கோபிசெட்டிபாளையம் : செப்டம்பர் 05ம் தேதி நடைபெறும் கூட்டத்தில் மனம் திறந்து பேச போவதாகவும், அப்போது பல முக்கிய முடிவுகளை அறிவிக்க போவதாகவும் அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பரபரப்பு பேட்டி அளித்துள்ளார். இது அதிமுக.,வில் மீண்டும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
கொங்கு மண்டலத்தில் பல ஆண்டுகளாக அதிமுக.,வின் முகமாக அறியப்பட்டவர் செங்கோட்டையன். முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அமைச்சரவையிலும் சரி, அவர் உயிருடன் இருக்கும் போது கட்சியிலும் சரி செங்கோட்டையனுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வந்தது. எடப்பாடி பழனிச்சாமியெல்லாம் அப்போது பின்வரிசையில்தான் இருந்தார். ஆனால் ஜெயலலிதாவின் மறைவிற்கு பிறகு, எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரின் கை கட்சியில் ஓங்கியதால், செங்கோட்டையன் ஓரங்கட்டப்பட்டதாக சொல்லப்படுகிறது. இதனால் செங்கோட்டையன் அதிருப்தியில் இருந்து வந்ததாக சொல்லப்படுகிறது.
கொங்கு மண்டலத்தை சேர்ந்த எடப்பாடி பழனிச்சாமி முதல்வர் ஆக்கப்பட்டதிலும், கட்சியின் பொதுச் செயலாளர் ஆக்கப்பட்டதிலும் செங்கோட்டையனுக்கு பெரிதாக உடன்பாடு இல்லை என்றே சொல்லப்படுகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன் அதிமுக.,வில் இது பெரிய பிரச்சனையாக உருவெடுத்தது. கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டசபை தொடரின் போது எடப்பாடி பழனிச்சாமியை சந்திப்பதையும், அதிமுக எம்எல்ஏ.,க்கள் கூட்டத்தில் பங்கேற்காமலும் செங்கோட்டையன் தவிர்த்ததால் அவர் திமுக.,விற்கு செல்ல உள்ளார் என்று கூட பேச்சுக்கள் அடிபட்டது.
அதற்கு பிறகு கட்சியில் பிரச்சனைகள் பேசி சரி செய்யப்பட்டு விட்டதாக சொல்லப்பட்டது. தற்போது அதிமுக, 2026 சட்டசபை தேர்தல் வேலைகளை துவக்கி, பாஜக.,வுடன் கூட்டணியை அறிவித்து, எடப்பாடி பழனிச்சாமியை முதல்வர் வேட்பாளராகவும் அறிவித்து, அடுத்தடுத்த தேர்தல் பணிகளில் மும்முரம் காட்டி வருகிறது. இந்நிலையில் ஈரோடு கோபிச்செட்டிபாளையத்தில் உள்ள தன்னுடைய வீட்டில் இன்று தனது ஆதரவாளர்களை அழைத்து செங்கோட்டையன் ஆலோசனை நடத்தினார்.
பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், செப்டம்பர் 05ம் தேதி மனம் திறந்து பேசுவேன். அப்போது பல முக்கிய முடிவுகள் அறிவிக்கப்படும். அதுவரை அனைவரும் பொறுமை காக்க வேண்டும் என தெரிவித்தார். இதனால் அதிமுக.,வில் எடப்பாடி பழனிச்சாமி - செங்கோட்டையன் இடையேயான கருத்து வேறுபாடு இன்னும் தொடர்வதாக சொல்லப்படுகிறது. சமீபத்தில் பிரச்சாரத்திற்காக ஈரோட்டிற்கு எடப்பாடி பழனிச்சாமி வந்த போதும் அவரை சந்திக்காமல் செங்கோட்டையன் தவிர்த்ததாக சொல்லப்படுகிறது.
எடப்பாடி எதிர்ப்பாளர்கள் கை கோர்ப்பார்களா?
எடப்பாடி பழனிச்சாமி தன்னிச்சையாக செயல்படுகிறார். யாரையும் அரவணைப்பது இல்லை. கொங்கு மண்டலக் கட்சியாக அதிமுகவை சுருக்கி விட்டார், பெருந்தன்மை இல்லை என்று பல்வேறு புகார்கள் கட்சிக்குள்ளேயே உள்ளது. மேலும் ஓபிஎஸ், சசிகலா, டிடிவி தினகரன் என யாரையும் அண்ட விட மாட்டேன் என்றும் பிடிவாதம் பிடிக்கிறார்.
இது கூட்டணிக் கட்சிகளிடமும் கூட அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே தேமுதிகவும் எடப்பாடி பழனிச்சாமி மீது கடுப்பாக உள்ளது. இப்படி நாலாபக்கமும் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிர்ப்பு வலுத்து வருகிறது.
சமீபத்தில் செய்தியாளர் சந்திப்பின் போது தம்பிதுரையை பேச விடாமல் எடப்பாடி பழனிச்சாமி தடுத்ததால் அவர் முகம் சுளித்தது போன்ற விவகாரங்கள் உள்ளது. அது பரபரப்பையும் ஏற்படுத்தியது. தம்பிதுரை மூத்த தலைவர்களில் ஒருவர். கொங்கு மண்டலத்தைச் சேர்ந்தவர். அவரை எடப்பாடி இப்படி பொது வெளியில் நடத்தியிருக்க் கூடாது என்று விமர்சனங்கள் எழுந்தன.
இந்த சமயத்தில் செங்கோட்டையனும் அதிமுக தலைமை மீது அதிருப்தியில் இருப்பதை வெளிக்காட்டி உள்ளார். இதனால் அதிருப்தியில் இருக்கும் இவர்கள் அனைவரும் ஒன்று கூடி, தனி அணி உருவாக்குவார்களா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. செப்டம்பர் 5ம் தேதி செங்கோட்டையன் என்ன அறிவிப்பு வெளியிட போகிறார் என்ற எதிர்பார்ப்பு அதிமுக.,விற்குள் சலசலப்பையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.
ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் தொடங்கியது...எந்தெந்த பொருட்களின் விலை குறையலாம்?
கிடுகிடு வென உயர்ந்து புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை... இன்றும் சவரனுக்கு ரூ.640 உயர்வு!
ஓணம் வந்தல்லோ.. திருவோணம் வந்தல்லோ.. களை கட்டி வரும் கேரளத்து திருவிழா!
எப்போ தான் பாஸ் களத்துக்கு வருவீங்க?.. குமுறும் தவெக.,வினர்.. வேகம் காட்டுவாரா விஜய்?
"ஒவ்வொரு திருமணமும் சிறப்பானது".. கிரிஸில்டாவின் புகாருக்கு.. மாதம்பட்டி ரங்கராஜ் தந்த மறைமுக பதில்
அனிருத் இல்லாமல் இனி இயக்க மாட்டேன்.. லோகேஷ் கனகராஜ் அறிவிப்பால் ரசிகர்கள் குழப்பம்!
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் செப்டம்பர் 03, 2025... மகிழ்ச்சி அதிகரிக்க போகும் ராசிகள்
செப். 5ம் தேதி மனம் திறந்து பேசுவேன்.. செங்கோட்டையன் திடீர் அறிவிப்பு..அதிமுகவில் மீண்டும் சலசலப்பு
ஒன்றிணையாத அதிமுக.. ஓபிஎஸ்ஸைக் கண்டுக்காத இபிஎஸ்.. மீண்டும் சேர்க்காததற்கு இது தான் காரணமா?
{{comments.comment}}