சென்னை: நடிகர் ஜெயம் ரவி தனது மனைவி ஆர்த்தியிடமிருந்து விவாகரத்து கேட்டு சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கு ஆகஸ்ட் 10ஆம் தேதி விசாரணைக்கு வர உள்ளது.
தமிழ் சினிமாவில் ஜெயம் படம் மூலம் அறிமுகமானவர் நடிகர் ஜெயம் ரவி. முதல் ஏன் இவருக்கு மிகப்பெரிய இடத்தை உருவாக்கித் தந்தது. இதனை தொடர்ந்து இவரின் அண்ணனான மோகன் ராஜாவின் இயக்கத்தில் பல வெற்றி படங்களை நடித்து பிரபலமானார். ஜெயம் ரவி, தற்போது தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக விளங்கி வருகிறார். சமீபத்தில் வெளியான பொன்னியின் செல்வன் படம் மூலம் அனைத்து தரப்பு மக்களிடையே பாராட்டைப் பெற்றார்.
இதற்கிடையே ஜெயம் ரவி, தயாரிப்பாளர் சுஜாதாவின் மகளான ஆர்த்தியை காதலித்து கடந்த 2009 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். மூத்த மகன் ஆரவ் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான டிக் டிக் படத்தில் நடித்திருந்தார். இவர்கள் இருவருக்கும் திருமணம் ஆகி 15 வருடங்கள் நிறைவடைந்து உள்ளன. இந்த நிலையில் தனது தனிப்பட்ட காரணங்களுக்காக மனைவியிடம் இருந்து பிரிவதாகவும், எனது தனிப்பட்ட உரிமைக்கு மதிப்பு அளிக்குமாறும் நடிகர் ஜெயம் ரவி நேற்று அறிக்கை மூலம் அறிவித்திருந்தார்.
நேற்று பிரிவதாக அறிவித்த ஜெயம் ரவி, இன்று தனது மனைவியிடம் இருந்து விவாகரத்து கோரி சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் முறைப்படி மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு விசாரணை வருகிற ஆகஸ்ட் 10ஆம் தேதி சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் நடைபெற உள்ளது. அதில் 2009ம் ஆண்டு நடைபெற்ற திருமண பதிவை ரத்து செய்ய வேண்டும் எனவும், மனைவி ஆர்த்தியிடமிருந்து தனக்கு விவாகரத்து வழங்க வேண்டும் எனவும் ஜெயம் ரவி கோரிக்கை வைத்துள்ளதாக அவர் தரப்பிலிருந்து தகவல் வெளியாகி உள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!
கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!
இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?
உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?
விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி
கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்
Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்
ருத்ர தாண்டவம் (சிறுகதை)
உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!
{{comments.comment}}