அகமதாபாத் : ஐபிஎல் 2025 கிரிக்கெட் இறுதிப் போட்டியில் பெங்களுரு அணி, 6 ரன்கள் வித்தியாசத்தில் கடைசி நிமிடத்தில் த்ரில் வெற்றி பெற்று, கோப்பையை கைப்பற்றி உள்ளது.
பெங்களூரு அணியின் 18 வருட கனவு இன்று ஆனந்தக் கண்ணீருடன் நனவாகியுள்ளது. கடைசி வரை போராடிய பஞ்சாப் அணியை பெங்களூரு அணி பவுலர்கள் சாமர்த்தியமாக தடுத்து நிறுத்தி வெற்றியைத் தட்டிச் சென்றனர்.
நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் தலா 14 போட்டிகளில் வெற்றி பெற்று சம பலத்துடன் பெங்களுரு-பஞ்சாப் அணிகள் பைனலில் களமிறங்கின. இதில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி பவுலிங்கை தேர்வு செய்தது. இதனால் முதலில் களம் இறங்கிய பெங்களுரு அணி ஆரம்பம் முதலே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தது. அதே சமயம் பஞ்சாப் அணி கொடுத்த அதிரடி பந்து வீச்சை தாக்கு பிடிக்க முடியாமல் விக்கெட்டுகளையும் அடுத்தடுத்து இழந்தது பெங்களுரு அணி.

நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு பெங்களுரு அணி 190 ரன்கள் எடுத்திருந்தது. பெங்களுரு அணியில் அதிகபட்சமாக விராத் கோலி 43 ரன்கள் எடுத்திருந்தார். பஞ்சாப் அணியில் அதிகபட்சமாக கெய்ல் ஜெய்ம்சன் 48 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்களை கைப்பற்றி இருந்தார். இந்நிலையில் 191 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது பஞ்சாப் அணி. ஆரம்பத்தில் சற்று அதிரடி காட்டினாலும், பஞ்சாப் அணியின் ரன் வேகம் ஆசை வேகத்திலேயே உயர்ந்து வந்தது.
முதல் 5 ஓவர்கள் வரை விக்கெட் எடுக்க முடியாமல் திணறி வந்த பெங்களுரு அணி, பிறகு சுதாரித்துக் கொண்டு அடுத்தடுத்த விக்கெட்களை லாவகமாக தூக்கியதுடன், ரன் வேகத்தையும் கட்டுப்படுத்தியது. இதனால் பஞ்சாப் அணி ரன் எடுக்க முடியாமல் சற்று திணறியது. பஞ்சாப் அணியில் அந்த அணியின் விக்கெட் கீப்பரான ஜோஷ் இங்லிஷ் 39 ரன்கள் அடித்தார்.
பெங்களுரு அணியில் குர்னல் பாண்டியா 2 விக்கெட்களையும் , ரோமாரியோ ஷேஃபர்டு, ஜோஷ் ஹஸ்லிவுட் ஆகியோர் தலா ஒரு விக்கெட்களை கைப்பற்றினர். பந்துக்கு பந்து த்ரில்லான மாற்றங்களை ஏற்படுத்தி வந்த போட்டியில் கடைசி நேரத்தில் 6 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களுரு அணி த்ரில் வெற்றி பெற்று, ஐபிஎல் 2025 சாம்பியன் கோப்பையை கைப்பற்றியது. ஆட்ட நேர இறுதியில் பஞ்சாப் அணி 7 விக்கெட் இழப்பிற்கு 184 ரன்கள் மட்டுமே எடுத்தது. பெங்களுரு அணியின் வெற்றியை கண்டு விராத் கோஹ்லி ஆனந்த கண்ணீர் வடித்தார்.
18 ஆண்டுகளில் முதல் முறையாக ஐபிஎல் கோப்பையை வென்றது பெங்களுரு அணி. கிருனாள் பாண்டியா, புவனேஷ்வர் குமார் ஆகியோர் தலா 2 விக்கெட்களையும், யாஷ் தயாள் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்
ஏகப்பட்ட பிரச்சினை: சுறுசுறுப்பு காட்டும் தமிழக அரசியல் கட்சிகள்.. அடுத்தடுத்து போராட்டம் அறிவிப்பு
ஆண் மகனை அவனாகவே வாழ விடுங்கள்!
நாகர்கோவில் சிறையில் கைதி கொலை: CBCID விசாரணைக்கு மாற்றி தமிழ்நாடு அரசு உத்தரவு!
முதல்வரை மிரட்டிய வழக்கு: திமுக எம்எல்ஏ மார்கண்டேயனின் ஜாமீன் மனு தள்ளுபடி!
நீட் வினாத்தாள் கசிவு விவகாரம்: விரிவான விவாதம் நடத்த தயார் - மத்திய அரசு அறிவிப்பு
நீட் தேர்வு போராட்டம்.. இதைத்தான் தொடர்ந்து சொல்லி வருகிறது திமுக.. மு.க.ஸ்டாலின்
ராகுல் காந்தி கைது வன்மையாக கண்டிக்கத்தக்கது.. முதல்வர் விஜய் கண்டனம்
போதையில் கார் ஓட்டிய வழக்கு: ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னருக்கு சிறை தண்டனையா?
முடிவுக்கு வந்தது பாமக விவகாரம்...அன்புமணிக்கு எதிரான வழக்கை வாபஸ் பெற்ற ராமதாஸ்
{{comments.comment}}