ஜெயிலர் ரிலீஸ் : போட்டி போட்டு குறைந்த விலைக்கு விற்பனையான டிக்கெட்கள்

Aug 10, 2023,10:34 AM IST
சென்னை : ரஜினியின் ஜெயிலர் படம் ப்ரீ டிக்கெட் புக்கிங்கிலேயே உலகம் முழுவதும் பல கோடிகளை வசூல் செய்துள்ளது. அதே சமயம் இந்தியாவில் போட்டி போட்டுக் கொண்டு ஒவ்வொரு மாநிலமும் மிக குறைந்த விலைக்கு ஜெயிலர் பட டிக்கெட்களை விற்பனை செய்து அதிர்ச்சி அளித்துள்ளன.

ரஜினியின் 169 வது படமாக உருவாகி உள்ளது ஜெயிலர். நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில், சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். மோகன்லால், ஜாக்கி ஷரோஃப், ஷிவ் ராஜ்குமார், சுனில், ரம்யா கிருஷ்ணன், விநாயகன், தமன்னா, மிர்னா மேனன் உள்ளிட்ட இந்த படத்தில் நடித்துள்ளனர். ரசிகர்களால் அதிகம் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றாக இருக்கும் ஜெயிலர் படம் ஆகஸ்ட் 10 ம் தேதியான இன்று ரிலீசாகிறது. இந்த படத்தின் மொத்த பட்ஜெட் சுமார் ரூ.200 கோடியாகும். 



ஜெயிலர் படம் முதல் நாள் வசூலிலே ரூ.250 கோடியை தாண்டும் என நிபுணர்கள் கணித்திருந்தனர். ஆனால் ப்ரீ புக்கிங்கிலேயே வசூல் வேட்டையாட துவங்கியது ஜெயிலர். இந்தியாவில் ரூ.13 கோடிக்கும், அமெரிக்காவில் ரூ.6 கோடிக்கும் ஜெயிலர் ஃபர்ஸ்ட் டே ஃபர்ஸ்ட் ஷோ பார்க்க ப்ரீ புக்கிங் செய்யப்பட்டிருந்தது. இந்தியாவில் ஆன்லைனில் மட்டும் 87,000 டிக்கெட்களும், அமெரிக்காவில் 37,000 டிக்கெட்களும் விற்பனை செய்யப்பட்டது. 

வழக்கமாக டாப் ஹீரோக்கள் படங்கள் என்றால் டிக்கெட் ரேட் எகிறும். குறைந்தது முதல் ஒரு வாரத்திற்காவது டிக்கெட்டே கிடைக்காது என்ற நிலை தான் ஏற்படும். அப்படியே கிடைத்தாலும் ஒரு டிக்கெட் ரூ.500 க்கு கூட விற்பனை செய்யப்படும். ஆனால் ஜெயிலர் படத்தின் டிக்கெட்களை ஒவ்வொரு மாநிலமும் போட்டி போட்டுக் கொண்டு மிகக் குறைந்த விலையில் விற்பனை செய்து அனைவருக்கு��் அதிர்ச்சி கொடுத்துள்ளன. சென்னையில் மிக குறைந்த விலையாக ஜெயிலர் பட டிக்கெட் ரூ.60 க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தமிழகத்தில் ஜெயிலர் படத்தின் ஃபர்ஸ்ட் டே ஃபர்ஸ்ட் ஷோ காலை 9 மணிக்கு தான் திரையிடப்பட்டது. ஆனால் கேரளா, கர்நாடகாவில் காலை 6 மணிக்கே திரையிடப்பட்டது. இதனால் ரஜினி படத்தை முன்கூட்டியே பார்க்கும் ஆர்வத்தில் தமிழக ரசிகர்கள் பலர் கேரளாவிற்கும், பெங்களூருவிற்கும் படையெடுத்தனர். கேரளாவில் ஜெயிலர் பட டிக்கெட் ரூ.80 முதல் ரூ.160 க்கும் விற்கப்படுகிறது. சில தியேட்டர்களில் ரூ.100 க்கு விற்பனையாகிறது. பெங்களூருவில் ரூ.100 முதல் ரூ.150 க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

அதே சமயம் ஐதராபாத்தில் ஜெயிலர் படத்தின் குறைந்த பட்ச டிக்கெட் விலையே ரூ.200 முதல் ரூ.250 ஆக உள்ளது. அதிகபட்சமாக ரூ.350 வரை விற்பனை செய்யப்படுகிறது. டில்லியில் ரூ.100 முதல் ரூ.150 என்ற அளவிலும், மும்பையில் ரூ.160 முதல் ரூ.180 என்ற அளவிலும் ஜெயிலர் பட டிக்கெட் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

பொறுமையை சோதிக்கும் கூட்டணிக் கட்சிகள்.. அமைதியாக இருக்கும் திமுக.. என்ன நடக்கும்?

news

தமிழகத்தை வஞ்சிக்கும் மத்திய பட்ஜெட்:பிப்ரவரி 12ல் மதிமுக சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்: வைகோ

news

தமிழகத்தில் ஆட்சியாளர்களை எதிர்த்து எதிர்மறை வாக்குகள் அதிகரித்து வருகிறது: ஜி.கே.வாசன் பேட்டி

news

ராமதாஸ் பாமக வந்தால் திமுக கூட்டணியில் இருந்து வெளியேறுவோம்...திருமாவளவன் உறுதி

news

கிச்சனில் இருக்கும்போது கவனம் தோழியரே.. எண்ணெய் தீ விபத்தை.. தடுப்பது எப்படி?

news

ஒரு வாரத்துக்கு நகைக் கடை பக்கமே போகாமல் இருந்தால் தங்கம் விலை குறையுமா!?

news

பிப்ரவரி 17-ல் தமிழக இடைக்கால பட்ஜெட்: சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு

news

இந்திய சீனியர் அணிக்கு வைபவ் வர முடியாது.. குறுக்கே நிற்கும் கெளஷிக் (ஐசிசி விதி)!

news

முகம்து சிராஜுக்கு அடித்த லக்கி பிரைஸ்.. ராணா வெளியேறினார்.. சிராஜுக்கு வாய்ப்பு!

அதிகம் பார்க்கும் செய்திகள்