக்கக் காரணம், எங்க சர்வர்கள் சரியா வேலை செய்வதால்தான் என்று கலாய்த்துள்ளார் மஸ்க். அதேபோல இன்னொரு மீம்ஸையும் அவர் ஷேர் செய்துள்ளார்.
இப்பவாச்சும் கொஞ்சம் போனுக்கு ரெஸ்ட் கொடுங்கடா என்று பல இடங்களில் பெற்றோர்கள் பிள்ளைகளைத் திட்டியதையும் பார்க்க முடிந்தது. ஆக மொத்தம் இன்ஸ்டா, பேஸ்புக் இல்லாமல் பெரும்பாலான நாடுகளைச் சேர்ந்த பயனாளர்கள் ஆடிப் போய் விட்டனர்.
நவம்பர் 1-க்குள் தமிழில் கடையின் பெயர் பலகைகள்...சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
"பூச்சாண்டிகளுக்கு எல்லாம் அஞ்சிட மாட்டோம்": கே.என்.நேரு வீடு ரெய்டிற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்!
"ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர்": தவெக கூட்டணி குறித்து மாணிக்கம் தாகூர் பரபரப்பு பேட்டி!
"ஸ்கிரீன் டைம் போதையாக மாறிவிட்டது" – பிரதமர் நரேந்திர மோடி எச்சரிக்கை!
பெண்களை இழிவுபடுத்தும் விளம்பரங்களை வைக்கலாமா.. மெட்ரோவுக்கு சு. வெங்கடேசன் கேள்வி
முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ அசன் மௌலானாவுக்கு 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடத் தடை
திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை
மாணவர்கள் வளர்ச்சி கண்டு பெருமைப்படும் பேரான்மாக்கள்.. ஆசிரியர்கள்!
கல்வி என்னும் நறுந்தேனை.. சுவைக்கச் செய்யும் இளங்காற்று நாமே!
{{comments.comment}}