ஜெயிலரை ஓரம்கட்டிய ஜவான்.. பாக்ஸ் ஆபிஸை அதிர வைத்த "கிங் கான்"

Sep 12, 2023,04:59 PM IST
சென்னை: அகில இந்திய அளவில் ஷாருக் கானின் ஜவான் திரைப்படம் வசூலில் அதிர வைத்துக் கொண்டிருக்கிறது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் ஜெயிலர் பட வசூலை முறியடித்தும் அதிரடியைத் தொடர்கிறது ஜவான்.

அட்லீ இயக்கத்தில் ஷாருக் கான் நடித்து தயாரித்து வெளியான படம்தான் ஜவான். நயன்தாரா, விஜய் சேதுபதி, யோகிபாபு என தென்னிந்திய பிரபலங்களும் படத்தில் நிறைந்திருந்தனர். படம் இந்தி, தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியானது. மூன்று மொழிகளிலுமே படம் வசூலை வாரிக் குவித்து விட்டது.

செப்டம்பர் 7ம் தேதி திரைக்கு வந்த ஜவான் படம் தொடர்ந்து வெற்றி நடை போட்டுக் கொண்டிருக்கிறது. ஒவ்வொரு நாளும் வசூலில் எகிறி அடிக்கிறது.  இதுவரை இந்தப் படம் 574.89 கோடியை வசூலித்துள்ளதாக தயாரிப்பு நிறுவனமான ரெட் சில்லீஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ஜவான் படம் பல்வேறு சாதனைகளைப் படைத்துள்ளது, பல சாதனைகளை தகர்த்தும் வருகிறது.

ஒரே நாளில் அதிக வசூலை வாரிய இந்திப் படமாக ஜவான் உருவெடுத்துள்ளது. ஒரே நாளில், அதாவது ஞாயிற்றுக்கிழமையன்று ரூ. 81 கோடியை வாரிக் குவித்து அதிர வைத்துள்ளார் ஷாருக் கான்.  ஞாயிற்றுக்கிழமையன்று தியேட்டர்களில் 70 சதவீதத்திற்கும் மேலான இருக்கைகள் நிரம்பிய காட்சிகளாக ஜவான் ஓடியுள்ளது. தமிழில் இது 53.71 சதவீதமாகவும், தெலுங்கில் 68.79 சதவீதமாகவும் இருந்தது. அதாவது பாதி இருக்கைகளுக்கு மேல் எல்லா மொழிகளிலும் தியேட்டர்கள் நிரம்பியுள்ளன. 

ஜெயிலர் வசூலை முந்தியது

ரஜினிகாந்த்தின் ஜெயிலர் படம் முதல் நான்கு நாட்களில் இந்தியாவில் ரூ. 176.70  கோடியை வசூலித்திருந்தது. அந்த வசூலை ஜவான் முறியடித்துள்ளது. முதல் நான்கு நாட்களில் ஜவான் படத்தின் இந்திய வசூல் ரூ. 287 கோடியாகும்.

சமீபத்திய செய்திகள்

news

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் 2026 : நான்கு முனை போட்டி உறுதியானது

news

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் 2026 : திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு

news

‘தாய்மாமன் தங்க மோதிரம்’ திட்டம் தள்ளிவைப்பு: அமைச்சர் அருண்ராஜ் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

news

இதுதான் சூப்பர் Couple Goal.. மனைவி மாநகராட்சி ஆணையர்.. கணவர் எஸ்.பி.. வேலூரில்!

news

சர்வதேச சுடோகு தினம் .. மூளைக்கு வேலை கொடுக்கும் புதிர் விளையாட்டு!

news

"லட்க்கி கொய்லா கொஞ்சம் கொடுப்பா".. நாக்பூரை பதற வைத்த மெட்ராஸ்!

news

சிந்தனைச் சிதறல்.. வடிப்பது சிற்பம் தான் என்றாலும்.. சிறுகச் சிறுக சிதைக்கும் உளிகள்!

news

சென்னையில் மிதமான மழைக்கு வாய்ப்பு: தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும் எச்சரிக்கை!

news

காலை உணவுத் திட்ட விரிவாக்கம்: நகராட்சி சார்பில் மாணவர்களுக்கு தட்டு, டம்ளர் வழங்கல்

அதிகம் பார்க்கும் செய்திகள்