Jo's quick Film review: "பத்தா".. மினிமம் 10 முறையாவது பார்க்க வேண்டும்!

Oct 09, 2026,03:58 PM IST

- ஜோசப் சாம்ராஜ்


பத்தா திரைப்படம் கிளாஸிக் மூவி. ஹீரோ ஒரு மாணவர். மிரட்டலான நடிப்பு.


1980வாக்கில் நாம் பயன்படுத்திய பொருட்கள் மற்றும் அனைத்து விளையாட்டுகள் செதுக்கி உள்ளார் கலை இயக்குனர். இசை மீண்டும் மீண்டும் நமது நெஞ்சை வருடுகிறது. 


தியேட்டர் முழுவதும் ஒவ்வொரு காட்சியும் சிரிப்பலை மிதக்கிறது. டைரக்டர் சைக்காலஜிக்கலா ஒரு மனிதன் திருந்துவதை ரொம்ப எதார்த்தமான வாழ்க்கையாக சொல்லியிருக்கிறார்.




வில்லன் திருந்தும் காட்சியில் நமக்குக் கண்ணீர் வருகிறது. லைஃப் ல ஒரு தடவை யாவது வில்லன்கள் இந்த திரைப்படம் பார்த்தால் நல்ல மனிதர்களாக மாறிவிடுவார்கள். 


நமது பள்ளி மாணவர்களுக்கு பத்தா திரைப்படம் பத்து முறையாவது போட்டு காட்டலாம். மிக மிக சிறப்பான படம். தியேட்டரில் கூட்டம் பால் பொங்கி வழிவது போல இருந்தது. மொத்தத்தில் சூப்பர் திரைப்படம்.


(கட்டுரையாளர் த. ஜோசப் சாம்ராஜ், ஆசிரியர். குருவி குளம் சரகம், தென்காசி மாவட்டம். 33வருடங்கள் ஆசிரியர் பணி. சாலமன் பாப்பையா கற்றுக் கொடுத்த மேடைபேச்சுக் கலை மற்றும் நகைச்சுவை பேச்சைத் தொடர்கிறார்)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

அதிகம் பார்க்கும் செய்திகள்