பெங்களூரு: ஆபாச வீடியோ சர்ச்சையில் சிக்கிய முன்னாள் பிரதமர் தேவே கெளடாவின் பேரனும், மதச்சார்பற்ற ஜனதாதளம் கட்சியின் ஹசன் தொகுதி எம்.பியுமான பிரஜ்வால் ரேவண்ணா கட்சியை விட்டு இன்று சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
உதவி கேட்டு வந்த பெண்கள், இடமாறுதல் கோரி, பணி நியமனம் கோரி அணுகிய பெண்கள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான பெண்களிடம் தவறாக நடந்து கொண்டு அவற்றை வீடியோவில் பதிவு செய்து வைத்த சர்ச்சையில் சிக்கியுள்ளார் பிரஜ்வால் ரேவண்ணா. கர்நாடக அரசியலை இந்த சம்பவம் உலுக்கி எடுத்து வருகிறது.
கர்நாடகாவில் நடந்த முதல் கட்ட தேர்தலுக்கு முன்பாக இந்த வீடியோ விவகாரம் வெளியானதால் பாஜக கூட்டணியில் இடம் பெற்றுள்ள மதச்சார்பற்ற ஜனதாதளம் தலைவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். யார் இந்த வீடியோக்களை வெளியிட்டார்கள் என்ற பரபரப்பும் அதிர்ச்சியும் அவர்களை சுழற்றியடித்து வருகிறது. இந்த விவகாரம் பாஜக - ஜேடிஎஸ் கூட்டணிக்கு கடும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளதாக கருதப்படுகிறது.
இந்த நிலையில் இன்று பிரஜ்வால் ரேவண்ணா கட்சியை விட்டு சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இந்த விவகாரம் தொடர்பாக விளக்கம் அளிக்குமாறும் கூறி நோட்டீஸும் அவருக்கு அனுப்பப்பட்டுள்ளது. இதுதொடர்பாக கட்சி இன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ஆனால் தற்போது பிரஜ்வால் இந்தியாவிலேயே இல்லை. அவர் ஜெர்மனிக்கு போய் விட்டார். திரும்ப வருவாரா என்று தெரியவில்லை. ஹசன் தொகுதியில் அவர் மீண்டும் நிறுத்தப்பட்டுள்ளார் என்பது நினைவிருக்கலாம்.
இதற்கிடையே, இந்த விவகாரம் தொடர்பாக முன்னாள் முதல்வரும், பிரஜ்வாலின் சித்தப்பாவுமான எச். டி. குமாரசாமி கூறுகையில், பிரஜ்வால் ரேவண்ணாவாக இருந்தாலும் சரி, யாராக இருந்தாலும் சரி, தவறு செய்திருந்தால் அவர்களை நான் காப்பாற்ற மாட்டேன். இது தனிப்பட்ட பிரச்சினை. இதை காங்கிரஸ் அரசியலாக்கியிருக்கிறது. மொத்த குடும்பத்தின் பெயரையும் கெடுக்கும் முயற்சியில் இறங்கியுள்ளனர் என்றார் அவர்..
மக்களின் வாழ்வாதாரமாக இருக்கும்.. சிந்து நதியை தடுத்து நிறுத்தும் முடிவை மாற்றுங்கள்.. சீமான்
வீடு கட்டும் ஜல்லி, எம் சாண்ட் விலை உயர்வால் கட்டுமான செலவு 30% அதிகரிப்பு!
கோவை வந்த விஜய்க்கு பிரம்மாண்ட வரவேற்பு... தொண்டர்களின் ஆரவாரத்தால் ஸ்தம்பித்தது கோவை!
வலுக்கட்டாயமாக கடன் வசூலித்தால் 3ஆண்டு வரை சிறை.. சட்டசபையில் புதிய மசோதா தாக்கல்..!
நடுநிலையான விசாரணைக்கு பாகிஸ்தான் தயாராக உள்ளது: பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அறிவிப்பு!
கல்வி தான் நமக்கான ஆயுதம்...கல்வியை மட்டும் விட்டுவிடவே கூடாது: முதல்வர் மு.க.ஸ்டாலின்!
ஸ்டெர்லைட்டுக்கு ஒரு நீதி என்.எல்.சிக்கு ஒரு நீதியா? உடனடியாக ஆலையை மூட வேண்டும்: டாக்டர் அன்புமணி
India Vs Pakistan: இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே முழு அளவிலான போர் மூண்டால் என்னாகும்?
ஆம்... மகளிருக்கு உரிமை வேண்டும்..!!
{{comments.comment}}