கொடைக்கானல்: கொடைக்கானல் பகுதியில் நேற்றும் இன்றும் கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கொடைக்கானலில் கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக மழை இன்றி காணப்பட்டது. இந்நிலையில், நேற்றும் இன்று மழை பெய்து வருகிறது. நேற்று பெய்த சாரல் மழையால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்திருந்தனர். குறிப்பாக நேற்று பக்ரீத் பண்டிகை விடுமுறை என்பதால், அதிகளவில் சுற்றுலா பயணிகள் கொடைக்கானல் வந்தனர். தொடர்ந்து மாலையில் மேகமூட்டமும், விட்டுவிட்டு சாரல் மழையும் பெய்தது. ஏரிச்சாலையில் சுற்றுலா பயணிகள் குடையை பிடித்துக் கொண்டு சைக்களிங், குதிரை சவாரி செய்து மகிழ்ந்தனர்.

இந்நிலையில், இன்று கொடைக்கானல் பகுதியில் மதியத்தில் இருந்து மழை பெய்து வருகிறது. மன்னவனூர், பேரிஜம், கூக்கால், செண்பகனூர், நாயுடுபுரம்,வட்டசோலை, பிரகாசபுரம், வட்டக்கானல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சுமார் ஒரு மணி நேரம் பலத்த மழை பெய்தது. இந்த மழை சுற்றுலா பயணிகளிடையே மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
இன்று பள்ளிகள் தொடங்கியுள்ளதால் சுற்றுலா பயணிகளின் கூட்டம் சற்று குறைவாகவே இருந்தது. இருப்பினும் கூட்டம் அதிகம் இல்லாத காரணத்தினால் போக்குவரத்து நெரிசல் இன்றி மக்கள் ப்ரீயாக பயணம் செய்வதாக தெரிவித்திருந்தனர்.
தற்போது பெய்து வரும் கன மழை காரணமாக கொடைக்கானல் முழுவதும் சாலைகளில் மழைநீர் தேங்கியுள்ளது. அவை சிறிது சிறிதாக வடியவும் ஆரம்பித்துள்ளது. மேக கூட்டம் அதிகமாக காணப்படுகிறது. இதனால் ரம்மியமான சூழலில் கொடைக்கானல் காணப்படுகிறது.
நவம்பர் 1-க்குள் தமிழில் கடையின் பெயர் பலகைகள்...சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
"பூச்சாண்டிகளுக்கு எல்லாம் அஞ்சிட மாட்டோம்": கே.என்.நேரு வீடு ரெய்டிற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்!
"ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர்": தவெக கூட்டணி குறித்து மாணிக்கம் தாகூர் பரபரப்பு பேட்டி!
"ஸ்கிரீன் டைம் போதையாக மாறிவிட்டது" – பிரதமர் நரேந்திர மோடி எச்சரிக்கை!
பெண்களை இழிவுபடுத்தும் விளம்பரங்களை வைக்கலாமா.. மெட்ரோவுக்கு சு. வெங்கடேசன் கேள்வி
முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ அசன் மௌலானாவுக்கு 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடத் தடை
திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை
மாணவர்கள் வளர்ச்சி கண்டு பெருமைப்படும் பேரான்மாக்கள்.. ஆசிரியர்கள்!
கல்வி என்னும் நறுந்தேனை.. சுவைக்கச் செய்யும் இளங்காற்று நாமே!
{{comments.comment}}