வாஷிங்டன்: வலது சாரிகள் எப்போதெல்லாம் வளர்கிறார்களோ அப்போதெல்லாம் இடதுசாரி சக்திகள் அவர்களுக்கு எதிராக அவதூறுகளை, சேற்றை வீசிக் கொண்டே இருக்கிறார்கள். நீங்கள் சேற்றை வீச வீச நாங்கள் வளர்ந்து கொண்டே இருப்போம். மக்கள் எங்களுக்கு வாக்களித்துக் கொண்டே இருப்பார்கள் என்று கூறியுள்ளார் இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி.
கன்சர்வேட்டிவ் அரசியல் நடவடிக்கைக் குழுவின் கூட்டம் வாஷிங்டனில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு காணொளி காட்சி மூலமாக இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி உரையாற்றினார். அப்போது அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், பிரதமர் நரேந்திர மோடி ஆகியோருக்கு ஆதரவாக அவர் பேசினார்.

ஜார்ஜியா மெலோனியின் உரையிலிருந்து:
வலது சாரி தலைவர்கள் எப்போதெல்லாம் உயர்ந்து வருகிறார்களோ அப்போதெல்லாம் இடதுசாரி தலைவர்கள் பதட்டமாகி விடுகிறார்கள். குறிப்பாக அமெரிக்க அதிபர் பதவியில் டொனால்ட் டிரம்ப் மீண்டும் அமர்ந்ததும் அவர்களது பதட்டம் மேலும் அதிகமாகியுள்ளது.
பில் கிளிண்டன், டோனி பிளேர் ஆகியோர் பதவியில் இருந்தபோது உலக அளவில் இடதுசாரிகளின் கட்டமைப்பை உருவாக்கினர். அவர்களை ஸ்டேட்ஸ்மென் என்று புகழ்ந்து கொண்டனர். ஆனால் இன்று டிரம்ப், மெலோனி, ஜாவியர் மிலி, நரேந்திர மோடி ஆகியோர் பேசினால், அவர்களை ஜனநாயகத்திற்கு ஆபத்தானவர்கள் என்று விமர்சிக்கிறார்கள். இதுதான் இடதுசாரிகளின் இரட்டை முகம். ஆனால் நாம் இதை நீண்ட காலமாகவே சந்தித்துதான் வந்திருக்கிறோம்.
ஆனால் இதில் என்ன நல்ல விஷயம் என்றால், மக்கள் இவர்களை ஏற்பதில்லை. புறம் தள்ளி விடுகிறார்கள். இவர்கள் என்னதான் நம் மீது சேற்றை வாரி இறைத்தாலும், மக்கள் நமக்கு வாக்களித்துக் கொண்டேதான் இருக்கிறார்கள்.

டிரம்ப்பின் வெற்றி, இடதுசாரிகளை பதட்டத்துக்குள்ளாக்கியுள்ளது. அவர்களது எரிச்சல், பைத்தியக்காரத்தனமான முழக்கமாக மாறியுள்ளது. வலதுசாரிகள் வெல்வது மட்டுமல்லாமல், உலக அளவில் அவர்கள் ஒருங்கிணைந்துள்ளனர் என்பதுதான் அவர்களது பதட்டத்துக்குக் காரணம் என்றார் அவர்.
மெலோனி இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுவதற்கு இத்தாலியில் கடும் எதிர்ப்பு நிலவியது. குறிப்பாக எதிர்க்கட்சிகள் மிகக் கடுமையாக இதை விமர்சித்திருந்தனர். ஆனால் அதைப் பொருட்படுத்தாமல் மெலோனி இக்கூட்டத்தில் பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தக் கூட்டத்தில் மெலோனி பேசும்போது தனது அரசு இத்தாலியில் மேற்கொண்டுள்ள பல்வேறு மாற்றங்கள், முன்னேற்றங்கள் குறித்தும் விரிவாக பட்டியலிட்டார். தனது ஆட்சிக்காலத்தில்தான் இத்தாலியில் பொருளாதாரம் ஸ்திரமடைந்ததாகவும், சட்டரீதியான குடியமர்வுகள் நடைபெற்று வருவதாகவும் அவர் பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.
வரைவு வாக்காளர் பட்டியல் வந்ததும் நாம் இன்னும் தீவிரமாக பணியாற்ற வேண்டும்.: முதல்வர் மு.க.ஸ்டாலின்
ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும் அனைவரும் கம்பி எண்ணப்போவது உறுதி: எடப்பாடி பழனிச்சாமி
அப்பா வின் ஆட்சியில் தொடர்ந்து காணாமல் போகும் அப்பாவி குழந்தைகள்: நயினார் நாகேந்திரன்
புதுச்சேரியில் தவெக பொதுக்கூட்டம்... தவெக தொண்டர்களுக்கு வெளியாகியுள்ள அறிவிப்பு என்ன தெரியுமா?
என் திரை வாழ்வை சீர்குலைக்க நடந்த சதி செயல்: நடிகர் திலீப் பேட்டி
ஒரு வாரமாக பயணிகளைப் படுத்தி எடுத்த இண்டிகோ.. முழுக் கட்டணத்தையும் திருப்பித் தர முடிவு
பெத்லஹேமில்.. 2 ஆண்டுகளுக்குப் பிறகு.. களை கட்டிய கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள்!
திருநாவுக்கரசரால் பாடப் பெற்ற திருகொண்டீஸ்வரம் .. பசுபதீஸ்வரர் கோவிலில் ஏகாதச ருத்ர யாகம்
எந்த மாற்றமும் இன்றி இருந்து வரும் தங்கம் விலை...வெள்ளியின் விலை நிலவரம் என்ன தெரியுமா?
{{comments.comment}}