- ஜெயசுகந்தி
ௐம் நமசிவாயம்.
பொதுவாகச் செல்வம் பெறுவதற்கு "வாசி தீரவே" பாடுதல் வழக்கம். நம்மிடம் வரும் பணம் செப்பமின்றி இருப்பதற்காகப் பாடப்படும் பதிகம் அஃது. சுந்தர மூர்த்தியின் திருப்பாடலான திருநாகைக்காரோணப் பதிகம் "பத்தூர் புக்கு".
இப்பாடல்கள் அனைத்திலும் 16 பேறுகளையும் சுந்தரர் வேண்டுவார். அதிலும் ஈசனைத் தோழனாகப் பாடுவதால் பாடல்கள் இன்னும் அருமையாக இருக்கும். முதல் பாடலிலேயே "முத்து ஆரம், மணிவயிரக் கோவை" பூண்பதற்கும் மெய்க்கு இனிதாய் வாசந்தரும் "கத்தூரி கமழ்சாந்து" வேண்டும் என்கின்றார்.

2 ஆம் பாடலில் "காம்பினொடு நேத்திரங்கள்" கேட்கின்றார். (இஃது தற்போது Coat ல் அணியும் அலங்காரப் pin போன்றதாக இருக்கலாம்)
4 ஆம் பாடலில் "வாட்டம் எல்லாம் தீரக் (பொற்) கட்டி எமக்கு ஈவது தான் எப்போது? சொல்லீர்" என வினவுகிறார்.
5 ஆம் பாடல் : கந்தம் (வாசமிகு Scent) முதல் ஆடை, ஆபரணம் பண்டாரத்தே (Treasury) எனக்குப் பணித்து அருள வேண்டும். (ஏனெனில்) பண்டுதான் பிரமாணம் ஒன்று உண்டே (முன்பு என்னைக் காப்பேன் என்று சான்றோர் முன் வாக்கு தந்தாய் அல்லவா?)
6 ஆம் பாடல்: "பட்டோடு சாந்தம் (வாசனைப் பொருள்) பணித்து அருளாது இருக்கின்ற(தென்னே?)
7லில் "வீழிமிழலை தனில் நித்தல் காசு அருளிச் செய்தீர். இன்று எனக்கு அருள வேண்டும்"
8 ல் "திரு உடையீர்; நல்கூர்ந்தீர் அல்லீர் (நல்குரவு = வறுமை) அணியாரூர் அருநிதியம் அதனில் முக்கூற்றில் ஒரு கூறு வேண்டும்.(விநாயகருக்கும் முருகருக்கும் ஒவ்வொரு கூறு போலும்) தாரீரேல் ஒருபொழுதும் அடி எடுக்கல் ஒட்டேன்; காற்றனைய கடும் பரி மா ஏறுவது வேண்டும்"
9ல் "திண்'என என் உடல் விருத்தி தாரீர்"
10ல் "பொற்சுரிகை, பொற்பூ, பட்டிகை வேண்டும். கறிவிரவு நெய் சோறு முப்போதும் வேண்டும்."
11ஆம் இறுதிப் பாடல் : " பரவை, சங்கிலிக்கும் (சுந்தரரின் இரு மனைவியர்) எனக்கும் பற்றாய பெருமானே! மற்று யாரை உடையேன்? உமக்கு அடியேன்; குறை தீர்க்க வேண்டும்.
'ஒளிமுத்தம் பூண் ஆரம், ஒண்பட்டும் பூவும்,கத்தூரி கமழ்சாந்தும் வேண்டும்."
இங்ஙனம் தம் இரு குடும்பத்திற்காகவும் வேண்டுவன அனைத்தும் ஒரே பதிகத்தில் கேட்கின்றார்.
இப்பதிகம் முழுதையும் தினம் படிப்போர்/ பாடுவோர் / கேட்போர் "முதலில் வீண் செலவுகள் குறைந்து கையில் பணம் உள்ளது என்கிறார்கள். அடுத்தது அடகில் உள்ள நகைகள் வீடு திரும்பின. புதிய நகைகள் வாங்கினோம்; உறவினர் திருமணத்திற்குப் பொற்காசு பரிசு வழங்கினோம். " என்று மகிழ்வாகச் சான்றளிக்கின்றனர்.
நாமும் இப்பதிகம் பாடிப் பயன்பெற்றுப் பலருக்கும் அறிவிப்போம்.
ௐம் நமசிவாயம்
Puzzle: அந்தாதி வினா விடை.. வர்றீங்களா விளையாடலாம்?
செல்வம் பெற இப்பதிகம் பாடுக!
திருவாசகம்.. பதிகம் 1 .. இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் "தாள்"வாழ்க"!
Nellai Special: வாழை இலை விருந்தும்.. நாவில் கரையும் திருநெல்வேலி சொதிக்குழம்பும்!
ஜெம் வீரமணி போக்சோ வழக்கு: விசாரணைக்காக சிறப்பு புலனாய்வு குழு (SIT) அமைப்பு
தலையங்கம்: சிறுமிகளுக்கு எதிரான கொடூரம்.. அயோக்கியர்களின் கொட்டத்தை அடக்க வேண்டும்!
ஏகாதசி விரதத்தின் மகிமை அல்லது அம்பரீஷ மஹாராஜாவின் பக்தி!
கீழ்வானம் செந்நிற ஆடை அணிய.... மலர்கள் சோம்பல்முறிக்க...!
திருமலை குமாரசுவாமி திருக்கோவில்.. குன்றின் மீதமர்ந்து.. அருள் பாலிக்கும் முருகப் பெருமான்!
{{comments.comment}}