சென்னை: காலங்கார்த்தால ஒரு வேலை இல்லாம.. அப்படின்னு ஒரு சினிமா பாட்டு இருக்குங்க.. கேட்டிருக்கீங்களா.. கொஞ்சம்.. ரொம்ப பழையப் பாட்டுதான்.. ஆனால் நல்லாருக்கும்.. ஆனா பாருங்க.. இப்படி வெயில் அடிச்சா எப்படிங்க பாட்டை ரசிக்க முடியும்.. கண்டிப்பா முடியாதுதான்.. !
அதுக்காகத்தான் ஈசியா மனசுல டைஜெஸ்ட் ஆகுற மாதிரி நாலு ஜோக்கை அள்ளிப் போட்டுக் கொண்டாந்திருக்கோம்..
வாங்க வந்து.. கெக்கே பிக்கேன்னு கொஞ்சம் சிரிச்சுட்டு போய் வேலைய பார்ப்போம்.
ராஜா : ஏ இங்க பாரு நிலா
ரோஜா: டேய் அது நிலா இல்லை சூரியன்
ராஜா: நல்லாப் பாரு.. அது நிலாதான்
ரோஜா: நீ நல்லாப் பாருடா.. சூரியன்தான்.. பளிச்சுன்னு தெரியுதா இல்லையா
ராஜா: இரு.. இந்தா ஒரு ஆன்ட்டி வர்றாங்க.. அவங்க கிட்டேயே கேப்போம்.. ஆன்ட்டி ஆன்ட்டி.. இது நிலாவா சூரியனா சொல்லுங்க ஆன்ட்டி.
ஆன்ட்டி: தெரியலையேப்பா.. நான் இந்த ஏரியாவுக்குப் புதுசு!
--
என்னங்க கம்ப்யூட்டருக்கு முன்னாடி உக்காந்து ஈன்னு சிரிச்சுட்டு இருக்கீங்க
மெயில் அனுப்பறேன்.
அதுக்கு ஏன் சிரிக்கறீங்க
"ஈ"மெயில் அனுப்பறேன்ல.. அதான்!
--
கல்யாணம் பண்ணிக்க முடியாத "காபி" ஒன்னு இருக்கு தெரியுமா
அது என்ன கல்யாணம் பண்ணிக்க முடியாது காபி.. புதுஸ்ஸா இருக்கே
லியோ காபிதான்
ஏன் அதை கல்யாணம் பண்ணிக்க முடியாது
அதுதான் ஏற்கனவே "மணமான காபி" ஆச்சே!
--
டீச்சர்: ராஜா உன்னோட ஹோம் ஒர்க்கை முடிக்க உன் அக்கா ஹெல்ப் பண்ணாளா
ராஜா: இல்லை டீச்சர்.. ஹெல்ப் பண்ணலை.. அதுக்குப் பதிலா அவளே செஞ்சு கொடுத்துட்டா!
--
அரண்மனைக் காவலன்: மன்னா.. எதிரி நாட்டு ராஜா மகாராணியாரின் அந்தப்புரத்துக்குள் நுழைஞ்சுட்டான்
மன்னன்: என்னாது.. அந்தப்புரத்துக்குள்ள வந்துட்டானா
காவலன்: ஆமாம் மன்னா.. இப்ப என்ன பண்றது மன்னா.
மன்னன்: உடனே மகாராணியின் மேக்கப்பை கலைத்து விடச் சொல்லுங்க.. வந்த எதிரி இங்கேயே அதிர்ச்சியில் செத்துருவான்!
இங்கிலாந்து சென்று தந்தை பெரியாரின் படத்தை திறந்து வைக்க போகிறேன்: முதல்வர் முக ஸ்டாலின் பெருமிதம்!
தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைக்க.. திமுக கையில் இருக்கும் 4 மேட்டர்!
டிரம்ப் வரியால் விபரீதம்..பங்குச் சந்தை முதலீட்டாளர்களுக்கு..2 நாட்களில் ரூ. 9.69 லட்சம் கோடி இழப்பு
அதிரடியாக ஒரே நாளில் 2 முறை உயர்ந்த தங்கம் விலை... சவரன் 76,000த்தை கடந்தது!
திராவிட அரசு பொய்யான, மோசடியான அறிவிப்புகளை வெளியிட்டு தமிழக மக்களை ஏமாற்றி வருகிறது: அன்புமணி!
கூட்டணி, விஜய் குறித்த கேள்வியை என்னிடம் கேட்காதீர்கள்: பிரேமலதா விஜயகாந்த் காட்டம்!
விஷால்- சாய் தன்ஷிகா நிச்சயதார்த்தம்...பிறந்தநாளில் எளிமையாக நடந்தது
திமுக - தேமுதிக கூட்டணிக்கு வேட்டு வைக்குமா.. தனலட்சுமி சீனிவாசன் கிட்னி முறைகேடு விவகாரம்?
Pillaiyar: விநாயகருக்கு பிள்ளையார் என்ற பெயர் வந்தது எப்படி?
{{comments.comment}}