கோபிச்செட்டிபாளையம் : அதிமுக.,வில் இருந்து பிரிந்து சென்றவர்களை மீண்டும் கட்சியில் ஒன்று சேர்ப்பதற்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பத்து நாட்கள் கெடு விதித்துள்ளார்.
அதிமுகவில் பெரும் பிரச்சினை நீண்ட காலமாகவே ஓடிக் கொண்டிருக்கிறது. ஓபிஎஸ் தரப்பை வெளியேற்றியது, அதன் பிறகு தொடரப்பட்ட வழக்குகள் என பிரச்சினைகள் நீடித்துக் கொண்டுள்ளன. இந்த நிலையில் புதிதாக கே.ஏ.செங்கோட்டையன் இதில் இணைந்துள்ளார்.
அதிமுக தலைமை மீது கடந்த சில மாதங்களாகவே செங்கோட்டையன் அதிருப்தியில் இருப்பது அவ்வப்போது வெளிப்பட்டு வந்தது. அதோடு சமீபத்தில் ஈரோட்டிற்கு பிரச்சாரத்திற்கு சென்ற எடப்பாடி பழனிச்சாமியையும் சந்திப்பதை அவர் தவிர்த்தார். இது கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன் கோபிச்செட்டிபாளையத்தில் தனது ஆதரவாளர்களை சந்தித்து பேசினார் செங்கோட்டையன். அதற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர், செப்டம்பர் 05ம் தேதி மனம் திறந்து பேச உள்ளதாகவும், அதுவரை அனைவரும் பொறுமை காக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.
இதனால் செங்கோட்டையன் என்ன பேசப் போகிறார்? அவர் அதிமுக.,வில் இருந்து வெளியே போகிறாரா? திமுக.,வில் இணைய போகிறாரா? என்பது போன்று மீடியாக்களில் பலவிதமாக செய்திகள் பரவி வந்தது. இந்நிலையில் இன்று காலை கோபிச்செட்டிபாளையத்தில் உள்ள அதிமுக அலுவலகத்தில், செய்தியாளர்களை சந்தித்தார் செங்கோட்டையன். அப்போது அவர் பேசுகையில், நான் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா காலத்தில் இருந்தே கட்சியில் முக்கிய பொறுப்புக்களில் இருந்து வருகிறேன். எனக்கு இரண்டு வாய்ப்புகள் வந்த போதும் அதிமுக.,வின் நலன் கருதியே நான் தொடர்ந்து பணியாற்றி வருகிறேன்.
அதிமுக மீண்டும் ஆட்சி கட்டிலில் அமர்ந்து மக்களுக்கு நல்லாட்சி தர வேண்டும் என்றால் அதற்கு கட்சியில் இருந்து விலகி சென்றவர்களை மீண்டும் ஒருங்கிணைக்க வேண்டும். கட்சி ஒன்றுபட்டால் மட்டுமே அதிமுக.,வால் மீண்டும் வெற்றி பெற முடியும். பிரிந்தவர்கள் ஒன்று சேர்க்க வேண்டும் என்பதற்காக நான், தங்கமணி, வேலுமணி உள்ளிட்ட மூத்த உறுப்பினர்கள் 6 பேர் பொதுச் செயலாளரை சென்று ஆறு மாதங்களுக்கு முன்பு சந்தித்து வலியுறுத்தினோம். ஆனால் அதை அவர் மறுத்து விட்டார். அதனாலேயே அவரது கூட்டங்களை நான் தவிர்த்து வருகிறேன்.
2024ம் ஆண்டு பாஜக.,வுடன் கூட்டணி வைத்திருந்தால் 30 லோக்சபா இடங்களை அதிமுக கைப்பற்றி இருக்க முடியும். அப்போதும் எங்களின் கோரிக்கையை நிராகரித்து விட்டார். ஆனால் இப்போது இருக்கும் அவகாசத்தை சரியாக பயன்படுத்தினால் மட்டுமே வருகிற சட்டசபைத் தேர்தலில் வெற்றி பெற முடியும். மறப்போம், மன்னிப்போம் என அதிமுக தலைவர்கள் வழியில் செயல்பட்டு, கட்சியில் இருந்து பிரிந்து சென்றவர்களை அரவணைத்து, ஒருங்கிணைத்து செயல்பட வேண்டும். இன்று தென் மாவட்டங்களில் அதிமுக.,வின் நிலை என்ன என்பது அனைவருக்கும் தெரியும்.
இன்னும் 10 நாட்களில் பிரிந்து சென்றவர்களை ஒன்றிணைப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். இல்லை என்றால் ஒருமித்த கருத்து கொண்டவர்களை ஒன்றிணைத்து தேர்தலை எதிர்கொள்ளும் முயற்சிகளில் இறங்குவோம். பிரிந்தவர்களை மீண்டும் சேர்த்துக் கொள்ளாத வரை எடப்பாடி பழனிச்சாமியின் பிரச்சார சுற்றுப் பயணங்களில் நான் கலந்து கொள்ள மாட்டேன் என்றார்.
பிறகு செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த செங்கோட்டையன், பாஜக மூத்த தலைவர்கள் அன்பாக அழைத்ததன் பேரில் தான் டில்லி சென்று அவர்களை சந்தித்து விட்டு வந்தேன். இதற்கு முன்பும் பலரும் சந்தித்து விட்டு வந்துள்ளார்கள். ஆனால் நான் சந்தித்ததை தான் நீங்கள் பெரிதாக்கி விட்டீர்கள். 2009ம் ஆண்டு ஜெயலலிதாவால் கட்சி பொறுப்புக்களில் இருந்து நீக்கப்பட்டவர் தான் எடப்பாடி பழனிச்சாமி என்று தெரிவித்தார்.
அதிமுக இணைப்பு தொடர்பாக சசிகலாவை சந்தித்தீர்களா என செய்தியாளர்கள் கேட்டதற்கு அது சஸ்பென்ஸ் என பதிலளித்தார் செங்கோட்டையன்.
யார் யாரையெல்லாம் கட்சியில் இணைக்க வேண்டும் என்று செய்தியாளர்கள் கேட்டபோது, எல்லோரையும் ஒன்று சேர்க்கணும். ஆனால் ஓபிஎஸ், டிடிவி, சசிகலா எல்லோரையும் சேர்த்துக்கணுமா அல்லது சிலரை மட்டுமே சேர்க்கணுமான்னு பொதுச் செயலாளர்தான் முடிவு செய்யணும் என்றார் அவர்.
தங்கம் விலையில் புதிய உச்சம்... சவரன் 80,000த்தை நெருங்குகிறது... அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்!
ஒன்றிணைந்த அதிமுக.. செங்கோட்டையன் சொல்வதே சரி.. ஓபிஎஸ், நயினார் நாகேந்திரன் ஆதரவு
பிரிந்தவர்களை ஒன்றிணைக்க வேண்டும்.. இபிஎஸ்.க்கு செங்கோட்டையன் 10 நாட்கள் கெடு!
வட இந்தியாவை உலுக்கி எடுக்கும் கன மழை.. துண்டிக்கப்பட்ட காஷ்மீர்.. தவிக்கும் மக்கள்
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் செப்டம்பர் 05, 2025... நல்ல செய்தி தேடி வர போகுது
More Rains On the way: மக்களே உஷார்.. தமிழ்நாட்டில் .. 2 நாட்களுக்கு.. மழை வெளுக்க போகுதாம்
அதிமுக பொதுச் செயலாளராக.. எடப்பாடி பழனிச்சாமி தேர்வுக்கு.. எதிரான மனு தள்ளுபடி
Vijay gets ready for Tamil Nadu Tour: அரசியல் அதிரடிக்கு தயாராகும் விஜய்.. அடுத்த மூவ் இது தான்!
அடுத்தடுத்து வெளியேறும் கட்சிகள், உட்கட்சி குழப்பம்.. பலம் இழக்கிறதா அதிமுக-பாஜக கூட்டணி?
{{comments.comment}}