டெலிபோன் பூத்.. உள்ளே போன ஒருவர் ரொம்ப நேரமாக ரிசீவரை காதில் வைத்திருந்தார்.. ஆனால் ஒரு வார்த்தை கூட பேசவேயில்லை. வெறுமனே கேட்டுக் கொண்டிருந்தார். வெளியில் காத்திருந்த இன்னொரு நபர் டென்ஷனாகி விட்டார்.
பூத் கதவை வேகமாக திறந்த அந்த நபர், "ஏன் சார்.. கிட்டத்தட்ட அரை மணி நேரமாச்சு நீங்க உள்ளே போய்.. போனை காதிலேயே வச்சிருக்கீங்களே தவிர ஒரு வார்த்தை கூட பேசாம அப்படியே நிக்கறீங்களே.. நாங்கெல்லாம் போன் செய்ய வேண்டாமா?
உள்ளே இருந்தவர் - சார், நான் என் மனைவி கிட்ட பேசிட்டிருக்கேன்!
--
ஓகே.. ரெஸ்ட் இன் பீஸ்!
ஸ்போக்கன் இங்கிலீஷ் வகுப்புக்கு போக ஆரம்பித்தார் மனைவி.. கணவருக்கோ செம ஹேப்பி.. சில நாட்கள் கழிந்தது.
மனைவி - வெல்கம் ஹோம் டார்லிங்.
கணவர் - அடடே அசத்துறியே.. எனக்கு ரொம்ப டயர்டா இருக்கு டியர்.
மனைவி - ஓகே டார்லிங்.. Rest in Peace!
--
அதைத் தூக்க முடியலை.. அதான்!
நீதிபதி - ஏம்மா, உங்க புருஷனை சேரைத் தூக்கி அடிச்சீங்களா.. ஏன் அப்படி பண்ணீங்க?
மனைவி - ஆமாங்க ஐயா.. டேபிளைத் தூக்க பார்த்தேன்.. தூக்க முடியலை.. அதான் சேரைத் தூக்கி அடிச்சேன்!
--

ஒரே மாதிரியா இருக்கே!
ஒரு பெண் தனது தோழியுடன் பேசிக் கொண்டிருந்தாள்.
தோழி 1 - ஹாய்.. எனக்கு நான்காவதாக கல்யாணம் நடக்கப் போகுது
தோழி 2 - வாவ், சூப்பர். வாழ்த்துகள். சரி உன்னோட முன்னாள் கணவர்கள் பத்தி தெரிஞ்சுக்க ஆசைப்படுறேன்.. முதல் கணவருக்கு என்னாச்சு?
தோழி 1 - அவர் விஷம் கலந்த காளான் பிரியாணி சாப்பிட்டு இறந்து போயிட்டார்.
தோழி 2 - ஓ கடவுளே.. 2வது கணவருக்கு என்ன நடந்தது?
தோழி 1 - அவரும் விஷம் கலந்த காளாண் பிரியாணி சாப்பிட்டுத்தான் இறந்து போனார்.
தோழி 2- மை குட்னஸ்..! 3வது கணவர் பத்தி கேக்கலாமா.. எனக்கு கேக்கவே சங்கடமா இருக்கு.. அவருக்கு என்னாச்சு.. சொல்லேன்.
தோழி 1 - அவர் கழுத்து முறிபட்டு இறந்து போனார்.
தோழி 2 - கழுத்து முறிபட்டா.. ?.. அது எப்படி??
தோழி 1 - காளான் பிரியாணி சாப்பிட முடியாது என்று மறுத்தார்.. அதான்!
இந்த வாழ்க்கை ஒரு கனவா?
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜை.. முதல்வர் மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிச்சாமி அஞ்சலி
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் அக்டோபர் 30, 2025... இன்று மகிழ்ச்சி தேடி வரும் ராசிகள்
பணியாளர் நியமனத்தில் முறைகேடா?.. களங்கம் கற்பிக்க மத்திய அரசு முயற்சி.. அமைச்சர் கே. என். நேரு
2,538 பணியிடங்களுக்கு முறைகேடாக பணி நியமனம் செய்து ரூ.888 கோடி திமுக ஊழல்: அண்ணாமலை குற்றச்சாட்டு
Rain Rain come again.. தமிழ்நாட்டில் அடுத்த 7 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் தகவல்
மக்களைக் காக்க யாரும் எங்களுக்கு சொல்லித் தர வேண்டாம்: முதல்வர் மு.க.ஸ்டாலின்!
நவ. 5ல் சிறப்பு பொதுக்குழு: ஆழ் நீள் அடர் அமைதிக்குப் பிறகு.. பேசப் போகிறேன்.. விஜய் அறிக்கை
காலையில் மட்டுமில்லங்க..பிற்பகலிலும் உயர்ந்தது தங்கம் விலை.. இன்று மட்டும் சவரனுக்கு ரூ.2,000 உயர்வு
{{comments.comment}}