ஜெகதீப் தன்கர் ராஜினாமாவிற்கு அவரது உடல்நிலையே காரணம்.. வேறு காரணம் இல்லை: அமித்ஷா விளக்கம்!

Aug 25, 2025,05:49 PM IST

டெல்லி:  உடல்நலக் காரணமாகவே முன்னாள் துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் தனது  பதவியை ராஜினாமா செய்தார். வேறு காரணம் இல்லை என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்தார்.


இந்தியாவின் துணை ஜாதிபதியாக பதவி வகித்த ஜெகதீப் தன்கர் கடந்த மாதமக திடீரென தனது பதவியை ராஜிமா செய்தார். அது குறித்த கடிதத்தை ஜனாதிபதி திரவுபதி முர்முவுக்கு வழங்கினார். அந்த கடிதத்தில், உடல் நலனை முன்னிட்டும், மருத்துவ காரணங்களுக்காகவும், இந்திய அரசியலமைப்பின் பிரிவு 67(a)-ன் படி, இந்திய துணை ஜனாதிபதி பதவியை ராஜினாமாசெய்கிறேன். எனது பதவி காலத்தில் ஜனாதிபதி எனக்கு அளித்த உறுதியான ஆதரவிற்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன் என்று தெரிவித்திருந்தார்.




இவரது திடீர் ராஜினாமா குறித்து எதிர்க்கட்சிகளிடையே சலசலப்பை ஏற்படுத்தியது. இது குறித்து ஜெகதீப் தன்கர் எந்த கருத்தையும் வெளியிட வில்லை. அது மட்டும் இன்றி அவர் எந்த பகுதியில் இருக்கிறார் என்பது கூட தெரியாத நிலையில் இருந்து வருகிறது.  இந்நிலையில், இந்த விவகாரம் பற்றி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா செய்தியாளர்களிடம் பேசுகையில்,


இதுபற்றி தேவையற்ற குழப்பம் ஏற்படுத்த வேண்டாம். ஜெகதீப் தன்கர் அரசியல் சாசன பதவி ஒன்றை வகித்தவர். அவர், தன்னுடைய பதவி காலத்தின்போது, அரசியல் சாசனத்தின்படி சிறந்த முறையில் பணியாற்றியவர். அவருடைய உடல்நல பாதிப்பு காரணமாக தனது பதவியை அவர் ராஜினாமா செய்துள்ளார். இந்த விசயத்தில்  நீண்ட ஆராய்ச்சி செய்ய  யாரும் முயற்சிக்க வேண்டாம். உடல்நலம் சார்ந்த விசயத்திற்காக தான் ஜெகதீப் தன்கர் ராஜினாமா செய்துள்ளார். தமது பதவிக்காலத்தில் அரசியலமைப்பு விதிப்படி தன்கர் சிறப்பாக பணியாற்றினார் என்று அவர் தெரிவித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

தூய்மை பணியாளர்களுக்கு 3 வேளை இலவச உணவு : தமிழ்நாடு அரசு

news

Tamil Nadu heavy Rain alert: 14 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும்: வானிலை மையம் தகவல்!

news

எங்கெங்கும் ஜில் ஜில் மழை.. பிரச்சினைகளும் கூடவே களை கட்டுது.. எப்படி சமாளிக்கலாம்??

news

திண்ணையில் இல்லை நண்பா... பல நாட்கள் ரோட்டில் இருந்தவன் நான்: நடிகர் சூரியின் நச் பதில்!

news

மேலும் பல அற்புதமான படங்களைத் தர வேண்டும்.. மாரி செல்வராஜுக்கு அண்ணாமலை பாராட்டு

news

ரூ.78,000 கோடி சாலை நிதி எங்கே?..மலைக்கிராமங்களுக்கு உடனடியாக சாலை, பாலம் அமைக்க வேண்டும்: அண்ணாமலை

news

ஐங்கரன் (நெடுங்கதை)

news

சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த திமுக முன்வர வேண்டும்: அன்புமணி ராமதாஸ்!

news

பிரபல பின்னணி பாடகரும், தேவாவின் சகோதருமான சபேஷ் காலமானார்

அதிகம் பார்க்கும் செய்திகள்