சென்னை: ஜெயம் ரவி மற்றும் ஆர்த்தி தம்பதிக்கிடையே இன்று கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்திற்கும் மேலாக சமரச பேச்சுவார்த்தை நடைபெற்ற நிலையில் இந்த வழக்கை வரும் ஜனவரி 18ஆம் தேதிக்கு தள்ளி வைத்து உத்தரவு பிறப்பித்துள்ளது சென்னை குடும்ப நல நீதிமன்றம்.
ஜெயம் ரவி மற்றும் ஆர்த்தி இருவரும் கடந்த 2009ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுடைய 15 ஆண்டுகால திருமண உறவில் கருத்து வேறுபாடு காரணமாக தற்போது தனித்தனியாக வாழ்ந்து வருகின்றனர்.
சமீபத்தில் நடிகர் ஜெயம் ரவி தனது எக்ஸ் தளத்தில் மனைவியை விட்டு பிரிய இருப்பதாக பதிவிட்டு இருந்தார். இதனால் ரசிகர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். ஆனால் மனைவி ஆர்த்தி இது ஜெயம் ரவி தன்னிச்சையாக எடுத்த முடிவு. என்னிடம் கலந்து ஆலோசிக்கவில்லை என கூறினார். இதனால் சோசியல் மீடியாக்களில் யார் மீது சரி என்று தெரியவில்லை என காரசாரமாக விவாதிக்க தொடங்கினர்.
இந்த நிலையில், நடிகர் ஜெயம் ரவி தனது மனைவியிடம் இருந்து விவாகரத்து வழங்க வேண்டும் எனவும், எங்கள் திருமண பதிவை ரத்து செய்ய வேண்டும் எனவும் சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்த போது குடும்ப நல நீதிமன்றம் சமரச ஆய்வு மையத்தில் பேச்சுவார்த்தை நடத்த உத்தரவிட்டிருந்தது.
குடும்ப நல நீதிமன்றத்தின் உத்தரத்தின் படி ஜெயம் ரவி மற்றும் ஆர்த்தி சமரச தீர்வு மையத்தில் இன்று நேரில் ஆஜராகினர். இதனைத் தொடர்ந்து ஒரு மணி நேரமாக ஜெயம் ரவி ஆர்த்தி தம்பதி இடையே சமரச பேச்சுவார்த்தை நடைபெற்றது. அப்போது இந்த வழக்கை விசாரித்த நீதிபதி தேன்மொழி முன்பு மத்தியஸ்தர் ஆஜராகி இன்னும் பேச்சுவார்த்தை முடியவில்லை என தெரிவித்தார். இதைத் தொடர்ந்து இந்த வழக்கு விசாரணையை வரும் ஜனவரி 18ஆம் தேதிக்கு தள்ளிவைத்து நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
அணு ஆயுதங்களைக் காட்டி இந்தியாவை யாரும் மிரட்ட முடியாது.. பிரதமர் மோடி எச்சரிக்கை
தனியார் துறையில் முதல் வேலை பெறுவோருக்கு ரூ. 15,000.. புதிய திட்டத்தை அறிவித்தார் பிரதமர் மோடி
சிறந்த மாநகராட்சியாக ஆவடி, நாமக்கல் தேர்வு.. சென்னை சுதந்திர தின விழாவில் விருது
வருடாந்திர பாஸ்டாக் பாஸ்.. இன்று முதல் அமலுக்கு வந்தது.. யாருக்கெல்லாம் லாபம்?
50 ஆண்டு கால திரைப்பயணம்... வாழ்த்து தெரிவித்தவர்களுக்கு நன்றி: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்!
பிரதமர் மோடி அறிவித்த டபுள் தீபாவளி.. ஜிஎஸ்டி வரி விதிப்பில் என்னெல்லாம் மாற்றம் இருக்கும்?
சுதந்திரம்.. ஆன்மீகம்.. இரண்டுக்கும் தொடர்பிருக்கு தெரியுமா?
சுகமாய் சுற்றித் திரிவோரே.. இன்று மட்டுமாயின்.. ஒர் நாழிகையேனும் நினைவுகூறுக!
சுதந்திரம் காப்போம்!
{{comments.comment}}