ஐபிஎல் 2026: லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் - டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் இன்று பலப்பரீட்சை!

Apr 01, 2026,06:29 PM IST

லக்னோ: 2026-ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா விறுவிறுப்பாகத் தொடங்கி நடைபெற்று வருகிறது. மார்ச் 28-ஆம் தேதி தொடங்கிய இந்தத் தொடரில், இதுவரை நான்கு போட்டிகள் நிறைவடைந்துள்ளன. அந்த வரிசையில் இன்று (ஏப்ரல் 1) நடைபெறும் ஐந்தாவது லீக் போட்டியில், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும் மோதுகின்றன.


லக்னோவில் உள்ள அடல் பிகாரி வாஜ்பாய் ஏகானா மைதானத்தில் இன்று இரவு 7:30 மணிக்குப் போட்டி தொடங்கவுள்ளது. 


நடப்புத் தொடரின் முதல் நான்கு போட்டிகளில் பெங்களூர், மும்பை, ராஜஸ்தான் மற்றும் பஞ்சாப் ஆகிய அணிகள் தங்களது முதல் வெற்றியைப் பதிவு செய்துள்ளன. இதுவரை விளையாடிய ஒரு போட்டியில் தோல்வியைத் தழுவியதால், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி புள்ளிகள் பட்டியலில் பத்தாவது இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது.




மொத்தம் 70 லீக் போட்டிகள் கொண்ட இந்தத் தொடரில், இன்று நடைபெறவிருப்பது 5-வது போட்டியாகும். லக்னோ மற்றும் டெல்லி ஆகிய இரு அணிகளுமே இந்த சீசனில் விளையாடும் முதல் போட்டி இது என்பதால், வெற்றிக் கணக்கைத் தொடங்க இரு அணிகளும் தீவிரமாகப் போராடும். இன்றைய போட்டியில் வெற்றி பெறும் அணி, புள்ளிகள் பட்டியலில் டாப் 5 இடங்களுக்குள் நுழைய வாய்ப்புள்ளது.


சொந்த மண்ணில் லக்னோ அணி விளையாடுவதால் அந்த அணிக்கு ஆதரவு அதிகமாக இருக்கும் என்றாலும், ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி அணி கடும் சவால் அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த விறுவிறுப்பான ஆட்டத்தைக் காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

நவம்பர் 1-க்குள் தமிழில் கடையின் பெயர் பலகைகள்...சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

news

"பூச்சாண்டிகளுக்கு எல்லாம் அஞ்சிட மாட்டோம்": கே.என்.நேரு வீடு ரெய்டிற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்!

news

"ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர்": தவெக கூட்டணி குறித்து மாணிக்கம் தாகூர் பரபரப்பு பேட்டி!

news

"ஸ்கிரீன் டைம் போதையாக மாறிவிட்டது" – பிரதமர் நரேந்திர மோடி எச்சரிக்கை!

news

பெண்களை இழிவுபடுத்தும் விளம்பரங்களை வைக்கலாமா.. மெட்ரோவுக்கு சு. வெங்கடேசன் கேள்வி

news

முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ அசன் மௌலானாவுக்கு 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடத் தடை

news

திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை

news

மாணவர்கள் வளர்ச்சி கண்டு பெருமைப்படும் பேரான்மாக்கள்.. ஆசிரியர்கள்!

news

கல்வி என்னும் நறுந்தேனை.. சுவைக்கச் செய்யும் இளங்காற்று நாமே!

அதிகம் பார்க்கும் செய்திகள்