- மது.ரேணுகா ராயன்
நெஞ்சக்கனல் கொண்டு
மதுரையை எரித்த கண்ணகியும்..,
கணவன் காணாத பேரழகை
பேயுருவால் அழித்தாண்ட- புனிதவதியும்.,
தமிழும் சைவமும் தன் வாழ்வு என்று நங்கை பருவத்தை துறந்து
முதுமை வரம் பெற்ற ஔவையும்.,
கணவன் மாண்டபோதும் _ நம்
மண்ணைக் காக்க யுத்தக்களம்
வெற்றி கொண்ட
வேலு நாச்சியும்...,

விடுதலை இந்தியாவை
நாம் காண நேதாஜி ராணுவத்தில் இணைந்த லட்சுமிபாயும்..,
தமிழினப் பண்பை பறைசாற்றிய திருமகள்கள் - அவர் தம் வாரிசே
நம் தமிழ் பெண்ணினம்!
பெண்ணியம்... பேசி
சாதிக்கப் போவதில்லை இனி
வாழ்வும் வாக்குமாய் அதை நிலை நிறுத்த அறிவின் நீட்சியே போதும்.
கல்வியும், மேம்பட்ட பண்பும், ஒழுக்கமும், உண்மையும் அணிகலனாய் பெற்று
நம் பெண்ணினம் யுகம் பல ஆளட்டும்...!
No Sunday leave for Women: தினம்தினம் தொடர்கதையே!
தென்றலுடன் கலந்த தேனிசைத் தேவா
தேனிசை ஓய்ந்தது… நினைவுகள் ஓயவில்லை!
ஆனந்தம் அமைதி வேண்டுமென்றால் ..!
வைத்தியம் - ஒரு நிமிடக் கதை (39)
சிறகை விரி.. வா சேர்ந்து பறப்போம்!
தேவாதி தேவா.. தெருவோர கானாவை தேனாக்கியவரே!
3ம் குலோத்துங்க சோழன் காலத்தில் கட்டப்பட்ட.. கோயம்பேடு ஸ்ரீ வைகுண்டவாச பெருமாள் கோயில்
RIP Deva: ‘தேனிசைத் தென்றல்’ தேவா மறைந்தார்.. கண்ணீர் மல்க திரையுலகினர், ரசிகர்கள் அஞ்சலி!
{{comments.comment}}