டெஹ்ரான்: ஈரான் மீது இஸ்ரேல் அணு ஆயுதத்தைப் பயன்படுத்தினால், எங்களுக்காக பாகிஸ்தான், இஸ்ரேல் மீது அணு குண்டு வீசும் என்று ஈரான் ராணுவ தளபதி ஒருவர் கூறியுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஈரான் மீதான தாக்குதலை இஸ்ரேல் தொடங்கி வைத்த நிலையில் தற்போது இரு நாடுகளுக்கும் இடையே கடும் சண்டை மூண்டுள்ளது. இரு தரப்பும் ஏவுகணைகளால் சரமாரியாக தாக்கிக் கொண்டுள்ளன. இதில் ஏராளமான உயிர்ப்பலிகள் நிகழ்ந்துள்ளன.
இந்த நிலையில் ஈரான் - இஸ்ரேல் போரில் பாகிஸ்தானும் ரகசியமான சில வேலைகளில் இறங்கியுள்ளதாக ஈரான் ராணுவ தளபதிகளில் ஒருவரான மொஹ்சென் ரெஸாயி கூறியுள்ளார். ஈரானிய அரசின் தொலைக்காட்சிக்கு அளித்த நேர்காணலின்போது, ஜெனரல் மொஹ்சென் ரெஸாயியின் கூறுகையில், இஸ்ரேல் ஈரானின் மீது அணுகுண்டை ஏவினால், பதிலுக்கு அணு ஆயுதத்தால் இஸ்ரேலைத் தாக்கிப் பழிவாங்குவோம் என்று பாகிஸ்தான் எங்களுக்கு உறுதியளித்துள்ளது.

ஈரானுக்குப் பின்னால் உறுதுணையாக நிற்போம். முஸ்லிம் உலகம் ஒன்றுபட வேண்டும் என்று பாகிஸ்தான் சூளுரைத்துள்ளது. எங்களிடம் இதுவரை நாங்கள் வெளிப்படுத்தாத திறன்கள் உள்ளன. அவற்றை நாங்கள் வெளிப்படுத்துவோம் என்றார் அவர்.
பாகிஸ்தானின் இந்த உத்தரவாதத்தை யார் கொடுத்தார்கள் என்று தெரியவில்லை. ஆனால் ஈரானுக்கு ஏற்பட்டுள்ள சிக்கலைப் பயன்படுத்தி இந்தியாவுக்கு எதிராக கேம் ஆட பாகிஸ்தான் முனைவதாக சந்தேகம் எழுந்துள்ளது. இஸ்ரேலுக்கு எதிராக அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவது குறித்து பாகிஸ்தான் இதுவரை எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை. இருப்பினும், இஸ்ரேலுக்கு எதிரான போரில் பாகிஸ்தான் ஈரானுக்கு ஆதரவாகவே இருந்து வருகிறது. ஒவ்வொரு விதத்திலும் ஈரானுக்குத் துணையாக நிற்போம்; ஈரானிய நலன்களைப் பாதுகாப்போம் என்று பாகிஸ்தானின் பாதுகாப்புத் துறை அமைச்சர் கவாஜா ஆசிப் கடந்த வாரம் தெரிவித்திருந்தார்.
உலக அளவில் 9 நாடுகளிடம் அணு ஆயுதங்கள் உள்ளன. அவற்றில் இஸ்ரேலும், ஈரானும் உள்ளடக்கம். பாகிஸ்தானிடமும் அணு ஆயுதங்கள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
அம்பிகையும், சொக்கரும் கை கோர்த்து அரசாண்ட மதுரை.. மீனாட்சி சுந்தரேஸ்வரர் சிறப்புகள்!
சார் மேடம் எங்கே.. அசர வைத்த ஏர்ஹோஸ்டஸ்.. மறக்க முடியாத பாஸ்டன் விமான பயணம்!
யானை பூனையாச்சு நீல வானத்தில் வெண்பஞ்சு திரள்.. மூவரி கவிதைகள்!
Happay Vinayagar Chaturthi: முழுமுதற் கடவுளே துணை நீயே
பட்டிமன்றத்தை பட்டி தொட்டியெங்கும் பயணிக்க வைத்த பண்பாட்டுத் தமிழன்!
Tasty Lunch Recipes: கமகமக்கும்.. சுவையான உருண்டை குழம்பு
பாலும் தெளிதேனும் பாகும் பருப்பும்.. இலக்கியத்தில் விநாயகர்!
அசுரனை அழிக்க ஆவணி சதுர்த்தியில் அருளிய விநாயகப் பெருமான்!
கருத்து மிகுந்தவளே கருத்துக்காளை மருமகளே உருத்தான சொந்தம் நீ உசுரான பந்தம் நீ!
{{comments.comment}}