உங்களுக்கு வெல்டிங்கில் நல்ல அனுபவம் இருக்கா.. ஐக்கிய அரபு அமீரகத்தில் வேலை காத்திருக்கு!

Jan 29, 2025,10:44 AM IST

சென்னை:  ஐக்கிய அரபு அமீரகத்தில் பணிபுரிய  Welder, Piping Fabricator, Piping Fitter, Structure Fabricator, Structure Fitter, Millwright Fitter, Grinder/Gas cutter மற்றும் Piping Foreman ஆகிய பணிகளுக்கான ஆட்கள் தேவைப்படுகிறார்கள். 

விருப்பம் உள்ளவர்கள் உடனடியாக விண்ணபிக்கலாம் என்று தமிழ்நாடு அரசின் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் அழைப்பு விடுத்துள்ளது.


வெளிநாடுகளில் உள்ள வேலைவாய்ப்புகளை தமிழ்நாட்டில் வேலை தேடும் தகுதியான நபர்களுக்குத் தெரிவித்து அவர்களை அங்கு வேலையில் சேர தமிழ்நாடு அரசு சார்பில் இயங்கி வரும் அமைப்புதான் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம். பல வருடங்களாக இது சிறப்பாக செயல்பட்டு வருகிறது.


இந்த நிலையில் தற்போது ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள வேலைவாய்ப்புகள் குறித்த அறிவிப்பை அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:




ஐக்கிய அரபு அமீரகத்தில் பணிபுரிய Welder, Piping Fabricator, Piping Fitter, Structure Fabricator, Structure Fitter, Millwright Fitter, Grinder/Gas cutter மற்றும் Piping Foreman தேவைப்படுகிறார்கள்.


ஐக்கிய அரபு அமீரகத்தில் பணிபுரிய குறைந்த.பட்சம் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்று 3 வருட பணி அனுபவத்துடன் 44 வயதுக்கு உட்பட்ட வெல்டர் பணிக்கு ரூ. 40 ஆயிரம் முதல் 78 ஆயிரம் வரை, பைப்பிங் ஃபேப்ரிகேட்டர் ரூபாய் 40 ஆயிரம் முதல் ரூபாய் 51 ஆயிரம் வரை, பைப்பிங் பிட்டர் ரூபாய் 36,000 முதல் 42 ஆயிரம் வரை, ஸ்ட்ரக்சர் ஃபேப்ரிகேட்டர் ரூபாய் 42 ஆயிரம் முதல் ரூபாய் 51 ஆயிரம் வரை, ஸ்ட்ரக்சர் பிட்டர் ரூபாய் 36,000 முதல் 42 ஆயிரம் வரை, மில் ரைட் பிட்டர் ரூபாய் 42,000 முதல் 51 ஆயிரம் வரை, கிரைண்டர் கேஸ் கட்டர் ரூபாய் 30,000 முதல் ரூபாய் 32 ஆயிரம் வரை மற்றும் பைப்பிங் போர் மேன் ரூபாய் 53 ஆயிரம் முதல் 60 ஆயிரம் வரை மாத ஊதியமாக வழங்கப்படும்,


மேலும் உணவு மற்றும் இருப்பிடம் வேலை அளிப்பவரால் வழங்கப்படும்.


மேற்குறிப்பிட்ட பணிக்குச் செல்பவர்கள் விசா கிடைத்த பின்னாடி இந்நிறுவனத்திற்கு சேவை கட்டணமாக ரூபாய் 35,400 மட்டும் செலுத்தினால் போதும்.


இப்பணிகளுக்கான நேர்காணல் 31.1.2005 மற்றும் 1.2.2025 அன்று காலை 9 மணி முதல் நடைபெற உள்ளது. எனவே விருப்பம் உள்ளவர்கள் உங்களது பயோடேட்டா, பாஸ்போர்ட் ஒரிஜினல் மற்றும் நகல், ஆதார் கார்டு மற்றும் புகைப்படம் ஆகியவற்றுடன் கீழ்கண்ட முகவரிக்கு நேரில் அணுகவும்.


அணுக வேண்டிய முகவரி:


அயல்நாட்டு வேலை வாய்ப்பு நிறுவனம், (தமிழ்நாடு அரசு நிறுவனம்), ஒருங்கிணைந்த மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம், 42, ஆலந்தூர் ரோடு, திரு.வி.க.தொழிற்பேட்டை, கிண்டி, சென்னை 32.


கூடுதல் விவரங்களுக்கு அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவன வலைதளம் (https://omcmanpower.tn.gov.in/) தொலைபேசி எண் 044-22502267 மற்றும் வாட்ஸ் அப் எண் 9566239685 வாயிலாக அறிந்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

முட்டி மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. மீண்டும் தோல்வி.. தட்டித் தூக்கிய ஹைதராபாத்!

news

ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்

news

துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி

news

ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!

news

பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!

news

ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!

news

எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி

news

முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு

news

ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை

அதிகம் பார்க்கும் செய்திகள்