சென்னை: போலி வாக்காளர்களைக் காப்பாற்ற முயற்சிக்கிறதா திமுக அரசு? என்று பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் தள பக்கத்தில், போலி வாக்காளர்களைக் கண்டறியும் வாக்காளர் பட்டியல் தீவிர சிறப்புத் திருத்தப் பணியைக் கண்மூடித்தனமாக எதிர்த்து வரும் அரசு, தமிழகத்தில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தி SIR பணிகளை முடக்க முயற்சிப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதாவது பல மாநில மக்கள் வசித்து வரும் சென்னை, கோவை போன்ற பெருநகரங்களில் தமிழில் மட்டுமே வாக்காளர் படிவங்கள் வழங்கப்படுவதாகவும், 40 லட்சத்துக்கும் அதிகமான வாக்காளர்கள் உள்ள சென்னையில் படிவங்கள் பற்றாக்குறையால் இதுவரை 6.4 லட்சம் படிவங்கள் மட்டுமே விநியோகிக்கப்பட்டுள்ளதாகவும், சில வாக்குச்சாவடி ஊழியர்கள் ஒரே நாளில் 500 வீடுகளுக்குச் செல்ல வேண்டிய நிர்பந்தத்தால் வாட்ஸ்ஆப் மூலம் படிவங்கள் அனுப்பப்படுவதாகவும், படிவங்களை நிரப்பத் தெரியாமல் சிரமப்படும் முதியவர்கள் மற்றும் பாமர மக்களுக்கு ஊழியர்கள் உதவுவதில்லை எனவும் பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுகின்றன.

அதிலும் குறிப்பாக அரசு வாக்குச்சாவடி நிலை அலுவலர்களாகத் திமுக தொண்டர்களும், திமுகவிற்கு விசுவாசமாக இருப்பவர்களும் நியமிக்கப்படுவதால் இந்தப் பணி நேர்மையாக நடக்குமா என்ற சந்தேகமும் மக்கள் மனதில் வலுக்கத் துவங்கியுள்ளது. ஓட்டுக்குப் பணம் கொடுப்பதிலும் போலி வாக்குகள் போடுவதிலும் பெயர் போன திமுகவின் இந்தத் தில்லுமுல்லுகளால் தங்கள் ஓட்டுரிமை பறிக்கப்பட்டு விடுமோ என்ற அச்சத்தில் மக்கள் வாக்குச்சாவடி அலுவலர்களை முற்றுகையிடத் துவங்கியுள்ளனர்.
எனவே, இந்த விஷயத்தில் உடனடியாகத் தமிழகத் தேர்தல் கமிஷன் தலையிட்டு, தமிழகத்தில் நடந்துவரும் வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தப் பணியைப் பார்வையிட சிறப்புக் குழுவை நியமிக்க வேண்டும் எனவும், அரசு அதிகாரிகளையும் நடுநிலையானவர்களையும் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களாகப் பணியமர்த்த வேண்டுமெனவும் தமிழக பாஜக சார்பாக வேண்டுதல் விடுக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
SIRஐ தடுப்பதே நம்முன் இப்போதுள்ள ஆகப்பெரும் கடமை: முதல்வர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தள பதிவு
போலி வாக்காளர்களைக் காப்பாற்ற முயற்சிக்கிறதா திமுக அரசு?... நயினார் நாகேந்திரன்!
பெண்களின் பாதுகாப்பிற்காக... இளஞ்சிவப்பு ரோந்து வானங்கள் சேவை தொடக்கம்!
வானிலை கொடுத்த அப்டேட்... தமிழகத்தில் நாளை 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!
கோயில் முதல் காவலர் குடியிருப்பு வரை பாதுகாப்பற்ற சூழல்.. திமுக ஆட்சி எதற்கு: எடப்பாடி பழனிச்சாமி
டெல்லியில் கார் வெடிப்பு சம்பவம்: குற்றவாளிகள் தப்ப முடியாது: மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங்
லோகேஷ் கனகராஜை புறக்கணித்தார்களா.. கமலும், ரஜினியும்.. பரபரக்கும் கோலிவுட்!
தமிழகத்தை ஆளும் தகுதியை திமுக அரசு இழந்து விட்டது: அன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டு!
டெல்லி செங்கோட்டை அருகே நடந்தது தற்கொலைப் படைத் தாக்குதலா.. புதுத் தகவல் வெளியானது!
{{comments.comment}}