சென்னை: புதிதாக 2 லட்சம் பேருக்கு ரேஷன் அட்டை வழங்கும் பணி தொடங்கியுள்ளதாக உணவு பொருள் வழங்கல் துறை தகவல் தெரிவித்துள்ளது. விண்ணப்பித்துள்ளவர்களில் தகுதியானவர்களுக்கு தற்போது புதிய ரேஷன் கார்டு வழங்கப்பட்டு வருகிறது.
நாடாளுமன்ற மக்களவை தேர்தல் காரணமாக தேர்தல் நடத்தை விதிமுறைகள் இதுவரை நடைமுறையில் இருந்து வந்ததினால், புதிதாக ரேஷன் அட்டைகள் வழங்கும் பணி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் புதிதாக சுமார் 2 லட்சம் பேர் ரேஷன் கார்டுக்காக விண்ணப்பித்து காத்துள்ளனர். காத்திருக்கும் இந்த 2 லட்சம் பேருக்கும் ரேஷன் அட்டை வழங்கும் பணி தற்போது தொடங்கியுள்ளதாக உணவு பொருள் வழங்கல் துறை தகவல் தெரிவத்துள்ளது.
நேற்று முதல் இந்த பணிகள் தொடங்கியுள்ளன. ரேஷன் கார்டு இல்லாமல் பல முக்கிய நலத் திட்டங்களை அனுபவிக்க முடியாத நிலையில் மக்கள் இருந்து வந்தனர். தற்போது ரேஷன் கார்டுகள் கொடுக்கப்பட்டு வருவதால் அவர்களும் மக்கள் நலத் திட்டங்களின் பலன்களைப் பெற முடியும்.
ரேஷன் அட்டை வேண்டி விண்ணப்பித்த ரேஷன் அட்டை தாரர்களின் விண்ணப்பங்கள் மாவட்டம் வாரியாக பிரிக்கப்பட்டு மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. அந்தந்த மாவட்டத்திற்குரிய அதிகாரிகள் விண்ணப்பங்களை பரிசீலினை செய்து தகுதி உள்ளவர்களுக்கு ரேஷன் அட்டை வழங்கும் பணி தொடங்கியுள்ளது. தேர்தல் விதிமுறைகள் தளர்த்தப்பட்டுள்ள நிலையில் புதிதாக ரேஷன் அட்டை வழங்கும் பணி தொடங்கியுள்ளது. ஏற்கனவே சரி பார்த்து வைக்கப்பட்ட ரேஷன் அட்டைகள் வழங்கும் பணியும் தற்போது தொடங்கியுள்ளது.
உங்களுடன் ஸ்டாலின்.. முதல்வர் பெயரை பயன்படுத்த தடையில்லை.. சி.வி. சண்முகத்திற்கும் Fine!
ஆகஸ்ட் 17ம் தேதி பொதுக்குழுவைக் கூட்ட இது தான் காரணமா?.. டாக்டர் ராமதாசின் அடுத்த அதிரடி
காலையில் தினமும் சாப்பிட சூப்பர் ரெசிப்பி.. குயினோவா.. அதாங்க சீமை திணைப் பொங்கல்!
உடுமலை அருகே எஸ்ஐ சண்முகவேல் வெட்டிக்கொலை: 5 தனிப்படைகள் அமைப்பு
சென்னை கோயம்பேடு சந்தை: இன்றைய காய்கறிகளின் விலை நிலவரம்
வாடிக்கையாளர்களை ஏமாற்றிய தங்கம் விலை... 4வது நாளாக இன்றும் உயர்வு!
ஓபிஎஸ் எக்ஸ் பக்கத்தைக் கவனித்தீரா.. 2 நாட்களாக ஒருவரை மட்டுமே வறுக்கிறார்.. யாரைத் தெரியுமா?
தவெக மாநில மாநாடு.. புதிய தேதியை அறிவித்த விஜய்.. எப்போது கிடைக்கும் அனுமதி?
ராமதாஸ் போன் ஒட்டுக்கேட்பு.. போலீசில் புகார்.. அதிரடி காட்டும் தைலாபுரம்.. அடுத்து என்ன நடக்கும்?
{{comments.comment}}