ஸ்ரீஹரிகோட்டா: PSLV C60 ராக்கெட் மூலம் விண்ணிற்கு அனுப்பப்பட்ட SpaDex திட்டத்தின் கீழான 2 செய்கைகோள்களும் வெற்றிகரமாக இணைக்கப்பட்டதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. அமெரிக்கா, ரஷ்யா, சீனாவை தொடர்ந்து விண்வெளியில் செயற்கை கோள் அல்லது விண்கலங்களை இணைக்கும் 4வது நாடாக இந்தியா சாதனை படைத்துள்ளது.
அமெரிக்கா, ரஷ்யா, சீனாவைத் தொடர்ந்து இந்தியாவும் 2 செயற்கைகோள்களை இணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு அதற்கான ஆய்வில் தீவிரமாக இறங்கியது. இதன் தொடர்ச்சியாக, ஸ்பேடெக்ஸ் ஏ மற்றும் ஸ்பேடெக்ஸ் பி ஆகிய இரு விண்கலன்கள் வடிவமைக்கப்பட்டு கடந்த டிசம்பர் மாதம் பிஎஸ்எல்சி சி-60 என்ற ராக்கெட் மூலமாக ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் ஏவப்பட்டன. இந்த முயற்சி கடந்த வாரமே செயல்படுத்தப்பட்ட நிலையில், பல்வேறு காரணங்களால் இணைப்புத் திட்டம் தள்ளிப்போனது.
கடந்த ஜனவரி 7ம் தேதி விண்ணில் இணையச்செய்வதற்கான திட்டம் கைவிடப்பட்ட நிலையில், (இன்று) ஜனவரி 16ம் தேதி இரண்டு செயற்கைகோள்களையும் விண்ணில் இணைக்கும் டாக்கிங் செயல்முறை செயல்படுத்தப்பட்டு வெற்றி பெற்றது. இந்த அறிவிப்பை இஸ்ரேல் அதிகார பூர்வமாக அறிவித்துள்ளது.
இது குறித்து இஸ்ரோ எக்ஸ் தள பக்கத்தில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், விண்கலன்களை இணையச் செய்யும் வரலாற்று நிகழ்வு வெற்றி பெற்றுள்ளது. ரஷ்யா, அமெரிக்கா, சீனாவை தொடர்ந்து விண்வெளியில் டாக்கிங் செய்த 4வது நாடாக இந்தியா உருவாகியுள்ளது. இதன் மூலம் இந்தியா சாதனை படைத்துள்ளது என்று தெரிவித்துள்ளது.
இந்த நடவடிக்கையானது, எதிர்காலத்தில் விண்வெளியில் விண்வெளி நிலையத்தை அமைப்பதற்கான முயற்சிகளுக்கு மிகப் பெரிய உந்துதலாக இருக்கும் என்பது முக்கியமானது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
11 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு!
கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் விரிசலா.. மாவட்ட கலெக்டர் அழகு மீனாவின் விளக்கம் இதுதான்!
இலங்கை தமிழ் அகதிகளுக்கு நீண்டகால விசாவும், குடியுரிமையும் வழங்கும் சட்ட திருத்தமும் தேவை: அன்புமணி
மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயர்.. 2 தலித் கட்சிகள் எதிர்ப்பு
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்
தலைமை சொல்வதை கேட்பதே எனது பொறுப்பு: தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்!
ரஷ்யா மீது 2வது கட்ட பொருளாதார தடை விதிக்கப் போறேன்.. டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு
கண்மணியே உன் கா(த)ல் தடம் தேடி..1 (கவிதைத் தொடர்)
ஆசிய கோப்பை ஹாக்கி 2025.. 8 வருடங்களுக்குப் பிறகு கோப்பையை வென்று இந்தியா அசத்தல்
{{comments.comment}}