சியோல் : பணிச்சுமை தாங்க முடியாமல் மாடி படிக்கட்டில் இருந்து "குதித்து" ரோபோ ஒன்று தற்கொலை செய்து கொண்டதாக வெளியான தகவல் தென் கொரியாவை மட்டுமல்ல, உலக நாடுகளையும் விஞ்ஞான உலகத்தையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. உண்மையில் என்ன தான் நடந்தது என்ற தகவலை தெரிந்து கொள்ள பலரும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
நம்ம ஊரில்தான் சினிமாவில் ரோபோக்களை அதிசயப் பொருள் போல காட்டிக் கொண்டிருக்கிறோம். ஆனால், தென் கொரியாவில் ரோபோக்கள் அதிக அளவில் பல்வேறு பணிகளில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. வீடுகள், தொழிற்சாலைகள் உள்ளிட்ட பல இடங்களிலும் ரோபோக்கள் வேலைக்காக பயன்படுத்தப்பட்டு வருகின்றன. மனிதர்கள் செய்யும் வேலைகளை செய்வதற்காக பல ரோபோக்கள் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டு, தயாரிக்கப்பட்டும் வருகின்றன.
மனிதர்கள் 10 பேர் செய்யும் வேலைகளை ஒரே ஒரு ரோபோ செய்யம் வகையில் இவைகள் புரோகிராமிங் செய்யப்படுகின்றன. அந்த வகையில், Gumi city council எனப்படும் குடியிருப்பு ஒன்றிலும் ரோபோ பணி அமர்த்தப்பட்டுள்ளது.
2023ம் ஆண்டு முதல் இங்கு பணியில் இருக்கும் இந்த ரோபோ, குடியிருப்புவாசிகளுக்கு தேவையான பொருட்களை டெலிவரி செய்வது, தகவல்களை பகிர்வது, குடியிருப்புவாசிகள் தொடர்பான ஆவணங்களை கையாள்வது போன்ற வேலைகளை செய்து வந்துள்ளது. மற்ற ரோபோக்கள் முதல் மாடியில் மட்டுமே வேலைக்கு பயன்படுத்தப்பட்டு வந்த நிலையில், குறிப்பிட்ட ஒரு ரோபோ சிறப்பாக பணியாற்றியதால் 6வது, 7வது மாடிகளுக்கும் வேலைகள் செய்ய அனுப்பப்பட்டது. இந்த ரோபோவை அனைவரும் ரோபோ சூப்பர்வைசர் என்று அழைத்து வந்துள்ளனர்.
இந்நிலையில் இந்த ரோபோ சூப்பர்வைசர் சமீபத்தில் 7வது மாடியில் உள்ள படிக்கட்டியில் இருந்து கீழே விழுந்து நொறுங்கி உள்ளது. விறுவிறுவென சுற்றிக் கொண்டிருந்த அந்த ரோபோ, கட்டளைகளுக்கு ஏற்ப நடக்காமலும், அதற்கு இடப்பட்ட வேலைகளை செய்ய மறுத்தும் விநோதமாக நடந்து கொண்டிருந்ததாகவும், பிறகு பின் மாடியில் இருந்து கீழே விழுந்துள்ளதாகவும் அங்குள்ளவர்கள் கூறுகிறார்கள். அதிகமான வேலை கொடுக்கப்பட்டதால் வேலைப்பளு தாங்க முடியாமல் இது தற்கொலை செய்து கொண்டதாக சொல்லப்படுகிறது.
தற்கொலையா.. இல்லை டெக்னிக்கல் பிராப்ளமா!
விழுந்து நொறுங்கிய ரோபோவின் பாகங்கள் சேகரிக்கப்பட்டு நிபுணர்கள் ஆய்விற்காக அனுப்பப்பட்டுள்ளது. உண்மையிலேயே ரோபோ தற்கொலை செய்து கொண்டதா என விசாரிக்கப்பட்டு வருகிறது. ஒருவேளை உண்மையிலேயே ரோபோ தற்கொலை செய்து கொண்டது உறுதி செய்யப்பட்டால் இதுவே முதல் ரோபோ தற்கொலை சம்பவமாக கருதப்படும். ரோபோ தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தால், மனித வேலைகளுக்கு ரோபோக்களை பயன்படுத்துவதை அந்த குடியிருப்பு நிர்வாகம் ஒத்திவைப்பதாக தெரிவித்துள்ளது.
இந்த ரோபோ தற்கொலை சம்பவத்திற்கு பிறகு, ரோபோக்களுக்கு பணி சுமை இருக்குமா? ரோபோக்களுக்கு உணர்வுகள் உள்ளதா? அவைகளுக்கும் மன அழுத்தம், விரக்தி ஏற்படுமா? என்பது போன்று பலரும் சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பி வருகின்றனர். மனிதர்களுக்கு பதில் வேலைகளுக்கு ரோபோக்களை பயன்படுத்த திட்டம் வைத்திருந்த சில நிறுவனங்களும் தற்போது அவற்றை அமல்படுத்த சற்று தயக்கம் காட்ட துவங்கி உள்ளன.
India Vs Pakistan: இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே முழு அளவிலான போர் மூண்டால் என்னாகும்?
ஸ்டெர்லைட்டுக்கு ஒரு நீதி என்.எல்.சிக்கு ஒரு நீதியா? உடனடியாக ஆலையை மூட வேண்டும்: டாக்டர் அன்புமணி
கல்வி தான் நமக்கான ஆயுதம்...கல்வியை மட்டும் விட்டுவிடவே கூடாது: முதல்வர் மு.க.ஸ்டாலின்!
நடுநிலையான விசாரணைக்கு பாகிஸ்தான் தயாராக உள்ளது: பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அறிவிப்பு!
வலுக்கட்டாயமாக கடன் வசூலித்தால் 3ஆண்டு வரை சிறை.. சட்டசபையில் புதிய மசோதா தாக்கல்..!
மக்களின் வாழ்வாதாரமாக இருக்கும்.. சிந்து நதியை தடுத்து நிறுத்தும் முடிவை மாற்றுங்கள்.. சீமான்
வீடு கட்டும் ஜல்லி, எம் சாண்ட் விலை உயர்வால் கட்டுமான செலவு 30% அதிகரிப்பு!
கோவை வந்த விஜய்க்கு பிரம்மாண்ட வரவேற்பு... தொண்டர்களின் ஆரவாரத்தால் ஸ்தம்பித்தது கோவை!
ஆம்... மகளிருக்கு உரிமை வேண்டும்..!!
{{comments.comment}}