Chennai Super Kings.. 3 ரவி.. RRR.. டெர்ரர் காட்டும் சூப்பர் கிங்ஸ்.. 2 நம்ம பசங்க.. களை வந்துருச்சு

Nov 25, 2024,10:13 AM IST
சென்னை: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் மீண்டும் தமிழக வீரர்கள் இடம் பெற்றுள்ளது தமிழ்நாட்டு கிரிக்கெட் ரசிகர்களை மகிழ வைத்துள்ளது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் முன்பு அஸ்வின், முரளி விஜய், லட்சுமிபதி பாலாஜி, பத்ரிநாத் என பலர் இடம் பெற்றிருந்தனர். ஆனால் போகப் போக தமிழ்நாட்டு வீரர்கள் இல்லாத நிலைக்கு  சென்னை சூப்பர் கிங்ஸ் போய் விட்டது. இது பல்வேறு வகையான சலசலப்புகளையும் கூட ஏற்படுத்தியது. அதேசமயம், இலங்கை வீரர்களுக்குக் கூட சென்னை அணியில் வாய்ப்பு அளிக்கப்பட்டதால் அது சர்ச்சையாகவும் மாறியது. நாம் தமிழர் கட்சி போராட்டம் எல்லாம் கூட நடத்தியது.

இந்த நிலையில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழ்நாட்டு வீரர்கள் இரண்டு பேருக்கு அணியில் வாய்ப்பு கிடைத்துள்ளது. ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் விஜய் சங்கர் என இரண்டு தமிழ்நாட்டு வீரர்களை ஏலத்தில் எடுத்துள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.

நேற்று ஜெட்டாவில் நடந்த முதல் நாள் ஏலத்தின்போது இந்த இரு வீரர்களையும் சென்னை அணி வாங்கி விட்டது. இதில் அஸ்வினை ரூ. 9.75 கோடிக்கும், விஜய் சங்கரை ரூ. 1.20 கோடிக்கும் ஏலம் எடுத்தது சென்னை அணி.

முதல் ஏலத்தின் முடிவில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம் பெற்றுள்ள வீரர்கள் விவரம்:



ருத்துராஜ் கெய்க்வாட் (கேப்டன்) (ரூ. 18 கோடி), எம்எஸ் தோனி (ரூ. 4 கோடி), மதீஷா பதிரதனா (ரூ. 13 கோடி), சிவம் துபே (ரூ. 12 கோடி), ரவீந்திர ஜடேஜா (ரூ. 18 கோடி), டேவன் கான்வே (ரூ. 6.25 கோடி) , ராகுல் திரிபாதி (ரூ. 3.40 கோடி), ரச்சின் ரவீந்திரா (ரூ. 4 கோடி), ஆர். அஸ்வின் (ரூ. 9.75 கோடி), கலீல் அகமது (ரூ. 4.80 கோடி), நூர் அகமது (ரூ. 10 கோடி),  விஜய் சங்கர் (ரூ.1. 20 கோடி).

இதில் நேற்று ஏலம் எடுக்கப்பட்டவர்களில் காஸ்ட்லியான விலைக்கு வாங்கப்பட்டவர் நூர் அகமது. அவரை ரூ. 10 கோடிக்கு எடுத்துள்ளனர். அடுத்து அஸ்வின், அவர் ரூ. 9.ச75 கோடிக்கு எடுக்கப்பட்டுள்ளார். மூன்றாவது இடம் கான்வேக்கு, அவரை ரூ. 6.25 கோடிக்கு ஏலம் எடுத்துள்ளனர்.

சென்னை அணியிடம் தற்போது ரூ. 15.6 கோடி மீதம் உள்ளது. ஆர்டிஎம் கார்டு கைவசம் இல்லை. வீரர்கள் காலியிடம் 13 ஆக உள்ளது. வெளிநாட்டு வீரர்கள் காலியிடம் 4 ஆக உள்ளது.

RRR வீரர்கள்.. குஷியில் ரசிகர்கள்



சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தற்போது ரவிச்சந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, ரச்சின் ரவீந்திரா என்று ரவி என்ற பெயர் கொண்ட 3 வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். இதை வைத்து RRR என்று போட்டு புளகாங்கிதம் அடைந்துள்ளது சென்னை அணி. ரசிகர்களுக்கும் அதே குஷிதான்.

இந்திய அணியில் மிகச் சிறந்த பவுலர்களாகவும், ஆல் ரவுண்டர்களாகவும் மட்டுமல்லாமல் நல்ல நண்பர்களாகவும் வலம் வருபவர்கள் அஸ்வினும், ஜடேஜாவும். இந்த ஜோடி மிக நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் சென்னை அணியில் இணைந்து விளையாடவிருப்பது ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.

ஆக மொத்தம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதல் நாள் ஏலத்திற்குப் பிறகு பெரிய அளவில் ஏமாற்றம் தராத வகையில் நல்ல வீரர்களை எடுத்துள்ளது. இன்று யாரையெல்லாம் எடுக்கப் போகிறார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.


செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

சாத்தான்குளம் தந்தை-மகன் லாக்கப் மரண வழக்கு: குற்றவாளிகள் 9 பேருக்கும் மரண தண்டனை

news

தமிழக சட்டசபைத் தேர்தல் 2026 : வேட்புமனு தாக்கல் நிறைவடைந்தது.. நாளை மனுக்கள் பரிசீலனை

news

இது GenZ காலம்.. திருமணங்களுக்கு முற்றுப்புள்ளியா?

news

ஐபிஎல் டி20 கிரிக்கெட் 2026 : இன்று கோல்கத்தா- பஞ்சாப் அணிகள் மோதல்

news

Mayiladuthurai Kitchen: மைக்ரோவேவ் இல்லாமல் ரவா கேக்கா?.. ஆமாங்க ஆமா!

news

கோவில் மணி.. Temple bell.. அடிப்பதால் என்னெல்லாம் சிறப்பு இருக்கு தெரியுமா?

news

சொல்லாமலே புரியும் அன்னை வீடு… சொல்லியும் புரியாத புகுந்த வீடு!

news

Monday Motivation: புதையுண்டு காத்திருந்தேன்.. பல்லூழிக்காலமாய்.. காலம் உயர்த்தும்!

news

இயற்கை ஒரு மாபெரும் ஆசிரியர்... The greatest lessons I have learnt is

அதிகம் பார்க்கும் செய்திகள்