சென்னை: 2025ம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் மார்ச் 22ம் தேதி தொடங்குகிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முதல் போட்டி மார்ச் 23ம் தேதி மும்பை இந்தியன்ஸுடன் நடைபெறவுள்ளது. முதல் போட்டியை சென்னை சேப்பாக்கம் எம்.ஏ. சிதம்பரம் ஸ்டேடியத்தில் விளையாடவுள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ்.
2025ம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடருக்கான அட்டவணை இன்று வெளியாகியுள்ளது. அதன்படி மார்ச் 22ம் தேதி முதல் போட்டி நடைபெறவுள்ளது. தொடக்க விழாவைத் தொடர்ந்து முதல் போட்டி நடைபெறும். முதல் போட்டியில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் கொல்கத்தாவில் நடைபெறும் போட்டியில் சந்திக்கவுள்ளன.
சென்னையைப் பொறுத்தவரை முதல் போட்டி மார்ச் 23ம் தேதி நடைபெறும். முதல் போட்டியிலேயே பரம வைரியான மும்பை இந்தியன்ஸை சந்திக்கிறது சென்னை சூப்பர் கிங்ஸ். சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கலந்து கொள்ளவுள்ள சுற்றுப் போட்டிகள் விவரம்:

மார்ச் 23 - சென்னை சூப்பர் கிங்ஸ் - மும்பை இந்தியன்ஸ் (சென்னை)
மார்ச் 28 - சென்னை சூப்பர் கிங்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு ((சென்னை)
மார்ச் 30 - சென்னை சூப்பர் கிங்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் (குவஹாத்தி)
ஏப்ரல் 5 - சென்னை சூப்பர் கிங்ஸ் -டெல்லி கேப்பிடல்ஸ் (சென்னை)
ஏப்ரல் 8 - சென்னை சூப்பர் கிங்ஸ் -பஞ்சாப் கிங்ஸ் (முல்லான்பூர்)
ஏப்ரல் 11 - சென்னை சூப்பர் கிங்ஸ் -கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (சென்னை)
ஏப்ரல் 14 - சென்னை சூப்பர் கிங்ஸ் - லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் (லக்னோ)
ஏப்ரல் 20 - சென்னை சூப்பர் கிங்ஸ் - மும்பை இந்தியன்ஸ் (மும்பை)
ஏப்ரல் 25 - சென்னை சூப்பர் கிங்ஸ் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (சென்னை)
ஏப்ரல் 30 - சென்னை சூப்பர் கிங்ஸ் -பஞ்சாப் கிங்ஸ் (சென்னை)
மே 3 - சென்னை சூப்பர் கிங்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (பெங்களூரு)
மே 7 - சென்னை சூப்பர் கிங்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (கொல்கத்தா)
மே 12 - சென்னை சூப்பர் கிங்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் (சென்னை)
மே 18 - சென்னை சூப்பர் கிங்ஸ் -குஜராத் டைட்டன்ஸ் (அகமதாபாத்)
மே 18ம் தேதியுடன் சுற்றுப் போட்டிகள் முடிவடையும். மே் 20ம் தேதி குவாலிபயர் 1 போட்டி ஹைதராபாத்தில் நடைபெறும். எலிமினேட்டர் போட்டி அதே ஹைதராபாத்தில், மே 23ம் தேதி நடைபெறும். குவாலிபயர் 2 போட்டியும், இறுதிப் போட்டியும் கொல்கத்தாவில் நடைபெறவுள்ளன. குவாலிபயர் 2 போட்டி மே 23ம் தேதியும், இறுதிப் போட்டி 25ம் தேதியும் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுவரை சாம்பியன்கள்

2008ம் ஆண்டு முதல் ஐபிஎல் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதுவரை 17 சாம்பியன்கள் உருவாகியுள்ளனர். அதிகபட்சமாக சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் தலா 5 பட்டங்களை வென்றுள்ளன. இதற்கு அடுத்து கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 3 முறை சாம்பியனாகியுள்ளது.
ராஜஸ்தான் ராயல்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத், டெக்கான் சார்ஜர்ஸ், குஜராத் டைட்டன்ஸ் ஆகிய அணிகள் தலா ஒருமுறை பட்டம் வென்றுள்ளன. நடப்புச் சாம்பியனாக இருப்பது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ஆகும்.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி இதுவரை 3 முறை இறுதிப் போட்டிக்கு முன்னேறி ரன்னர் அப் ஆகியுள்ளது. இந்த முறை சாம்பியன் ஆகப் போகும் அணி என்ற எதிர்பார்ப்பு இப்போதே கிளம்பி விட்டது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தோனியும் விளையாடுகிறார் என்பதால் ஐபிஎல் தொடர் முழுவதும் விறுவிறுப்பாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.
Iran Attack: புரட்டி எடுக்கும் அமெரிக்கா, இஸ்ரேல்.. அலி கமேனிக்கு ஏதாவது நடந்தால்.. அடுத்து என்ன?
தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம்!
கடலாடும் மாதம்.. மாசி மாதத்து சிறப்பு.. திருத்தணியில் பெருவிழா காணும் எம்பெருமான் முருகன்!
திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு: எங்களுக்குள் எந்தப் பிரச்சனையும் இல்லை - செல்வப்பெருந்தகை உறுதி!
களை கட்டும் மதுரை.. நாளை வருகிறார் பிரதமர் நரேந்திர மோடி.. பரபரக்கும் பாஜக பிரச்சாரம்
ஊடகங்கள், யூடியூப்களில் விவாதிக்கத் தடை விதியுங்கள்.. கோர்ட்டுக்கு கோரிக்கை வைத்த சங்கீதா
ஈரான் மீது வான்வழி தாக்குதலை தொடங்கியது இஸ்ரேல்!
ஏன் யோசி.. எதற்காக எழுது.. எப்படி கண்டுபிடி.. மூடனாக இல்லாமல் .. அறிஞனாக மாறு!
அறிவியலே முன்னேற்றத்தின் அடிப்படை.. இந்தியாவைக் கொண்டாட வேண்டிய தருணம்!
{{comments.comment}}