ஆசை மோகம் சுயநலத்தின் மீது பகை கொண்டு வாழ்ந்த.. இயற்பகை நாயனார்!

Feb 26, 2026,01:56 PM IST

- கலைவாணி கோபால் 


"இல்லையே என்னதா இயற்பகைக்கும் அடியேன்" என்ற சுந்தரப் பெருமானின் வாக்கு: 


சோழ நாட்டின் சிறந்த நகரங்களில் ஒன்றான காவிரி கடலில் அமைந்த காவிரி பூம்பட்டினம் எனும் பூம்புகார் நகரில் இயல்பான குணமான ஆசை, மோகம், சுயநலம், இவற்றின் மீது பகை கொண்டு பக்தி மற்றும் பட்டறுத்தல் போன்ற குணங்களில் எளிமையாக வாழ்ந்த பெரும் செல்வந்தர் நம்  இயற்பகை நாயனார்.


இவருக்கு இன்னொரு பெயரும் உண்டு ஐயர் பகை (உலகின் இயற்கைக்கு முரணான செயல்களை கொண்டவர்) என்பது இதன் பொருள். 


சிவனுக்காகவும் சிவன் அடியார்களுக்காகவும் ,தான் பிறந்துள்ளதாகவும், சிவத்ததொண்டு தனது உயிர் மூச்சு என்று வாழ்ந்து வந்தவர். சிவனடியார்கள் எதைக் கேட்டாலும் இல்லை என்று கூறாமல் அவர்களின் ஆசைகளை நிறைவேற்றுவதற்காக தான் பிறந்திருப்பதாக எண்ணி சிவனடியார்களுக்காக அனைத்தையும் தர உளம் கொண்டு தொ ண்டுகளை புரிந்து வந்தவர். 




இவரது மனைவியும் இவர் வழியிலேயே கணவனின் எண்ணத்தை ஏற்று அதன் வழி நடக்கும் கற்புக்கரசியாக வாழ்ந்து வந்தவர் அம்மையார். இவர்களின் பக்தி சிரத்தையை வெளிப்படுத்தும் விதமாக சிவபெருமான் ஒரு நாடகத்தை அரங்கேற்றினார் . அதன்படி, ஒரு சிவனடியாராக உருமாறி இயற்பகை நாயனாரின் முன்பு தோன்றினார். அன்றைய தினம் எந்த சிவன் அடியாரையும் அவர் உபசரிக்கவில்லையே என்று மனதில் வேதனை கொண்ட சமயத்தில் நம் சிவ பெருமானே சிவனடியாக தோன்றி முன்னால் வந்து நின்றார்.


பெரும் மகிழ்ச்சி கொண்ட நாயனார் , அந்த சிவனடியாரை இல்லத்திற்கு அழைத்துச் சென்று விருந்து உபசரணைகளை செய்து அமுது படைத்தனர் இந்த தம்பதியினர். உண்டு விட்டு இளைப்பாறிக் கொண்டிருந்த சிவன் அடியாரிடம்"அடியாரே வேறு ஏதாவது வேண்டுமா"  என்று இயர் பகையார் பணிவுடன் கேட்டார். சமயம் பார்த்த காத்திருந்த சிவனடியாரோ 'எல்லாம் சிவனுடையது சிவனடியார் எதைக் கேட்டாலும் இல்லை என்று தந்துவிடுவாயாமே உன்னை நம்பி கேட்டால் எனக்கு ஒன்று தருவாயா' சிவனடியார். 


'எதுவானாலும் தருகிறேன்' இன்று இயல்பாய் இயற்பகை யாரும் வாக்களித்தார். அன்பரே ,எனக்கு ஒரு துணை வேண்டும் நானோ அடியார். எனக்கு பணிவிடை செய்ய  உன் மனைவியே எனக்கு அனுப்புவாயா என்று எந்த பதற்றமும் பயமும் இல்லாமல் தெளிவுடன் அந்த சிவனடியார் கேட்டார். 


இயர்பகையின் மனைவிக்கோ இதை கேட்டு மிகவும் அதிர்ச்சியாக இருந்தது. இருந்தாலும் தனது கணவர் என்ன செய்யப் போகிறார் என்று அவரையே உற்று நோக்கிக் கொண்டு இருந்தார். இயற்பகையாரும் தன் மனைவியை நோக்கினார். எதைக் கேட்டாலும் கொடுப்பதே என் தர்மம், உன்னை பிரிந்தாலும் நான் பிணமே தர்மத்தை கைவிட்டாலும் நான் பிணம் 'என்ன செய்யப் போகிறாய் சகி என்ற வினா அவர் பார்வையில் மனைவியை நோக்கி நின்றது.


கணவனின் தொண்டிற்கு தன்னால் எந்தவித பாதகமும் வரக்கூடாது. கணவன் அடியாருக்கு கொடுத்த வாக்கு அவன் உயிருக்கு சமம் என்பதை அவள் நன்றாக அறிவாள். ஏனென்றால்,.... அவள் கற்பு நெறி தவறாத மாத ராசி அல்லவா? 


மனைவியின் உணர்வை பார்வையால் உணர்ந்த நாயனார் தன் மனைவியை அந்த அடியாரிடம் மனதார தர ஒப்புக்கொண்டார். அடியாரே, "என்னிடம் இல்லாத ஒன்றைக் கேட்டு விடுவீரோ  என்று பயம் கொண்டேன்.கொடுக்கக் கூடியதாக கேட்டு விட்டீர் 'பெற்றுக் கொள்ளும் என்று முகம்  மலர்ந்து பேசினார்.இயற்பகையார்.


உடனே அடியார் இயற்பகையே நீர் மனைவியை கொடுத்து விட்டீர். ஆனால் இவளை அழைத்துச் சென்றால் ஊருக்குள் என்னை என்ன சொல்வார்கள்? இவள் சொன்னால் தான் கேட்பார்களா? நிச்சயம் என்னை அடித்து உதைத்து இவளை அவர்களுடன் அழைத்து சென்று விடுவார்களே? அதனால்  நீ காவலாக வந்து எங்களை ஊர் எல்லை தாண்டி அனுப்பி வைப்பாய்" என்றார் சிவனடியார்.


சிவனடியாரும் அவரது மனைவியாரும் எல்லை நோக்கி   நடந்து சென்றனர், சிவனடியார் எதிர்பார்த்தது போல் அங்குள்ள உறவினர்கள் அவள்' எம் குலப்பெண் , யாரோ ஒரு அடியாருடன் அனுப்ப நீ மதி மயங்கலாம் . ஆனால் நாங்கள் அதற்கு அனுமதி தர மாட்டோம் என்று கூறினார்கள். மங்கைக்கு காவலனாக இருக்க வேண்டிய கணவன், மனைவியை சிவனடியாருடன் செல்ல வால் ஏந்தியுள்ளான் என்பது பெரும் வியப்பை தந்தது அங்குள்ள அனைவருக்கும்.


இயற்பகையார் அமைதியாக வழிவிட சொன்னார்.  ஆனால் அவர்களோ,...இது நடந்தால் நாம் வெளியே தலை காட்ட முடியுமா? பகைவர்கள் சிரிப்பார்கள் என உறவினர்கள் முரண் கருத்துக்களை கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர். இது சண்டையாக மாறியது. அவர்கள் ,வியாபாரிகள் ஆபத்தான பயணங்களில் தங்களை  தற்காத்துக் கொள்ள வீரகலைகளில் தேர்ச்சி பெற்று இருந்தனர். உறவினர்களும் நாயனாரும்  சண்டையிட்டுக் கொண்டனர்.


இதைக் கண்டு,.. சிவனடியார் அஞ்சி நடுங்கினார். 'அடியாரே கலங்க வேண்டாம். இயற்பகை வெல்வார்'என முழு பலமும் ஆதரவும் கொடுத்து அடியாரின் பணி பெண்ணாய் மாதரசி அங்கு நின்றாள். இப்போது இயற்பகையார் மாதரசியின் கணவன் அல்ல! அதனால் அவரின் பெயரை மாதரிசி உச்சரித்து சிவனடியார் ஐயத்தை போக்கினார்.


எதிர்த்தவர்கள் அனைவரையும் கை, கால்கள் என தனித்தனியாக வெட்டி கொன்று  கடந்து சென்று சாயாவனம் என்னும் ஊரை அவர்கள் அடைந்தனர். அந்த ஊரில் இருக்கும் சிவனே சாயாவனேஸ்வரர். அந்த ஆலயத்தில் முன் இருக்கும் ஐராவதம் திருத்தத்தில் நீராடி விட்டு மூவரும் அந்த சாயனேஸ்வரர் ஆலயத்தில் நுழைந்தனர். அங்கிருந்த சிவனை வணங்கினர். அங்கு இருவரையும் சேர்த்து விட்டு தன் கடமையை முடித்த நிலையில் கோவிலை விட்டு வெளியேறினார், இயற்பக்கையார் .


அப்போது அவரிடம் சலனமில்லை கண்ணீர் இல்லை மனைவியை இழந்து விட்டோம் என்ற வலியும் இல்லை. ஒரு சிவனடியாரின் கோரிக்கையை நிறைவேற்றினோம் என்ற நிம்மதி மட்டுமே இருந்தது.  நாயனார் எந்த ஒரு உணர்வும் இல்லாமல்  திரும்பி வரும் சமயத்தில் திரும்பவும் ஒரு சத்தம் கேட்டது.  "காப்பாற்றுங்கள் ஐயோ!" இந்த சத்தம் கேட்டவுடன் சிவனடியாருக்கு ஏதாவது பிரச்சனை வந்துவிட்டதோ! என்று இயற்பகையார் தன்னுடைய வாளை எடுத்துக் கொண்டு திரும்பவும் கோயிலை நோக்கி சென்றார் .


அங்கு சென்ற போது சிவனடியார் காணவில்லை. அவருடைய மனைவி மட்டுமே அங்கு நின்று கொண்டு இருந்தார். அடியாரே எங்கு சென்றீர்கள்? என்று நடுங்கி கூப்பிட்டார் இயற்பகையார்.


"இதோ இங்கிருக்கிறேன்" என்ற குரல் கேட்டது. அப்போது சிவபெருமான் பார்வதி தேவியோடு காளை வாகனத்தில் காட்சி அளித்தார். கற்புக்கரசியும் , நாயனாரும் சேர்ந்து வாய் விட்டு ஆனந்தமாக கதறி அழுதார்கள். எம்பெருமானே வந்தது நீரா? எங்களையும் தேடி வந்தீரா? என்ன புண்ணியம் செய்தோம்; என கண்ணீர் மல்கி வணங்கி நின்றார்கள். அர்த்தநாரீஸ்வரர் கோலமாக மாதொருபாகன் உருவுக்கு மாறி காட்சி தந்தார். 


எதன் மீதும் பற்று வைக்காமல் எதிர்பார்ப்பும் இன்றி அன்பு செலுத்துகின்றாயே அந்த அன்பு தூய்மையானது. நல்ல கணவன் மனைவி உறவிற்கு நீங்கள் இருவரும் எடுத்துக்காட்டு, இருவரும் மனம் உவந்து செய்த இச்செயல் உங்கள் நிகரில்லா பக்திக்கு எடுத்துக்காட்டு, நீங்கள் இங்கு பல காலம் தம்பதிரையாய் ஒன்றி வாழ்ந்து கைலாயம் வருவீர்களா" என அவர்களைப்  வாழ்த்தி அருளினார் சிவபெருமான்.


இந்நிலையில் தன்னால் வெட்டுப்பட்டு இறந்தவர்களுக்காக வேண்டினார் நாயனார். தனக்கான கோரிக்கை எதுவும் இல்லாமல் தன்னை சார்ந்தவருக்காக வைக்கும்  கோரிக்கை ஏற்று உயிர் நீத்த அனைவரும் சொர்க்கம் வருவாராக 'என்று புன்னகை காட்டி காட்சி கொடுத்து மறைந்தார் சிவபெருமான். 


தனக்கென்று எதுவும் பாராமல் சிவத்தொண்டிற்காக தனது மனைவியை தர துணிந்த இயற்பகை நாயனார்  குருபூஜை மார்கழி மாதம் உத்திர நட்சத்திரம் கொண்டாடப்படுகிறது. 


சாயாவனம் இப்பொழுது திரு சாய் காடு என்று அழைக்கப்படும் சையானீஸ்வரர் கோவிலில் இயற்பகை நாயனார்  அவரது கற்புக்கரசி தம்பதிக்கும் குருபூஜை இன்றளவும் விசேஷமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

விடைபெற்றார் தியாகச் சீலர் நல்லகண்ணு: 72 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் இறுதி அஞ்சலி!

news

பிப்ரவரி 28ம் தேதிக்குள் கூட்டணி குறித்து அறிவிக்கப்படும்: பாமக நிறுவனர் ராமதாஸ் பேட்டி!

news

மௌனத்தின் பேரொலி!

news

பயமின்றி வாழ்வோம் – பெண்களின் பலமே சமூகத்தின் பலம்!

news

தொடர்ந்து உயர்ந்து வந்த தங்கம் விலை இன்று சற்று குறைவு... எவ்வளவு தெரியுமா?

news

தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2026 தேதி அறிவிப்பு தாமதமாக இது தான் காரணம்

news

தவெக தலைமை அறிவிப்பு: அனுமதி இன்றி ஊடக விவாதங்களில் பங்கேற்க நிர்வாகிகளுக்குத் தடை!

news

மனிதநேயத்தின் மறுவடிவம்.. கல்விக்காக உடலையே தானம் செய்த தலைவர் நல்லகண்ணு

news

தமிழக அரசியலில் புதிய திருப்பம்: தவெக - காங்கிரஸ் இடையே கூட்டணிப் பேச்சுவார்த்தை தீவிரம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்