ஒரு நாளைக்கு.. வெறும் 30 நிமிடங்கள் மட்டுமே தூங்கும் ஜப்பான் இளைஞர்.. ஏன்னு தெரியுமா பிரண்ட்ஸ்?

Sep 03, 2024,04:56 PM IST

டோக்கியோ: ஒரு நாளைக்கு 30 நிமிடங்கள் மட்டுமே தூங்குவதால் உடல் திறனில் முன்னேற்றம் ஏற்படுவதாக ஜப்பானைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் தகவல் வெளியிட்டுள்ளார். இது பல்வேறு தரப்பு மக்களிடையே வியப்பை ஏற்படுத்தியுள்ளது.


2 நாளைக்கு முன்னாடிதான் வீக்என்ட் நாட்களில் நல்லா தூங்குனா உடம்புக்கும், மனசுக்கும் நல்லதுன்னு ஒரு செய்தி படிச்சோம். இப்ப என்னடான்னா, ஒரு நாளைக்கு 35 நிமிஷம் தூங்குனா சூப்பரா இருக்கும்னு ஜப்பானிலிருந்து ஒரு செய்தி வந்து சேர்ந்துள்ளது.




நன்றாக தூங்கினால் ஹார்ட்டுக்கு நல்லது. அதனால தூங்குறவங்களை எழுப்பாதீங்க. நல்லா தூங்க விடுங்க. இப்படி வாரத்தில் ஒரு நாள் ஆவது ரெஸ்ட் எடுக்குறதுனால இதயம் பலப்படும் என அமெரிக்க ஆய்வறிக்கையில் கூறியதாக சமீபத்தில் தகவல்கள் வெளியானது.


இதனால் பலரும், இனிமேல் ஞாயிற்றுக்கிழமை  நல்லா தூங்குவேன். நான் எவ்வளவு நேரம் ஆனாலும் எழுந்திருக்க மாட்டேன். இனி தயவு செய்து எழுப்பாதீங்க. அப்படின்னு சொல்லிக்கிட்டு இருக்காங்க. அதே போல் மீம்ஸ் கிரியேட்டஸ்க்களும் இந்த செய்தியை வைத்து கலாய்த்து தள்ளி வருகிறார்கள்.


தூக்கமும் கண்களைத் தழுவட்டுமே:


தூக்கம்.. தூக்கம் என்பது மக்களுக்கு இன்றியமையாத ஒன்று. தற்போது நிலவும் காலகட்டத்தில் தூக்கமின்மையால் மன அழுத்தம்,இதய கோளாறு, இதயம்  பலமின்மை என பல்வேறு நோய்களால் அவதியுற்று வருகின்றனர். குறிப்பாக ஆண்கள் போலவே பெண்களும் அதிக வேலை சுமையால் சரியான தூக்கம் இன்றி தவித்து வருகின்றனர். இதன் காரணமாக கூடவே பல நோய்களும் தொற்றிக் கொள்கிறது.  


சமீபத்தில் வாரத்தில் ஒரு நாளாவது 16 மணி நேரம் ஆழ்ந்து தூங்கினால் வாரத்தில் மற்ற நாட்களில் தூக்கம் இல்லாததை சமன் செய்து விடும் என அமெரிக்கா ஆய்வறிக்கையில் தகவல் வெளியானது. இது தவிர அதிக நேரம் தூங்கினால் உடல் எடை கூடி விடுமோ என்ற பயத்தினாலும் மக்கள் தூக்கத்தை குறைத்து வந்தனர். இந்த நிலையில்  நன்றாக தூங்கலாம் என மக்கள் நிம்மதி அடைந்து வந்தனர்.


ஜப்பான் இளைஞரின் நூதன தூக்கம்:


இதற்கிடையே ஜப்பானில் சேர்ந்த இளைஞர் ஒருவர் ஒரு செய்தியை வெளியிட்டுள்ளார். அதாவது ஜப்பானை  சேர்ந்த டைசுகி ஹோரி என்பவர் ஒரு நாளைக்கு 30 நிமிடங்கள் மட்டுமே தூங்குவாராம். அதிலும் 12 வருடமாக ஒரு நாளுக்கு வெறும் முப்பதே நிமிடங்கள் மட்டும்தான் தூங்குவாராம். இப்படி குறைவான நேரம் உறங்கினாலும் நிம்மதியாக உறங்குவதால் வேலைத் திறனில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், இதற்காக மூளைக்கு பல வருடங்களாக பயிற்சி அளித்து வந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். 


இந்த செய்தியை தற்போது பல்வேறு தரப்பு மக்களிடையே விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. அது என்னவென்றால் அதிக நேரம் தூங்கினால் நல்லதா.. குறைவான தூக்கம் நல்லதா.. என பலரும் யோசிக்க தொடங்கி விட்டனர். 


இதைப் பற்றி எல்லாம் கவலைப்படாதீங்க. உங்களுக்கு எவ்வளவு நேரம் தூங்க முடியுதோ அதை நிம்மதியா தூங்குங்க. அதுவே உங்கள் உடம்புக்கு நல்லது.


செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

India at Paralympis 2024.. 29 பதக்கங்களுடன் அட்டகாசமாக நிறைவு செய்த தீரர்கள்.. சபாஷ் இந்தியா!

news

பதிவு செய்யப்பட்ட கட்சின்னா என்ன.. தமிழக வெற்றிக் கழகம் போல.. தமிழ்நாட்டில்.. எத்தனை கட்சி இருக்கு?

news

தமிழக வெற்றிக் கழகத்திற்கு தேர்தல் ஆணையம் அங்கீகாரம்.. விஜய் சொன்ன ஹேப்பி நியூஸ்!

news

மனசிலாயோ.. கோட் பட பாணியில் அதிரடி காட்டும் வேட்டையன்.. அது மலேசியா வாசுதேவன் குரலேதான்!

news

Welcome Baby Girl.. தீபிகா படுகோன் - ரன்வீர்.. தம்பதிக்கு அழகிய பெண் குழந்தை.. தாயும் சேயும் நலம்!

news

ஓவர் லீவு.. புதிய வரலாறு படைத்த அமெரிக்க அதிபர் ஜோ பைடன்.. மொத்தம் 532 நாட்கள்!

news

ரஷ்யா - உக்ரைன் இடையே போர் முடிவுக்கு வருகிறதா?.. தீவிரமாக களம் குதித்த இந்தியா.. திடீர் திருப்பம்!

news

செப்டம்பர் 08 - இன்றைய நல்ல நேரம், செய்ய வேண்டிய வழிபாடு

news

துலாம் ராசிக்காரர்களே.. சிக்கனத்தை கடைபிடிக்க வேண்டிய காலம்

அதிகம் பார்க்கும் செய்திகள்