"பேச்சு கிடையாது.. நேரா வீச்சு தான்".. தியேட்டர்களை நடுநடுங்க வைத்த "ஜெயிலர்"

Aug 03, 2023,02:56 PM IST
சென்னை : ரஜினி ரசிகர்களை மட்டுமின்றி அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரும் வகையில் பாட்ஷா பாணியில் ஜெயிலர் படத்தின் தியேட்டர் டிரைலர் வெளியாகி செம வரவேற்பை பெற்றுள்ளது. பிரபலங்கள், ரசிகர்கள் என அனைவரும் இந்த டிரைலரை கொண்டாடி வருகின்றனர்.

ரஜினியின் 169 வது படமாக உருவாகி உள்ளது ஜெயிலர். டைரக்டர் நெல்சன் திலீப் குமார் இயக்கி உள்ள இந்த படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது. நெல்சனுக்கு மிகப் பெரிய கம் பேக்காக இந்த படம் இருக்கும் என்பதால் அதிகம் எதிர்பார்க்கப்படும் படமாக ஜெயிலர் இருந்து வருகிறது. இந்த படம் ஆகஸ்ட் 10 ம் தேதி உலகம் முழுவதும் ரிலீசாக உள்ளது. இந்நிலையில் படம் பற்றிய எதிர்பார்ப்பை எகிற வைப்பதற்காக 3 நிமிட தியேட்டர் டிரைலர் ஒன்றை படக்குழு நேற்று வெளியிட்டுள்ளது. நடிகர் நாக சைதன்யா இந்த டிரைலரை வெளியிட்டுள்ளார்.  



ஆரம்பமே பட்டையை கிளப்பும் அதிரடியுடன் துவங்குகிறது. டிரைலரின் முதல் பாதியில் அப்பாவியாக, அடாவடி செய்பவர்களிடமும் அமைதி காக்கும் கேரக்டராக வருகிறார் ரஜினி. இரண்டாவது பாதியில் பின்னி பெடலெடுத்திருக்கிறார். அதிரடி, ஆக்ஷன், அடிதடி என அனல் பறக்கிறது. பாட்ஷா படத்தில் ஆட்டோக்காரன் மாணிக்கமாக அமைதியான கேரக்டராகவும், மாணிக் பாட்ஷாவாக மற்றொரு கேரக்டரும் வருவார். அதே போல் அமைதியாக, ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரியாக இருக்கும் ரஜினி, நேரம் வரும் போது அடித்து நொறுக்குகிறார்.

"ஒரு கட்டத்துக்கு மேல பேச்சு கிடையாது...நேரா வீச்சு தான்", "ரொம்ப தூரம் போயிட்டேன்...திரும்ப முடியாது; முடிச்சுட்டு தான் திரும்புவேன்" போன்ற பஞ்ச் டயலாக்குகள் ரஜினி ரசிகர்களை விசில் போட வைத்துள்ளது. பாட்ஷா பாணியில் கூட பத்து பேர், ஸ்டையிலாக ஆக்ஷன் என பழைய ரஜினியை மீண்டும் பார்க்க வைத்திருக்கிறார் நெல்சன். 

தியேட்டர் டிரைலரே இப்படி பட்டையை கிளப்புகிறது என்றால், படம் எப்படி இருக்கும்? படத்தை சீக்கிரம் ரிலீஸ் பண்ணுங்கப்பா என ரசிகர்கள் இப்போதே ஆர்வமாக கேட்டு வருகின்றனர். ரஜினி, நெல்சன் இருவருக்கும் இந்த படம் யாரும் எதிர்பாராத கம்பேக்காக அமையும் என ரஜினி ரசிகர்கள் அடித்து கூறி வருகிறார்கள்.

சமீபத்திய செய்திகள்

news

மதுராந்தகம், தாராபுரம் சட்டசபைத் தொகுதிகளுக்கு அக்டோபர்6ல் இடைத் தேர்தல்

news

தமிழக சட்டசபையில் காரசார விவாதம்: திமுக.,வின் அமளிக்கு இடையே முதல்வர் விஜய் ஆவேச பதிலுரை

news

முதல்வர் விஜய் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக எம்.எல்.ஏ-க்கள் தர்ணா... வெளிநடப்பு

news

ரீல்ஸ்க்காக மட்டுமே பேச்சு...சபாநாயகர், முதல்வர் மீது உதயநிதி கடும் விமர்சனம்

news

திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை FIR பதிவு

news

மக்கு மக்கு நான் மட்டும் .. ஒனக்கு ரொம்ப தொக்கு தொக்கு!

news

இந்தப் பூ நிலா! ஒரு பொன் நிலா! வா நிலா! என் தேன் நிலா!

news

இனிப்புடன் வந்தார்.. ஆசி பெற்றார்.. முன்னாள் மாணவர் குறித்து நெகிழ்ந்த ஆசிரியர்!

news

சிந்தனைச் சிதறல்.. உள்ளிருந்து முந்தி உந்தும் எந்த ஒன்றும் நம்மை முன்னோக்கி உயர்த்தும்!

அதிகம் பார்க்கும் செய்திகள்