ஈரான் அதிபர் இப்ராகிம் ரைசி சென்ற ஹெலிகாப்டர்... விபத்துக்குள்ளானது.. மீட்புப் படைகள் விரைந்தன!

May 19, 2024,07:18 PM IST

டெஹ்ரான்: ஈரான் அதிபர் இப்ராகிம் ரைசி பயணித்த ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சம்பவ இடத்திற்கு மீட்புப் படையினர் விரைந்துள்ளதாக ஈரான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.


ஈரான் அதிபர் இப்ராகிம் ரைசி மற்றும் அவரது உதவியாளர்கள் உள்ளிட்டோர் ஹெலிகாப்டர்களில் பயணித்துக் கொண்டிருந்தனர். மொத்தம் 3 ஹெலிகாப்டர்களில் அவர்கள் சென்றனர். அப்போது கிழக்கு அஜர்பைஜான் மாகாணத்தில் உள்ள வர்சிகான் என்ற இடத்தில் இரண்டு ஹெலிகாப்டர்கள் தரையிறங்கிய நிலையில் இன்னொரு ஹெலிகாப்டர் வேகமாக கீழே வந்து மோதி விட்டதாக கூறப்படுகிறது. 




அந்த ஹெலிகாப்டரில் யார் இருந்தார்கள், அதிபர் இருந்தாரா, அவருடன் யாரெல்லாம் இருந்தார்கள் என்று தெரியவில்லை. அதிபர் இப்ராகிம் அதில்தான் இருந்ததாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது. சம்பவ இடத்திற்கு செம்பிறை மீட்புப் படையினர் விரைந்து சென்றுள்ளனர்.


இதுகுறித்து கிழக்கு அஜர்பைஜான் மாகாண .துணை ஆளுநர் அலி ஜகாரி கூறுகையில், இதுகுறித்த முழுவிவரம் என்னிடம் இல்லை. 3 ஹெலிகாப்டர்களில் இரண்டு பத்திரமாக தரையிறங்கிய நிலையில் 3வது ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளாகியுள்ளது. சம்பவ இடத்திற்கு நான் செல்லவுள்ளேன் என்றார்.


ஈரான் அதிபரின் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதாக வெளியான தகவலால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சமீப காலமாக இஸ்ரேலுடன் கடுமையான மோதல் போக்கில் ஈரான் ஈடுபட்டுள்ளது. இஸ்ரேல் மீது அது ஏவுகணைத் தாக்குதலையும் நடத்தியது என்பது நினைவிருக்கலாம். இந்த நிலையில் இப்படி ஒரு செய்தி வந்துள்ளது.


சமீபத்திய செய்திகள்

news

அம்பிகையும், சொக்கரும் கை கோர்த்து அரசாண்ட மதுரை.. மீனாட்சி சுந்தரேஸ்வரர் சிறப்புகள்!

news

சார் மேடம் எங்கே.. அசர வைத்த ஏர்ஹோஸ்டஸ்.. மறக்க முடியாத பாஸ்டன் விமான பயணம்!

news

யானை பூனையாச்சு நீல வானத்தில் வெண்பஞ்சு திரள்.. மூவரி கவிதைகள்!

news

Happay Vinayagar Chaturthi: முழுமுதற் கடவுளே துணை நீயே

news

பட்டிமன்றத்தை பட்டி தொட்டியெங்கும் பயணிக்க வைத்த பண்பாட்டுத் தமிழன்!

news

Tasty Lunch Recipes: கமகமக்கும்.. சுவையான உருண்டை குழம்பு

news

பாலும் தெளிதேனும் பாகும் பருப்பும்.. இலக்கியத்தில் விநாயகர்!

news

அசுரனை அழிக்க ஆவணி சதுர்த்தியில் அருளிய விநாயகப் பெருமான்!

news

கருத்து மிகுந்தவளே கருத்துக்காளை மருமகளே உருத்தான சொந்தம் நீ உசுரான பந்தம் நீ!

அதிகம் பார்க்கும் செய்திகள்