டோக்கியோ: கடந்த 30 வருடமாக ஜப்பானில் தொழிலாளர்களின் சம்பளம் அதே விகிதத்தில்தான் இருக்கிறதாம். இதனால் ஊதியத்தை உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

ஜப்பானில் கிட்டத்தட்ட கடந்த ஒரு தலைமுறை ஊழியர்கள், ஊதிய உயர்வே காணாமல் வேலை பார்த்து வருகிறார்களாம். இதனால் அவர்களது வாழ்க்கைத் தரம் உயராமல் அப்படியே இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன. விலைவாசி பலமடங்கு உயர்ந்தும் கூட இவர்களுக்கான சம்பளம் பெரிதாக உயரவில்லையாம்.
உலகின் 3வது பொருளாதார வல்லரசாக ஜப்பான் திகழ்வது குறிப்பிடத்தக்கது. ஆனாலும் அங்கு தொழிலாளர்களுக்கான சம்பள விகிதம் கடந்த 30 வருடமாக உயரவே இல்லையாம். இதனால் ஊழியர்கள் குடும்பம் நடத்த பணம் போதாமல், வேறு வேறு வேலைகளையும் பார்க்கும் நிலைக்குத் தள்ளப்படுகிறார்களாம்.
இது தற்போது பெரும் பிரச்சினையாக மாறியுள்ளது. இதையடுத்து நிறுவனங்கள் ஊழியர்களின் ஊதிய விகிதத்தை உயர்த்த வேண்டும் என்று பிரதமர் புமியோ கிஷிடா கோரிக்கை விடுத்துள்ளார். காலத்திற்கேற்ப ஊதியத்தை உயர்த்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
பிற நாடுகளைப் போலவே ஜப்பானிலும் பணவீக்கம் ஒரு பிரச்சினையாகவே உள்ளது. நுகர்வோர் பொருட்கள் 4 சதவீத உயர்வைக் கண்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
இடஒதுக்கீடு என்பது மக்களுக்கு சேர வேண்டிய சொத்தை பிரித்துக் கொடுப்பது: ராமதாஸ்
திமுக அரசில், ஊழலும், மோசடியும் நடைபெறாத துறையே இல்லை என்பது உறுதி: அண்ணாமலை
டிசம்பர் 18ல் ஈரோட்டில் விஜய் பிரச்சாரத்திற்கு எந்தத் தடையும் இல்லை: செங்கோட்டையன் பேட்டி
டிசம்பர் 15ம் தேதி சென்னை வருகிறார் மத்திய அமைச்சர் அமித்ஷா
குடிமகன்களே அலர்ட் இருங்கப்பா..குடிச்சிட்டு வந்து மனைவிய அடிச்சா மட்டுமில்ல திட்டினாலே..இனி களி தான்
காற்றுள்ள போதே தூற்றிக்கொள்.. பழமொழியும் உண்மை பொருளும்!
தாழ்த்த நினைத்த தீமைகள்.. தடமாய் இருந்து உயர்த்தும்!
இளமையே....எதைக் கொண்டு அளவிடலாம் உன்னை?
வைக்கதஷ்டமி திருவிழா.. வைக்கம் மகாதேவர் கோவில் சிறப்புகள்.. இன்னும் தெரிஞ்சுக்கலாம் வாங்க!
{{comments.comment}}