எங்க பார்த்தாலும் ஒரே டென்ஷன், யாரைப் பார்த்தாலும் சண்டை போடறாங்க.. ஒரே வயலன்ட் வாழ்க்கையா போய்ட்டிருக்கு.. எல்லாத்துக்கும் என்ன ரீசன்னு.. ஒரு டிகாக்ஷன் கூடுதலா போட்ட காபியைக் குடிச்சபடி யோசிச்சப்பதான் தோணுச்சு.. நம்மாளுங்க பலரும், காமெடி சென்ஸ் குறைஞ்சு சீரியஸாவே இருக்கிறாங்கன்னு.. அதுக்குதாங்க இந்த ஜோக்ஸ்.. காலையிலேயே நாலு ஜோக்கைப் படிச்சுட்டு கலகலன்னு வேலையைப் பார்த்தா கொஞ்சம் கூலாகும்னு... நம்பறோம்.. ஆனீங்களா இல்லையாங்கிறது கமெண்ட்ல வந்து சொல்லுங்க!
கணவன்: தீபாவளிக்கு உங்களுக்கெல்லாம் ஆகுற செலவைப் பார்க்கிறப்போ எனக்கு ஒன்னு தோணுது
மனைவி: என்னா தோணுது
கணவன்: பேசாம நரகாசுரனை கிருஷ்ணர் மன்னிச்சு விட்டிருக்கலாம்னு தோணுது!

ராஜா : மச்சான்.. ஊட்டிக்கு ஒரு டிரிப் அடிக்கலாமான்னு நினைக்கிறேன்டா.. எவ்வளவு செலவாகும்.
காஜா: நினைச்சுதானே பார்க்கிறே.. அதுக்கெல்லாம் செலவாகாதுடா!
--
மனைவி: ஏங்க, நமக்கு கல்யாணம் செஞ்சு வச்ச புரோஹிதர் இறந்துட்டாராம்!
கணவன்: ஆண்டவன் இருக்காண்டி.. செஞ்ச பாவம் சும்மா விடுமா!
--
டாக்டர்: உங்களுக்கு உயிர் மேல நம்பிக்கை இருக்கா..
நோயாளி: அதெல்லாம் விட்டுப் போச்சு டாக்டர்.
டாக்டர்: வெரி குட்.. அப்படீன்னா இன்னிக்கே ஆபரேஷனை வச்சுக்கலாம்.
--
மனைவி: ஏங்க.. உங்க பிறந்த நாளுக்கு சூப்பரா டிரஸ் வாங்கிருக்கேன்.. தெரியுமா.
கணவன்: அடடே.. சூப்பர் டியர்.. எங்க கொண்டு வந்து காட்டு
மனைவி: கொண்டு வந்து என்ன .. இருங்க போட்டுட்டு வந்தே காட்டேறன்.
கணவன்: ????????
--

அவன்: ரூபாய் நோட்டுல காந்தி தாத்தா ஏன் சிரிச்சுட்டே இருக்கார்
இவன்: அழுத மாதிரி இருந்தா.. நோட்டு நனஞ்சிருமே!
--
கணவன்: ஏழு ஜென்மத்துக்கும் நீ தான்டா எனக்கு மனைவியா வரணும்.
மனைவி: அப்படீன்னா.. 8வது ஜென்மத்துல.. யார் கூட சேர்ந்து வாழ பிளான் போட்டிருக்க.. சொல்லு!
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
தலைவர் 173.. இயக்குநர் அவரா.. இசையமைப்பாளர் இவரா.. பரபரப்பு முடியலையே!
தமிழகத்தில் 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்!
என் நலம் விரும்பி. என்னுடைய கஷ்ட காலங்களில் எனக்கு துணையாக இருந்தவர் ஏவிஎம் சரவணன்: ரஜினிகாந்த்
அந்தப் பக்கம் பார்த்தாலும் மழை.. இந்தப் பக்கம் பார்த்தாலும் மழை.. டிப்ஸ் கேட்டுக்கங்க!
Kodaikanal calling.. ஏங்க.. எங்க ஊருக்கு வாங்க.. வெள்ளி அருவியில் தண்ணியா கொட்டுதுங்க!!
படிங்க.. படிங்க.. படிச்சுட்டே இருங்க.. கல்வியின் முக்கியத்துவம்!
எஸ்.ஐ.ஆர் படிவம் தொடர்பான ஓடிபி கேட்டு போன் வந்தால்.. உஷாரா இருங்க மக்களே!
நாளெல்லாம் ஹரிநாமம்.. மனமெல்லாம் மாதவஹரி.. நாவெல்லாம் கேசவஹரி!
புதுச்சேரியில் நாளை நடக்கவிருந்த தவெக தலைவர் விஜய்யின் பயணம் ரத்து
{{comments.comment}}