ஆர்லிங்டன், டெக்சாஸ்: அமெரிக்காவின் ஆர்லிங்டன் நகரில், கிட்டத்தட்ட 70,000 ரசிகர்களுக்கு மத்தியில் பிரமாண்ட போட்டியில் முன்னாள் உலக சாம்பியன் மைக் டைசனை 8 சுற்று போராட்டத்திற்குப் பின்னர் வீழ்த்தி வெற்றி பெற்றார் ஜேக் பால்.
தோல்வியைச் சந்தித்த மைக் டைசனுக்கு வயது 58. வெற்றி பெற்ற ஜேக் பாலுக்கு 29 ஆகும். இந்தப் போட்டியின் அறிமுக நிகழ்ச்சியின்போது தன்னை நக்கலடிப்பது போல பார்த்த ஜேக் பாலை பளார் பளார் என கன்னத்தில் அடித்து அதிர வைத்திருந்தார் மைக் டைசன். ஆனால் அந்த அடிக்கு தற்போது போட்டியில் தோற்கடித்துப் பழிவாங்கி விட்டார் ஜேக் பால்.

ஜேக் பால் ஒரு யூடியூபர் ஆவார். பிறகு பாக்ஸர் ஆனவர். மைக் டைசனுக்கு அவர் சவால் விட்டிருந்தார். இதையடுத்து இருவருக்கும் இடையே போட்டிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த ஆண்டின் மிகப் பெரிய குத்துச்சண்டையாக இது கருதப்பட்டதால் பிரமாண்ட அரங்கில் போட்டிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. எட்டு சுற்றுகள் வரை இப்போட்டி நீடித்தது.
இருவரும் விடவில்லை. அதிரடியாக மாறி மாறி புள்ளிகளைக் குவித்தனர். மைக் டைசனுக்கு 58 வயதாகியும் கூட அவரது வேகத்திலும், விவேகத்திலும் கொஞ்சம் கூட குறைவில்லை. அதிரடி காட்டவும் அவர் தயாராக இல்லை. ஆனால் வயது கடைசியில் ஜேக் பாலுக்கு சாதகமாகி விட்டது. இறுதியில் 79-73 புள்ளிகள் அடிப்படையில் ஜேக் பால் வெற்றி பெற்றார்.
போட்டியின் இறுதியில் மைக் டைசனை, ஜேக் பால் பாராட்டத் தவறவில்லை. மைக் டைசன் தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம் G.O.A.T என்று பாராட்டினார். பதிலுக்கு டைசனும், ஜேக் பாலை, நல்ல பைட்டர் என்று தட்டிக் கொடுத்தார். போட்டி முடிவில், மைக் டைசன் முன்பு தலையைக் குணிந்தும் மரியாதை செய்தார் ஜேக் பால்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
தமிழகத்தில் இன்று 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்!
தமிழக காங்கிரஸ் கொஞ்சம் கொஞ்சமாக அழிவின் பாதையில் செல்கிறது: ஜோதிமணி எம்.பி.,
அச்சச்சோ.. ஆமாங்க இப்ப தாங்க வலிக்குது.. தங்கமே தங்கம்!
பராசக்திபட வெளியீட்டிற்கு தடை விதக்க மறுப்பு: சென்னை உயர்நீதிமன்றம்
ஜனநாயகன்: ஜனவரி 4 முதல் டிக்கெட் முன்பதிவு ஆரம்பம்
தமிழ்ப் படத்துக்கு தமிழ்நாட்டில் தியேட்டர்கள் இல்லை.. தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி குமுறல்!
வைகோ நடைபயணம்... திருச்சியில் தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
கடந்த 4 நாட்கள் சரிவிற்கு பின்னர் இன்று மீண்டும் தங்கம் விலை உயர்வு..சவரனுக்கு ரூ.1,120 உயர்வு!
ஏறிக் கொண்ட போகும் தங்கம் விலை.. காரணம் என்ன.. இதுக்கு என்ட் கார்டே கிடையாதா?
{{comments.comment}}