டோக்கியோ: ஜப்பானின் முதல் பெண் பிரதமர் சானே டகாயிச்சி எடுத்துச் செல்லும் கைப்பை வைரலாகியுள்ளது. இதையடுத்து அந்தக் கைப்பையைத் தயாரித்து விற்பனை செய்யும் ஜப்பானைச் சேர்ந்த , 145 ஆண்டு பழமையான தோல் பொருட்கள் தயாரிப்பு நிறுவனமும் உலகம் முழுவதும் பிரபலமாகியுள்ளது.
145 ஆண்டுகள் பழமையான ஜப்பானிய தோல் பொருட்கள் தயாரிப்பு நிறுவனமான ஹமானோ இன்க். (Hamano Inc.) தயாரித்த இந்த கைப்பையின் பெயர் "கிரேஸ் டிலைட் டோட் (Grace Delight Tote)" என்று தெரிய வந்துள்ளது. இந்த நிறுவனத்தின் தயாரிப்புகள் ஜப்பானியப் பேரரச குடும்ப உறுப்பினர்களிடையே நீண்ட காலமாக விரும்பப்பட்டு வருகின்றன.

$895 விலை கொண்ட இந்த பை வைரலாகியதைத் தொடர்ந்து ஹமானோ இன்க் நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கு உலக அளவில் கிராக்கி அதிகரித்துள்ளது. ஏராளமான ஆர்டர்களும் வருகின்றனவாம். இந்தக் கைப்பை முழுவதுமாகத் தோலால் செய்யப்பட்டிருந்தாலும், இதன் எடை 700 கிராம் (1.5 பவுண்டுகள்) மட்டுமே என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எடை குறைவாக இருப்பதால்தான் இந்த கைப்பைக்கு கிராக்கி ஏற்பட்டுள்ளதாம்.
64 வயதான டகாயிச்சி புகழ்பெற்ற முன்னாள் இங்கிலாந்துப் பிரதமர் மார்கரெட் தாட்சர் மீது மிகுந்த மரியாதை கொண்டவர். தாட்சரும் கூட தனது கைப்பைகளுக்காக அறியப்பட்டவர்தான். தாட்சரும் பிரிட்டிஷ் நிறுவனமான Launer தயாரித்த உறுதியான கைப்பைகளுக்காக அறியப்பட்டவர்தான்.
அம்பிகையும், சொக்கரும் கை கோர்த்து அரசாண்ட மதுரை.. மீனாட்சி சுந்தரேஸ்வரர் சிறப்புகள்!
சார் மேடம் எங்கே.. அசர வைத்த ஏர்ஹோஸ்டஸ்.. மறக்க முடியாத பாஸ்டன் விமான பயணம்!
யானை பூனையாச்சு நீல வானத்தில் வெண்பஞ்சு திரள்.. மூவரி கவிதைகள்!
Happay Vinayagar Chaturthi: முழுமுதற் கடவுளே துணை நீயே
பட்டிமன்றத்தை பட்டி தொட்டியெங்கும் பயணிக்க வைத்த பண்பாட்டுத் தமிழன்!
Tasty Lunch Recipes: கமகமக்கும்.. சுவையான உருண்டை குழம்பு
பாலும் தெளிதேனும் பாகும் பருப்பும்.. இலக்கியத்தில் விநாயகர்!
அசுரனை அழிக்க ஆவணி சதுர்த்தியில் அருளிய விநாயகப் பெருமான்!
கருத்து மிகுந்தவளே கருத்துக்காளை மருமகளே உருத்தான சொந்தம் நீ உசுரான பந்தம் நீ!
{{comments.comment}}