- மயிலாடுதுறை த.சுகந்தி,M.Sc,B.Ed
தலைப்பை பார்த்ததும் வியப்பாக இருக்கிறதா? வெண்டைக்காய் என்றால் நாம் சமைப்பதற்கு தானே பயன்படுத்துவோம் என்று தோன்றுகிறதா?
வாங்க வெண்டைக்காயைப் பற்றி தெரிந்து கொள்வோம்.
வெண்டைக்காய் நாம் அன்றாடம் சமைக்க பயன்படுத்தும் ஒரு ஆரோக்கியமான காய்கறியாகும்.
வெண்டைக்காய் குழந்தைகளுக்கு கொடுத்தால் கண்களுக்கும், மூளைக்கும் நல்லது என்றும், கணிதம் நன்றாக போடுவார்கள் என்று கேள்விப்பட்டிருப்போம்.
வெண்டைக்காயை சிறிதாக நறுக்கி தண்ணீரில் ஊற போட்டு கொடுத்தால் சர்க்கரை நோயாளிகளுக்கு நல்லது என்று கேள்விப்பட்டிருப்போம்.
வெண்டைக்காயை பச்சையாக மென்று சாப்பிட்டால் உடலுக்கு நல்லது என்று கேள்விப்பட்டிருப்போம்.
வெண்டைக்காய் எப்படி விளையாட்டு பொருளாக பயன்படுகிறது என்று பார்ப்போம்.
இன்று நாம் சமைப்பதற்காக பயன்படுத்தும் இந்த வெண்டைக்காயை ஒரு சின்ன விளையாட்டு பொருளாகவும் மாற்றி பயன்படுத்தலாம் என்பதை தெரிந்து கொள்வோம்.
விளையாட்டு பொருட்கள் என்றாலே கடைகளில் பணம் கொடுத்து வாங்க வேண்டும் என்பதல்ல. வீட்டில் எளிதாக கிடைக்கும் பொருட்களை பயன்படுத்தியும் நாம் மகிழ்ச்சியாக விளையாட முடியும் என்பதை தெரிந்து கொள்வோம்.
வெண்டைக்காயை நறுக்கும்போது வரும் ஒட்டும் தன்மையை (வழவழப்பாக காணப்படுவது) அதை முகத்தில் ஒட்டி பார்க்கலாம்.

நமது நெற்றிலும் ,கன்னத்திலும், மூக்கிலும் தாடையிலும் ஓட்டி கோமாளி பொம்மை போல் விளையாடி மகிழலாம். சம்மருக்கேற்ற ஜாலியான விளையாட்டுங்க இது.
முற்றிய வெண்டைக்காய் அல்லது பூச்சி வெண்டைக்காய் இருப்பதை குழந்தைகளிடம் கொடுத்து அவர்களுக்கு ஏற்றார் போல் ஓவியம் வரைந்து வெண்டைக்காய் பெயிண்டிங் செய்ய சொல்லலாம்.
இன்றைய காலகட்டத்தில் மறந்து வரும் வெண்டைக்காய் பெயிண்டிங் நாம் குழந்தைகளுக்கு கற்றுக் கொடுப்போம்.
குழந்தைகளுக்கு ஒரு புதுமையான மற்றும் வேடிக்கையான விளையாட்டாக காணப்படுகிறது. குழந்தைகள் இப்படிப் விளையாடும்போது ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்துக் கொண்டிருப்பார்கள். அவர்களின் முகம் கோமாளி பொம்மையைப் போல தோன்றும். இது அவர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் தரும்.
நாம் சமைக்கும் நேரத்தில் குழந்தைகளை அருகில் உட்கார வைத்து, அவர்களுடன் பேசிக்கொண்டே இப்படிப் playful ஆக விளையாடினால், அவர்கள் கவலைகளை மறந்து சிரிப்பார்கள்.
இது பெற்றோர் மற்றும் குழந்தைகள் இடையேயான உறவையும் வலுப்படுத்துகிறது. குழந்தைகளுக்கு விளையாட்டு பொருட்களை வைத்து விளையாடுவதை விட இப்படி விதவிதமாக விளையாடும் போது அவர்களுக்கு ஆர்வம் அதிகமாக காணப்படுகிறது.
நாம் சமைத்துக் கொண்டிருக்கும் பொழுது குழந்தைகளை அருகில் உட்கார சொல்லி சிறுசிறு பொருட்களை எடுத்து வர சொல்லியும், வெண்டைக்காய் காம்பினை முகத்தில் ஒட்டிக்கொண்டு கண்ணாடியில் போய் பார்க்க சொல்லி விளையாடி மகிழ்வோம்.
நீங்களும் உங்கள் வீட்டில் இப்படிப் பட்ட எளிய மற்றும் மகிழ்ச்சியான விளையாட்டை செய்து பார்த்து மகிழுங்கள்!
கோடை விடுமுறையை பயனுள்ளதாக கழிப்போம்.
(த.சுகந்தி, மயிலாடுதுறையைச் சேர்ந்தவர். அருள் தமிழ் இலக்கியம், மயிலாடுதுறை அமைப்பை நடத்தி வருகிறார். ஆத்திச்சூடி 109, நாலடியார், திருக்குறள் போன்ற தொகுப்பு நூல்களில் சிறுகதை ஒன்று எழுதி உள்ளார். பாரதியார் நவீன ஆத்திச்சூடி எழுதி மகாகவி பாரதி விருது பெற்றுள்ளார்.)
GenZ வேற லெவல்தான்.. நிஜ காதலியை விட.. ஏஐ காதலிதான் ரொம்ப பிடிச்சிருக்காம்!
Ladies Finger: வெண்டைக்காய் ஒரு விளையாட்டு பொருளா?
மனம் திறந்து பேசுதடா .. மாந்தோப்பில் கிளி இரண்டு!
Tamil Short Story: நிலாவின் மந்திரச் சொல்!
கற்ற கல்வி உதவுமா?
M Bharathi Poem: ஆட்சி!
அர்கியம் அமைப்பின் AI-ஆதார் செயலி அறிமுகம்
நிலவின் கவிதை!
எங்கே எனது கவிதை!
{{comments.comment}}