டெஹரான்: இஸ்ரேல் விமானப்படை, வெள்ளிக்கிழமையன்று ஈரான் மீது திடீர் தாக்குதல் நடத்தி அதிர வைத்துள்ளது. ஈரானின் அணு உலை மற்றும் இராணுவ தளங்கள் குறிவைத்துத் தாக்கப்பட்டன.
வெள்ளிக்கிழமை காலை ஈரானிய தலைநகரில் குண்டு வெடிப்புச் சத்தங்கள் கேட்டதாக அரசு தொலைக்காட்சி தெரிவித்தது. மேலும், ஈரானின் வான் பாதுகாப்பு அமைப்புகள் "100 சதவீதம் இயக்கத் திறனில்" இருந்ததாகவும் அது குறிப்பிட்டது.
ஈரான் பதில் தாக்குதலில் ஈடுபடலாம் என்பதால், இஸ்ரேல் முழுவதும் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் கூறுகையில், இஸ்ரேல் அரசின் முன்கூட்டிய தாக்குதலைத் தொடர்ந்து, இஸ்ரேல் அரசு மற்றும் அதன் குடிமக்கள் மீது ஏவுகணை மற்றும் ஆளில்லா விமானத் தாக்குதல் எதிர்பார்க்கப்படுகிறது என்று தெரிவித்தார்.

இஸ்ரேலின் தாக்குதல்களால் கச்சா எண்ணெய் விலைகள் 6 சதவீதம் வரை உயர்ந்தன. அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் ஈரான், இஸ்ரேலைத் தாக்கும் சாத்தியம் இருப்பதாக முன்னதாக எச்சரித்திருந்தார். இதையடுத்தே ஈரான் முந்திக் கொண்டு தாக்கியுள்ளது.
அதேசமயம், ஈரான் மீதான இஸ்ரேலிய தாக்குதல்களில் அமெரிக்காவுக்கு எந்தவிதப் பங்கும் இல்லை என்று அமெரிக்கா விளக்கியுள்ளது. அமெரிக்கா மீது ஈரான் தாக்க முயலக் கூடாது என்றும் அது எச்சரித்துள்ளது.
100 நாள் வேலை திட்டம் பெயர் மாற்றம்... டிசம்பர் 18ம் தேதி காங்கிரஸ் போராட்டம்: செல்வப்பெருந்தகை
எஸ்ஐஆர் பணிகள் மூலம் தமிழ்நாட்டில் ஒரு கோடி வாக்காளர்கள் நீக்கப்பட வாய்ப்பு
Political Maturity on cards?.. கே.ஏ.செங்கோட்டையன் வகுக்கும் பாதையில் பயணிக்குமா தவெக?
ஈரோடு விஜய் பிரச்சாரம்.. ஏகப்பட்ட நிபந்தனைகள்.. கடைப்பிடிப்போம் என பத்திரம் கொடுத்த தவெக!
மார்கழி மாதம் .. அணிவகுத்து நிற்கும் முக்கிய வழிபாடுகள்!
வேலூர் ஸ்ரீபுரம் பொற்கோவிலில்.. குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு நாளை வழிபாடு
மாசமோ மார்கழி மாசம்.. வாசலில் கலர் கலர் கோலம்.. தினம் ஒரு கோலம்!
தொந்தி மாமா வந்தாராம்.. தொப்பியை தலையில் போட்டாராம்!
மாதங்களில் மார்கழி.. Ode to the Auspicious Marghazi Month!
{{comments.comment}}