ஜப்பானில் பயங்கரம்... இரண்டே நாளில் ஆள் காலி.. தசையை தின்னும் பாக்டீரியா.. அச்சத்தில் உலகம்!

Jun 18, 2024,03:45 PM IST

டோக்கியோ:   தசையை தின்னும் புதிய வகை பாக்டீரியாவால் ஜப்பானில் 977  பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இது பரவ ஆரம்பித்த இரண்டு நாட்களில் உயிரை கொள்ளும் அபாயம் கொண்டதாம். இது உலகம் முழுவதும் பரவினால் கொரோனா போல பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று அச்சம் எழுந்துள்ளது.


streptococcal toxic shock syndrome அல்லது சுருக்கமாக எஸ்டிஎஸ்எஸ் என்று அழைக்கப்படும் இந்த நோயானது, பாக்டீரியாவால் பரவக் கூடியது. இந்த நோய்க்கு ஸ்ட்ரெப்டோகாக்கல் டாக்ஸிக் ஷாக் சின்ட்ரோம் என பெயரிடப்பட்டுள்ளது.




இது மிகத் தீவிரமான உடல் சோர்வை ஏற்படுத்தி இரண்டு நாட்களில் உயிரை கொல்லும் அபாயம் கொண்டது. இந்த நோய் பாதித்த குழந்தைகளிடையே வீக்கம் மற்றும் தொண்டை வலியை ஏற்படுத்துகிறது. சில வகை பாக்டீரியாக்கள் மூட்டு வலி, வீக்கம், காய்ச்சல், குறைந்த ரத்த அழுத்தம், தீவிர மூச்சுப் பிரச்சினை, திசு செயலிழப்பு, உறுப்பு செயல் இழப்பு மற்றும் இறப்பு போன்றவற்றை ஏற்படுத்துகிறது. கடந்த ஆண்டு 941 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், தற்போது அதைவிட கூடுதலாக பதிவாகியுள்ளது. 1999 ஆம் ஆண்டு முதல் தொற்று நோய்கள் பரவலைக் கண்டறியும் தேசிய நிறுவனம் இந்த பாக்டீரியாவை கண்காணித்து வருகிறது.


இது குறித்து டோக்கியோ பெண்கள் மருத்துவப் பல்கலைக்கழக பேராசிரியர் கென் கிகுச்சி பேசுகையில்,  இந்த நோயால் அதிக இறப்புகள் 48 மணி நேரத்தில் நடக்கிறது. காலையில் ஒரு நோயாளி பாதத்தில் வீக்கம் இருப்பதை உணர்ந்தால், மதியத்திற்குள் முட்டி வரை பரவும் தன்மை கொண்டது இது. மேலும் 18 மணி நேரத்தில் இறக்கவும் நேரிடுகிறது. இந்த ஆண்டு 2500 பேர் வரை இந்த நோயால் பாதிக்கப்படலாம். இது 30 சதவீத இறப்பு வீதத்திற்கு வழி வகுக்கும் என அவர் கூறியுள்ளார். கைகளை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்றும் புண்களை பாதுகாப்புடன் கையாள வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார். 


50 வயதுக்கு மேற்பட்டவர்கள் இந்த நோயால் அதிகம் பாதிக்கப்படுகின்றன. இந்த பாக்டீரியாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு குரூப் ஏ ஸ்ட்ரெப்டோகாக்கஸ் குடலில் இருக்கலாம். மலம் கழிக்கும் போது அவை கைகள் மூலம் பரவலாம் என எச்சரிக்கப்படுகிறது.  ஜப்பானில் மட்டுமின்றி 2022 ஆம் ஆண்டு இறுதியில் இருந்து ஐரோப்பாவின் ஐந்து நாடுகளிலும் இந்த பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. கொரோனா பெருந்தொற்று கட்டுப்பாடுகள் முடிவு வந்ததே இவ்வகை பாக்டீரியாக்கள் பரவ முக்கிய காரணம் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

11 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு!

news

கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் விரிசலா.. மாவட்ட கலெக்டர் அழகு மீனாவின் விளக்கம் இதுதான்!

news

இலங்கை தமிழ் அகதிகளுக்கு நீண்டகால விசாவும், குடியுரிமையும் வழங்கும் சட்ட திருத்தமும் தேவை: அன்புமணி

news

மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயர்.. 2 தலித் கட்சிகள் எதிர்ப்பு

news

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்

news

தலைமை சொல்வதை கேட்பதே எனது பொறுப்பு: தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்!

news

ரஷ்யா மீது 2வது கட்ட பொருளாதார தடை விதிக்கப் போறேன்.. டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு

news

கண்மணியே உன் கா(த)ல் தடம் தேடி..1 (கவிதைத் தொடர்)

news

ஆசிய கோப்பை ஹாக்கி 2025.. 8 வருடங்களுக்குப் பிறகு கோப்பையை வென்று இந்தியா அசத்தல்

அதிகம் பார்க்கும் செய்திகள்