என்னை அரசியலில் இருந்து வெளியேற்றுவது ரொம்பக் கஷ்டம்.. கமல்ஹாசன் அதிரடி!

Feb 21, 2024,09:57 PM IST

சென்னை: என்னை அரசியலுக்கு வரவைப்பது கடினம் என்றார்கள்; என்னை வெளியேற்றுவது அதைவிடக் கடினம் என்று மக்கள் நீதி மய்யம் கட்சி  தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.


சினிமா, பிக்பாஸ் என்று கலகலப்பாக போய்க் கொண்டிருந்த கமல்ஹாசன் இன்று தனது மக்கள் நீதி மய்யம் கட்சியின் 7வது ஆண்டு விழாவை கட்சியினருடன் கோலாகலமாக கொண்டாடினார்.  இன்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் 7ம் ஆண்டு தொடக்க விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. 


அப்போது தொண்டர்கள் மத்தியில் பேசிய கமல்ஹாசன் கூறியதாவது: 




நாட்டு மக்களின் குடியுரிமை ஆட்டம் கண்டுள்ளது. விவசாயிகளுக்கு தமிழ்நாடு செய்துள்ள நன்மையில் 10 சதவீதம் கூட மத்திய அரசு செய்யவில்லை. விவசாயிகளை தடுக்க ஆணி படுக்கையை சாலையில் போட்டுள்ளது மத்திய அரசு. தெற்கு தேய்ந்தால் கூட பரவாயில்லை என்று நினைப்பவர்கள் தான் ஆட்சியில் உள்ளவர்கள். 


என்னை அரசியலுக்கு வர வைப்பது கடினம் என்றார்கள். என்னை வெளியேற்றுவது அதைவிட கடினம். எதிரி படையை நடத்துவது போல் விவசாயிகளை நடத்துகிறது மத்திய அரசு. மக்கள் நீதி மையத்தை போன்ற ஜனநாயக சக்திகளின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே தான் இருக்கிறது. ஜாதி மத சலக்குகள் இருக்கும் வரை வடக்கு தெற்கு பேதம் வாழும் வரை ஊழலும் சீர்கேடுகளும் தொடரும் வரை நமது போராட்ட செயல்பாடுகள் ஓயாது.


கட்சி ஆரம்பிக்கப்பட்ட குறுகிய காலத்திலேயே இரு பெரும் தேர்தல்களை எதிர்கொண்டு விட்டோம். பணபலம், ஊடக பலமும், முன் அனுபவமோ சிறிதுமின்றி மக்களை சந்தித்தோம். கவனம் ஈர்க்கும் வகையில் வாக்குகளை பெற்றோம். மக்களுக்கு அவர்களுடைய கடமையை நினைவுறுத்துவதும் தலைமைக்கு தயார்படுத்துவதும் தேர்தல் வெற்றிகளை விட முக்கியமானது. ஜனநாயக தேரை நாம் அனைவருமே சேர்ந்துதான் இருக்க வேண்டும் என்கிற உணர்வை ஊட்டுவதே அவசியம் மிக்க அரசியல் செயல்பாடு.மக்கள் நீதி மையத்தை போன்ற ஜனநாயக சக்திகள் தேவை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே தான் இருக்கிறது. 


நான் முழுநேர அரசியல்வாதி அல்ல என்ற விமர்சனத்தை முன்வைக்கின்றேன். முழு நேர அரசியல்வாதி என்று யாரும் இல்லை. முழு நேர அப்பன் இல்லை. மகனும் இல்லை. முழு நேர குடிமகனாக இருந்து ஓட்டு போடுவதாக தான் கேள்வி கேட்கின்றனர். கோவை தெற்கு தொகுதியில் 90 ஆயிரம் பேர் ஓட்டு போடவில்லை அவர்கள்தான் நான் தோல்வியடைய காரணம் என்று கூறினார்கள். 


என் அரசியல் பயணம் தனித்துவமானது நிறைய பாடங்கள் கற்றுக் கொண்டோம் எதை செய்ய வேண்டும் எதை செய்யக்கூடாது என்று இந்த ஏழு ஆண்டுகளில் கற்றுக் கொண்டோம். ஒரு ரூபாய் வரி கொடுத்தால் 29 பைசா தான் நமக்கு கிடைக்கின்றது. என் சகோதரர்கள் பீகாரில் இருக்கின்றனர், நன்றாக இருக்கட்டும் என்றார் கமல்ஹாசன்.

சமீபத்திய செய்திகள்

news

மக்களின் வாழ்வாதாரமாக இருக்கும்.. சிந்து நதியை தடுத்து நிறுத்தும் முடிவை மாற்றுங்கள்.. சீமான்

news

வீடு கட்டும் ஜல்லி, எம் சாண்ட் விலை உயர்வால் கட்டுமான செலவு 30% அதிகரிப்பு!

news

கோவை வந்த விஜய்க்கு பிரம்மாண்ட வரவேற்பு... தொண்டர்களின் ஆரவாரத்தால் ஸ்தம்பித்தது கோவை!

news

வலுக்கட்டாயமாக கடன் வசூலித்தால் 3ஆண்டு வரை சிறை.. சட்டசபையில் புதிய மசோதா தாக்கல்..!

news

நடுநிலையான விசாரணைக்கு பாகிஸ்தான் தயாராக உள்ளது: பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அறிவிப்பு!

news

கல்வி தான் நமக்கான ஆயுதம்...கல்வியை மட்டும் விட்டுவிடவே கூடாது: முதல்வர் மு.க.ஸ்டாலின்!

news

ஸ்டெர்லைட்டுக்கு ஒரு நீதி என்.எல்.சிக்கு ஒரு நீதியா? உடனடியாக ஆலையை மூட வேண்டும்: டாக்டர் அன்புமணி

news

India Vs Pakistan: இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே முழு அளவிலான போர் மூண்டால் என்னாகும்?

news

ஆம்... மகளிருக்கு உரிமை வேண்டும்..!!

அதிகம் பார்க்கும் செய்திகள்