- புரட்சிப் பாவை தே. ஜெனிட்டா ரீனா
குழந்தைகள் கையில் புத்தகத்தை எந்துவதற்கு பதிலாக ஏதோ ஒரு கடையில் பணியாளர்களாக, வீதிகளில் பிச்சை எடுக்கும் பிச்சைக்காரர்களாக, பேருந்து நிலையங்களில் பொருட்களை விற்கும் விற்பனையாளர்களாக தினசரி பார்க்கிறோம்.
உணவகங்களில் எச்சிலை எடுக்கும் அவல நிலையும், பிஞ்சு கைகளில் செங்கல் அறுக்கும் செங்கல் சூளை,
ஒரு பூவே மொட்டுக்களை வீதிகளில் விற்பதும்; சாலை பணிகளிலும்; கட்டிட தொழிலாளர்களாகவும்; இன்னும் எத்தனையோ! எத்தனையோ! வேலைகளை பிஞ்சு கைகளில் செய்ய வலுவில்லாத நிலையிலும், தன் குடும்ப சூழ்நிலையின், வறுமையின் காரணமாக கிடைக்கும் வேலைகளை செய்து, தன் அன்றாட வாழ்க்கையை நடத்தி வரும் குழந்தைகள் ஏராளம் ஏராளம்.

அத்தனைக் குழந்தைகளையும் மீட்டெடுத்து, கல்வி ஒன்று மட்டுமே அவர்களின் தலைமுறையை மாற்றும் சக்தி என்பதை அவர்களுக்கு புரிய வைத்து, பட்டங்கள் ஆ ளவும்! சட்டங்கள் செய்யவும் !இந்த பாரினை உயர்த்தவும்! நாம் இந்த பூமிக்கு வந்தோம்! என்பதை அவர்கள் அறிந்து இப்போது உலகை ஆளும் வல்லமை பெற்றவர்களாய் பாரினில் உயர்ந்திட குழந்தைத் தொழிலாளர்கள் இல்லாத சமுதாயத்தை உருவாக்குவோம்! அவர்களின் வாழ்க்கையில் என்றும் அணையாத தீப ஒளியை ஏற்றுவோம்!
மாற்றம் ஒன்றே மாறாதது !
அந்த மாற்றத்தை முதலில் நம்மில் தொடங்குவோம்!
நம் குடும்பத்தில் தொடங்குவோம்!
நம் தெருவில் தொடங்குவோம்!
நம் ஊரில் தொடங்குவோம்!
நம் மாவட்டத்தில் தொடங்குவோம்!
நம் மாநிலத்தில் தொடங்குவோம்!
நம் நாட்டில் தொடங்குவோம்! உலகில் தொடங்குவோம்! பின் அனைத்தும் நன்றாய் சிறப்பாய் அமையும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை!!!
(தே. ஜெனிட்டா ரீனா MA.BEd.DTEd, ஆசிரியர், வயலாநல்லூர், பூந்தமல்லி, திருவள்ளூர். 17 வருட காலமாக ஆசிரியராக இருக்கிறார். பட்டிமன்றப் பேச்சாளராகவும் வலம் வருகிறார்).
பட்டினப்பாக்கத்தில் தலைமை செயலகம் கட்டினால்...என்ன அதிமுக ஜெயக்குமார் இப்படி சொல்லிட்டார்?
மதுரை அரசாளும்.. மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்.. 17 ஆண்டுகளுக்குப் பிறகு!
முதல்வர் விஜய் குறித்து அவதூறு பேச்சு: சேகர்பாபு, ஆ.ராசா மீது வழக்குப்பதிவு
சிவன்மலை ஆண்டவர் உத்தரவுப்பெட்டியில் தேங்காய் வைத்து பூஜை...இது நடக்க போவது உறுதியா?
திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு வைரஸ் காய்ச்சல்: திமுக முப்பெரும் விழா ஒத்திவைப்பு!
காலம் மாறிப் போச்சு.. ஒரு நிமிடக் கதை (17)
அரும்பானவள் கொஞ்சம் குறும்பானவள்!
மணவாழ்க்கை.. துணையாள் சொல்படி நட!
சிந்தனைச் சிதறல்.. நல்லவர்களாக இருங்கள்.. நற்சிந்தனையோடு இருங்கள்!
{{comments.comment}}