IPL 2025 Finals.. அனல்பறக்கும் அகமதாபாத்.. கோப்பைக்கனவை நனவாக்கப் போவது யார்?.. முதலில் RCB பேட்டிங்

Jun 03, 2025,07:32 PM IST
அகமதாபாத்: 2025ம் ஆண்டு ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி டாஸ் வென்று முதலில் பீல்டிங்கைத் தேர்வு செய்துள்ளது.

இன்றைய இறுதிப் போட்டியில் மோதும் பஞ்சாப் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் ஐபிஎல் வரலாற்றில் இதுவரை ஒரு முறை கூட கோப்பையைக் கைப்பற்றியதில்லை. இதனால் இரு அணிகளின் ரசிகர்களும் பெரும் எதிர்பார்ப்புடன் உள்ளனர். இன்று யார் கோப்பையை வென்றாலும் அது புதிய சாதனையாக இருக்கும்.



பஞ்சாப் அணி கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் புதிய சாதனையுடன் இறுதிப் போட்டிக்கு வந்துள்ளார். அதாவது 3 அணிகளை இறுதிப் போட்டிக்கு அழைத்து வந்த முதல் கேப்டன் என்ற பெருமைதான் அது. முதலில் டெல்லி கேப்பிடல்ஸையும், பின்னர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியையும் அவர்  இறுதிப் போட்டிக்கு இட்டுச் சென்றுள்ளாார். இதில் கொல்கத்தா பட்டம் வென்றுள்ளது. இப்போது அதே பெருமையை பஞ்சாப் அணிக்கும் ஐயர் தேடிக் கொடுப்பாரா என்ற ஆர்வத்தில் ரசிகர்கள் உள்ளனர்.

போட்டி அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறுகிறது. எள் விழுந்தால் எண்ணையாகி விடும் என்று சொல்லும் அளவுக்குக் கூட்டம் நிரம்பி வழிகிறது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

மக்களே உஷார்... இன்று 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு... சென்னை வானிலைம மையம்!

news

குடியரசுத் துணைத் தலைவர் பதவி.. பீகார் முதல்வர் நிதீஷ் குமாரை நிறுத்த பாஜக திட்டம்?

news

மருத்துவமனையில் இருந்தபடியே.. கலெக்டர்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை!

news

TNPSC குரூப் 4 தமிழ்ப் பாடத்துக்கான தேர்வை ரத்து செய்து மறுதேர்வு நடத்த வேண்டும்: அண்ணாமலை

news

தயாரிப்பு நிறுவனம் தொடர்ந்த வழக்கு: நடிகர் ரவி மோகனுக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவு!

news

Indoor and Outdoor plant.. மணி பிளான்ட்:.. மணி மணியா வளர்க்கலாம்.. அழகா இருக்கும்!

news

தமிழக மக்கள் உரிமை மீட்புப் பயணம்: உரிமை மீட்க... தலைமுறை காக்க... இலட்சினையை வெளியிட்டது பாமக!

news

தமிழகம் முழுவதும் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது... மதுரை ஆதினத்தை துன்புறுத்தக்கூடாது: அண்ணாமலை

news

வானில் ஒரு அதிசயம்.. ஆனால் வரும் ஆகஸ்ட் மாதம் இல்லையாம்.. 2027ல்தான் நடக்கப் போகுதாம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்