டெல்லி: பிரதமர் நரேந்திர மோடியை, இசைஞானி இளையராஜா சந்தித்துப் பேசியுள்ளார். வேலியன்ட் சிம்பொனி இசை குறித்து அவரிடம் கூறி பிரதமரின் வாழ்த்துக்களைப் பெற்றுள்ளார் இளையராஜா.
இசைஞானி இளையராஜா, லண்டனில் சமீபத்தில் தனது சிம்பொனி அறிமுகத்தை நிகழ்த்தினார். வேலியன்ட் என்ற பெயரிடப்பட்ட அந்த சிம்பொனி இசை லண்டனில் உள்ள அப்பல்லோ அரங்கில் நடைபெற்றது. இந்த சிம்பொனி இசை மிகப் பெரும் வரவேற்பைப் பெற்றது. ஆயிரக்கணக்கான ரசிகர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சிக்கு இளையராஜா செல்வதற்கு முன்பு அவரை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று வாழ்த்தினார். அவரைத் தொடர்ந்து பல்வேறு கட்சித் தலைவர்களும் இளையராஜாவை நேரில் வாழ்த்தினர். லண்டன் நிகழ்ச்சி முடிந்து சென்னை திரும்பியபோது அவருக்கு தமிழ்நாடு அரசின் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

இதையடுத்து முதல்வர் மு.க.ஸ்டாலினை அவரது இல்லத்திற்குச் சென்று இளையராஜா சந்தித்து தனது லண்டன் நிகழ்ச்சி குறித்து அவரிடம் பேசி மகிழ்ந்தார். அதன் பின்னர் முதல்வர் போட்ட எக்ஸ் தளப் பதிவில், இளையராஜாவைக் கெளரவிக்கும் வகையில் பாராட்டு விழா நடத்தப்படும் என்று அறிவித்தார்.
இந்தப் பின்னணியில் தற்போது டெல்லி சென்று பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துள்ளார் இளையராஜா. அவரிடம் தனது வேலியன்ட் சிம்பொனி இசை நிகழ்ச்சி குறித்து விவரித்தார். இளையராஜாவுக்கு, பிரதமர் மோடி வாழ்த்தும் பாராட்டும் தெரிவித்தார். இந்த சந்திப்பு மிகுந்த நெகிழ்ச்சியாக இருந்ததாக இளையராஜா குறிப்பிட்டுள்ளார். பிரதமரின் பாராட்டில் தான் நெகிழ்ச்சி அடைந்ததாக இளையராஜா குறிப்பிட்டுள்ளார்.
பிரதமர் மோடி மகிழ்ச்சி

இளையராஜாவுடனான சந்திப்பு குறித்து பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், ராஜ்யசபா உறுப்பினர் இளையராஜாவை சந்தித்தது மகிழ்ச்சி அளித்தது. நமது இசை மற்றும் கலாச்சாரத்தில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய மேதை அவர்.
முதலாவது மேற்கத்திய கிளாசிக்கல் சிம்பொனி, வேலியன்ட்டை கொடுத்து மாபெரும் வரலாறு படைத்துள்ளார். உலகப் புகழ் பெற்ற ராயல் பில்ஹார்மோனிக் ஆர்கெஸ்டிராவின் துணையுடன் இந்த சிம்பொனியை அவர் அறிமுகப்படுத்தியுள்ளார். அவரது மிகப் பெரிய இசைப் பயணத்தில் மேலும் ஒரு மைல் கல் சாதனையாக இது அமைந்துள்ளது என்று பிரதமர் தெரிவித்துள்ளார்.
கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டங்கள் நிராகரிக்கப்படவில்லை: சென்னை மெட்ரோ நிர்வாகம் தகவல்!
வாட்ஸ் ஆப்புக்கு வந்துருச்சு ஆப்பு.. எலான் மஸ்கின் X-சாட் தான் டாப்பாமே.. மக்கா!
தீபங்கள் ஏற்றும்.. திருக்கார்த்திகை மாதத்தில்.. துளசி பூஜை வெகு விசேஷம்!
SIR பணிகளைப் புறக்கணித்து.. போராட்டத்தில் குதித்த வருவாய்த்துறை ஊழியர்கள்
சென்னை மாநகரில் குடிநீர் உபயோகத்தை கண்காணிக்க ஸ்மார்ட் மீட்டர்.. மாநகராட்சி திட்டம்
திமுக ஆட்சியில் சென்னை ரவுடிகளின் சாம்ராஜ்யமாக மாறிவிட்டது: எடப்பாடி பழனிச்சாமி குற்றச்சாட்டு!
குடிநீர் விநியோகம் சரியில்லை.. மேட்டுப்பாளையத்தில் குமுறலை வெளியிட்ட குடும்பங்கள்!
விவசாயிகளே.. உங்களுக்கு சில நற்செய்திகள்.. வாங்க வந்து படிங்க இதை!
தாலி இவ்ளோ அசிங்கமா காமிச்சது சரியில்ல: இயக்குனர் கே. பாக்கியராஜ்
{{comments.comment}}